ஏகப்பட்ட பொய்... ஜூலி படிச்ச ஸ்கூல்ல பிரின்ஸிபல் போல இந்த அபிஷேக்... பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் அபிஷேக் நடந்து கொள்ளும் விதத்தை பார்க்கும் நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

யூட்யூபரான அபிஷேக் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். பங்கேற்ற நாள் முதலே அவரால் பார்வையாளர்கள் அதிகம் எரிச்சல் அடைந்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை இதுவரை பார்த்ததே இல்லை என்று கமலிடமே கூறினார். ஆனால் அது பச்சை பொய் என விளாசி வருகின்றனர் நெட்டிசன்கள்.

வெறியோடே சுற்றி வருகிறார்

வெறியோடே சுற்றி வருகிறார்

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு போட்டியாளராக தனித்தனியாக அழைத்து பேசும் அபிஷேக், உனக்கு தெரியாது.. ஆனால் அதான் நீ என்று ஒவ்வொரு போட்டியாளரிடமும் அவர்களூக்கே அவர்கள் மீது டவுட்டை வர வைக்கும் வகையில் காயை நகர்த்தி வருகிறார். எந்நேரமும் பிக்பாஸ் வீட்டுக்குள் ஏதோ பித்து பிடித்தது போல்.. நான் யார் என்று காட்டுகிறேன் என ஒரு வெறியோடே சுற்றி வருகிறார் அபிஷேக்.

என்னடா சொல்றான் இவன்

என்னடா சொல்றான் இவன்

சாதாரண விஷயத்துக்கெல்லாம் வயது வித்தியாசம் இல்லாமல், சின்னப்பொண்ணு, இமான் அண்ணாச்சி என எல்லோரிடமும் குரலை உயர்த்தியும், மரியாதைக் குறைவாக பேசி வருகிறார் அபிஷே. நேற்றைய எபிசோடில் ராஜுவை தனியாக அழைத்து மூளைச்சலவை செய்தார் அபிஷேக். எல்லாத்தையும் தலையை ஆட்டி ஆட்டி கேட்ட ராஜு, கடைசியாக என்னடா சொல்றான் இவன் என்றப்படியே இடத்தை காலி செய்தார்.

ஜூலி படிச்ச ஸ்கூல்ல பிரின்ஸிபல்

ஜூலி படிச்ச ஸ்கூல்ல பிரின்ஸிபல்

அபிஷேக்கின் அட்ராசிட்டியெல்லாம் பார்த்த ரசிகர்கள் அவரை எவ்வளவு சீக்கிரம் வெளியே அனுப்ப முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அனுப்புங்கள் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். அபிஷேக்கில் ஆட்டத்தை பார்த்த இந்த நெட்டிசன், ஜூலி படிச்ச ஸ்கூல்ல பிரின்ஸிபல் போல இந்த அபிஷேக் என பதிவிட்டுள்ளார்.

தயவு செஞ்சு வெளியே வந்துடு

தயவு செஞ்சு வெளியே வந்துடு

மற்றொரு நெட்டிசனான இவர், அபிஷேக் சத்தியமா முடியலடா.. நான் 4 சீசன்ல ஒரு ஒருத்தருக்கு ஃபேனா இருந்திருக்கேன்... ஆனால் ஹேட்டரா இதுவரைக்கும் இருந்ததில்லை... முதல் முறையா இந்த சீசன்ல... உனக்கு ஹேட்டரா இருந்துடுவேன் போல... தயவு செஞ்சு வெளியே வந்துடு என பதிவிட்டுள்ளார்.

எல்லோரையும் குழப்புகிறார்

எல்லோரையும் குழப்புகிறார்

மற்றொரு நெட்டிசனான இவர், அபிஷேக் ஒற்றை ஆளாக ஹவுஸ் மேட்டுகளையும் ஆடியன்ஸையும் குழப்பி வருகிறார் என பதிவிட்டுள்ளார்.

ரொம்ப எரிச்சலா இருக்கு

ரொம்ப எரிச்சலா இருக்கு

மற்றொரு நெட்டிசனான இவர்.. எப்பா... அபிஷேக்.. என்னடா சிம்பு மாதிரி பண்ற.. ரொம்ப எரிச்சலா இருக்கு என்று விளாசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X