Don't Miss!
- Automobiles
டாடாவின் இந்த கார் மாடல்களில் பெட்ரோல் தேர்வை வாங்க முடியாது.. டீசலில் மட்டுமே கிடைக்கும்! இது ஏன் தெரியுமா?
- News
நாய்க்கு கூட சொத்தில் பங்குண்டு.. ஆனால் ட்ரம்ப்புக்கு இல்லை..முதல் மனைவி இவானா எழுதிய உயில் ரகசியம்
- Lifestyle
Today Rasi Palan 26 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது...
- Sports
மகளிர் ஐபிஎல் - சென்னை மிஸ் ஆனது எப்படி தெரியுமா? யார் எவ்வளவு தொகை கேட்டாங்க
- Finance
கூகுள் ஊழியர்கள் சம்பளம் கட்.. சுந்தர் பிச்சை அடுத்த அதிரடி..!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
வெட்கமே இல்லை... ஊருக்குதான் உபதேசம் போல... பாவனியிடம் கடலை போடும் அமீரை விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அமீர், சக போட்டியாளரான பாவனியிடம் கடலை போடுவதை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக பங்கேற்றிருப்பவர் அமீர். பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தது முதலே பாவனியிடம் நெருக்கமாக இருந்து வருகிறார்.
திருமண
வாழ்க்கை
முறிவு…
மன
அழுத்தம்...
சமந்தாவை
கைவிட்ட
2021
!
பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததுமே அபினய் பழகும் விதம், அவர் மீது ஏதோ ஃபீலிங்ஸ் இருப்பதாக தோன்றுகிறது என பாவனியிடம் பேசினார் அமீர். இதன் தொடர்ச்சியாக இருவருக்கும் இடையிலான ரிலேஷன்ஷிப் குறித்து குறும்படம் போடும் அளவுக்கு பஞ்சாயத்தானது.

சகோதரர் இல்லை
ஆனால் அதன்பிறகு பாவனியிடம் ரொம்பவே நெருக்கமாகிவிட்டார் அமீர். பாவனி அவரை சகோதரர் என்றாலும் அதனை ஏற்றுக்கொள்வதில்லை அமீர். தன்னை தவிர மற்ற அனைத்து இந்தியர்களும் அவருக்கு சகோதரர்கள் என்று வெளிப்படையாக கூறினார்.

இவ்ளோ அழகாய் பார்த்ததில்லை
எப்போதும் பாவனியின் அழகை புகழ்ந்து பேசுவதும் அவருடன் நெருக்கமாக இருப்பதையுமே வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் பாவனி சேலை அணிந்து வந்ததை பார்த்து யாரையும் இவ்ளோ அழகாய் பார்த்ததில்லை என்று பாடினார்.

பாவனியிடம் ஃபிளிர்ட்
மேலும் பிரியங்காவை அத்தை என அழைத்து பாவனிக்கு ரூட்டு போட்டார். அதனை பிரியங்காவும் என்ஜாய் செய்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அபினய் பேசியதை மட்டும் பெரிது படுத்திவிட்டு இப்போது ஏன் அமீரே பாவனியிடம் ஃபிளிர்ட் செய்து வருகிறார் என விளாசி வருகின்றனர். மேலும் அவர் பாவனியிடம் வழிவதை பார்க்க முடியவில்லை, முதலில் அவரை வெளியே அனுப்புங்கள் என்றும் கூறி வருகின்றனர்.

தவறாக தெரிகிறது..
அமீர் பாவனியிடம் நெருங்கி பழகுவதை பார்த்த இந்த நெட்டிசன், நான் சிபியின் ரசிகனாக இருந்தபோதும் அமீர் பாவனியிடம் நெருக்கமாக இருப்பது எனக்கு பிடிக்கவில்லை. அவருடைய நோக்கம் தவறாக தெரிகிறது. அவர் பாவனியிடம் பேசும் விதம்... பாவனி ரசிகர்கள் இதை எப்படி தாங்கிக்கொள்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. உண்மையில் இது பாவனிக்கு நல்லதல்ல.. அமீரை விட அபினய் எவ்வளவோ பரவாயில்லை என பதிவிட்டுள்ளார்.

வெட்கம் இல்லாதவர்
நேற்றைய எபிசோடில் அமீர் பாவனியிடம் வழிந்ததை பார்த்த இந்த நெட்டிசன், வீட்டுக்குள் அமீரின் ஃபிளிர்ட்டிங்கை காட்டுவதற்கு பதில் சிபி மற்றும் நிரூப்பின் காட்சிகளை காட்டலாம். உண்மையிலேயே அமீரை பார்க்க மிகவும் இரிட்டேட்டிங்காக உள்ளது. வெட்கம் இல்லாதவர், எதற்காக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார் என்று தெரியவில்லை. பாவனிய ஃபிரியா விடவே மாட்றான். இப்போதோன் ஒரு பிரச்சனை முடிந்தது. புதிய ட்ராக்கை ஆரம்பித்துவிட்டான் என்று பதிவிட்டுள்ளார்.

ஊருக்குதான் உபதேசம் போல
அமீர் ஒருமுறை நண்பரின் இமேஜை மேலும் எந்த வகையிலும் கெடுக்க மாட்டேன் என்று கூறினார், ஆனால் அவர் இன்னும் பாவ்னியுடன் இதுபோன்ற மோசமான உரையாடலைத் தொடர்கிறார். ஊருக்குதான் உபதேசம் போல என விளாசியுள்ளார்.

இது பிடிக்கவில்லை..
இந்த அயோக்கியன் அமீருக்கு யார் ஓட்டு போடுவது?? அவர்கள் மனிதர்களாக இருக்க முடியாது, வேற்று கிரகங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இந்த காதல் மன்னனை விட வருண் எவ்வளவோ பெட்டர். அமீர் பொது இடத்தில் ஒரு பெண்ணின் பின்னால் சுற்றுவதை மக்கள் ஊக்குவிக்கிறார்களா? பாவனிக்கு கூட இது பிடிக்கவில்லை.. எரிச்சல் அடைகிறார் என பதிவிட்டுள்ளார்.

மக்களுக்கு இல்லை
பிக்பாஸ் வீட்டில் அமீர் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்த இந்த நெட்டிசன், இந்த வாரம் அமீர் எலிமினேட் ஆனால் அவருக்கு நல்லது. இல்லாவிட்டால் ஹவுஸ்மேட்ஸ் முன்பு இதை ஒரு பிரச்சனை ஆக்கிவிடுவார். அமீரை அறைந்தாலும் அறையலாம்.. இன்னொரு டிராமா பார்க்கும் சக்தி மக்களுக்கு இல்லை... என பதிவிட்டுள்ளார்.