சந்தில் சிந்துப்பாடிய அபிஷேக்..இப்போ எதுக்கு ஃபெமினிஸம்..மட்டமான போட்டியாளர் என விளாசிய நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் அக்ஷரா சிபி மீது கோபப்பட்ட நேரத்தில் ஃபெமினிஸம் பேசிய அபிஷேக் ராஜாவை விளாசி வருகின்றனர் நெட்டிசன்கள்.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் யூட்யூபர் அபிஷேக் ராஜா. பங்கேற்ற முதல் நாளில் இருந்தே மற்ற போட்டியாளர்களை விளையாட விடாமல் இன்ஃபுளுயன்ஸ் செய்து வந்தார்.
இதனால் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றப்பட்டார் அபிஷேக் ராஜா. இதனை தொடர்ந்து இரண்டாவது வாரமே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

டிவிஸ்ட் செய்யும் அபிஷேக்
இந்நிலையில் கடந்த வாரம் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டில் நுழைந்தார் அபிஷேக் ராஜா. பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததில் இருந்தே பழையபடி தனது வேலையை காட்டி வருகிறார். இமான் அண்ணாச்சியிடம் வேலையை காட்டிய அபிஷேக், தொடர்ந்து ஒவ்வொரு போட்டியாளர்களையும் டிவிட்ஸ்ட் செய்து வருகிறார்.

சிபி மீது கடும் கோபம்
நேற்றைய எபிசோடில் அக்ஷரா சிபி மீது கடுமையாக கோபப்பட்டு கத்தி தீர்த்தார். சிபியும் ராஜுவும் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார். அக்ஷரா ஆடிய ருத்ரதாண்டவத்தை பார்த்து ரசிகர்கள் மட்டுமின்றி ஹவுஸ்மேட்ஸும் ஆடிதான் போயினர்.

பெண்ணியம் பேசிய அபிஷேக்
அக்ஷரா உச்சக்கட்ட ஆத்திரத்தில் கத்திக்கொண்டிருந்த போது டைனிங் ஏரியாவில் நின்றுக் கொண்டு பெண்ணியம் பேசினார் அபிஷேக். அக்ஷரா செய்வது சரிதான் என்பதை போலவும் சிபியும் ராஜுவும் தான் தவறு என்பதை போல, பெண்களை வச்சுதான் இந்த உலகமே இயங்குகிறது. ஒரு பெண்ணுக்கு ஏற்றமாதிரி ஆண் தன்னை மாற்றிக்கொள்வதில் தவறில்லை.

அபிஷேக்கை விளாசும் நெட்டிசன்ஸ்
பெண்கள் இல்லாவிட்டால் ஆண்களுக்கு வேலையே இல்லை.
ஆண் வர்க்கத்திற்காக மோட்டிவேஷன் கொடுப்பது பெண்கள் தான்.
பெண்கள் இல்லா விட்டால் சமநிலை இல்லை உயிர் இனங்கள் இல்லை என கண்டதையும் உளறினார். இதனை பார்த்த நெட்டிசன்கள், அபிஷேக் ராஜாவை மோசமாக விளாசி வருகின்றனர்.

ஃபெமினிஸம் பேசுறவனை மட்டும்..
அபிஷேக் ராஜாவின் பர்ஃபாமன்ஸை பார்த்த இந்த நெட்டிசன், ஒரு பிரச்சனை அங்க போயிட்டு இருக்கு... சம்மந்தமே இல்லாம அபிஷேக் ஏன் ஃபெமினிஸம் பேசி கொளுத்தி விடுறான்... நார்மல் பர்சன கூட நம்பலாம் எல்லாத்துக்கும் ஃபெமினிஸம் பேசுறவனை மட்டும் நம்பவே கூடாதுன்னு சொல்றதுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இந்த அபிஷேக் என பதிவிட்டுள்ளார்.

அக்ஷரா வெடிச்சுட்டு..
அபிஷேக் பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், அக்ஷராவின் கோபம் நியாயப்படுத்துகிறாரா? இதை ஏத்திவிட்டதே நம்ம அபிஷேக்காக இருக்கலாம்.. அக்ஷரா கொஞ்சம் இரிட்டேட்டா இருந்தப்போ, சார்கிட்ட சொல்லிட்டு போங்கன்னு பத்த வச்சான், அக்ஷரா வெடிச்சுட்டு.. பண்றதையும் பண்ணிட்டு சாப்பாடு சர்வ் பண்ண போறான்... என கிழித்துவிட்டுள்ளார்.

ராஜுவ கோர்த்துவிடுறதெல்லாம் ஓவர்
அபிஷேக் பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், அக்ஷராவுக்கும் சிபிக்கும் நடந்த சண்டையில அபிஷேக் ஸ்கோர் பண்ண ட்ரை பண்றாரு.. அதிலேயும் ராஜுவ கோர்த்து விடுறதெல்லாம் ஓவர் என்று பதிவிட்டுள்ளார்.

போய் சைலன்ட்டா உட்காரு...
நேற்றைய எபிசோடில் அபிஷேக் பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், அபிஷேக் உண்மையாவே ஒரு கேவலமான, மட்டமான போட்டியாளர்.. ச்சை... அனைத்து சீசன்களிலும் வொர்ஸ்ட் பிளேயர்... ஒன்னு உண்மையாவே மோது.. இல்ல போய் சைலன்ட்டா உட்காரு... ஏதேதோ பண்ணி ஏத்தி விடாதே என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











