தாமரை மலர வாய்ப்பு இல்ல போல.. பிக்பாஸ் புரமோவை பார்த்து கடுப்பாகும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் தாமரையை வச்சு செய்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்று புரமோக்களுமே கண்ணீரும் கம்பளியுமாய் உள்ளது. தாமரை வைத்திருந்த காற்று காயினை ஸ்ருதி எடுத்ததால் கோபமாகியுள்ளார் தாமரை.
இதனால் ஸ்ருதியை துரோகம் செய்து விட்டாய் என்றும், பிள்ளையா நீ என்றும் வாய்க்கு வந்தப்படி திட்டியுள்ளார். இதனால் நொந்துப் போன ஸ்ருதி, தாமரை திட்டியதை எல்லாம் சொல்லி பிக்பாஸ் வீட்டில் அழுது கொண்டிருக்கிறார்.

விளாசும் நெட்டிசன்ஸ்
அவருக்கு துணையாக பாவனி ரெட்டியும் அழுது கொண்டிருக்கிறார். இந்த புரமோக்களை பார்த்த நெட்டிசன்கள் தாமரை செல்வியை திட்டி தீர்த்து வருகின்றனர். விளையாட்டு என்றால் எல்லோரும் ஜெயிக்கதான் பார்ப்பார்கள் அதற்காக தாமரை இப்படி அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறார் என விளாசி வருகின்றனர்.

எனக்கு பயம் வந்துருச்சு..
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், எனக்கு Game புரியல... எனக்கு பயம் வந்துருச்சு... ஒரு வராம் okay ரெண்டு வாரம் okay, சும்மா இதயே சொல்லிட்டு ஓட்டலாம்னு பாக்குது இந்தம்மா... என தாமரை செல்வியை விமர்சித்துள்ளார் இந்த நெட்டிசன்.

அரசியல் பேசுலப்பா..
இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஏற்கனவே தாமரைக்கு ஏன் ஓட்டு போட்டேனு ஃபீல் பண்ணிட்டு இருக்கேன்.. இப்போ இருக்க நிலைமைல தாமரைக்கு முடிவு பண்ணிட்டேன்... அட நிஜமா இதுல அரசியல் பேசுலப்பா நான்.. தாமரை செல்வி அக்காவதான் சொன்னேன்.. என பதிவிட்டுள்ளார்.

எபிசோட் ரிப்பீட்டு
ப்ரோமோ 1 அழுகாச்சி.. ப்ரோமோ 2 அழுகாச்சி.. ப்ரோமோ 3 அழுகாச்சி.. எபிசோடு ரிப்பீட்டு.. எண்ணமா தாமரை செல்வி, இப்படி பண்ணுறீங்களேமா.. அதுலேயும் இந்த பேக்கிரவுண்ட் மியூசிக்.. என கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

திருடும் முன் யோசித்திருக்கணும்
இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோவை திருடினால் திருடு போன ஆள் கடுப்பில் திட்ட தான் செய்வார்கள். அதுவும் கிராமத்து ஆட்கள் கோபத்தில் சாபம் கூட கொடுப்பார்கள். இதெல்லாம் தட்டு திருடும் முன்னாடி யோசித்து இருக்கணும். கண்ணீருக்கும் ஓட்டு உண்டு. அதனால கொஞ்சம் சிந்துங்க.. என பதிவிட்டுள்ளார்.

பாவம்னு பார்த்தா வில்லியா இருக்கும் போல
இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், தாமரைச்செல்வி அக்கா ஓவரா பண்ணுது பாவம்னு பார்த்தா அதுகும் வில்லியாதான் இருக்கும்போல.. என பதிவிட்டுள்ளார்.

நமக்கு தேவை தானா
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஸ்ருதி அழுறது பார்க்க கஷ்டமாதான் இருக்கு.. கேம் கரெக்ட்டா விளையாடுறாங்க.. தாமரை செல்வி இதெல்லாம் நமக்கு தேவை தானா, எதுக்கு இப்படில்லாம் பேசுறீங்க, பாவனி - நோ கமெண்ட்ஸ் என்று பதிவிட்டுள்ளார்.

அவருக்காக விளையாடுறத நிறுத்துங்க
இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பாவம் பாத்தீங்க நீங்கதான் பாவம் ஆகி போவீங்க, அதனால் ஹவுஸ்மேட்ஸ் அவருக்காக விளையாடுவதை நிறுத்துங்கள், அபிஷேக்தான் முதலில் அவருக்காக விளையாட ஆரம்பித்தது என பதிவிட்டுள்ளார்.

தாமரை மலர வாய்ப்பு இல்ல போல
இன்றைய புரமோக்களில் பிக்பாஸ் வீட்டில் தாமரை செல்வி செய்த அட்டகாசத்தை பார்த்த இந்த நெட்டிசன், தாமரை மலர வாய்ப்பு இல்ல போல என பதிவிட்டுள்ளார்.

அழ வைக்குறதே வேலை
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் பாவனியும் ஸ்ருதியும் அழுவதை பார்த்த இந்த நெட்டிசன், அழகான புள்ளைகளை அழுக வைக்குறதே இவங்களுக்கு வேலையா போச்சு.. என விஜய் டிவியை சாடியுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











