அடேய்.. இது தண்டனையா... தீர்ப்ப கொஞ்சம் ஏத்தி சொல்லு... பிக்பாஸ் புரமோவால் காண்டாகும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றவாது புரமோவை பார்த்த நெட்டிசன்சன்கள் கடுப்பாகியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கான ஊரு விட்டு ஊரு வந்து டாஸ்க்கில் ஈடுபாடு குறைவாக இருந்த இரண்டு போட்டியாளர்களை தேர்வு செய்யுமாறு கூறினார் பிக்பாஸ்.
நகரத்தினர் குழுவின் தலைவரான நிரூப் தனது குழுவில் இருந்து பவானி ரெட்டியின் பெயரை கூறினார். கிராமத்தினரின் தலைவரான அக்ஷரா ரெட்டி மதுமிதாவின் பெயரை கூறினார்.

அடுத்த டிராமா குயின்
இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அக்ஷரா ரெட்டிக்கு அவங்க சேஃப்பா ப்ளே பண்ணனும்ங்குறதுக்காக மது பெயரை சொல்லி விட்டார். அடுத்த டிராமா குயின் அக்ஷரா ரெட்டி என பதிவிட்டுள்ளார்.

பழி வாங்கும் நிரூப்
இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நாமினேஷன் புராசஸில் பாவனி, நிரூப்பை நாமினேட் செய்ததற்காக பழி வாங்குகிறார் என்று நினைக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

தினம் தினம் அடிச்சுக்கோங்க
இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அடேய் பிக் பாஸ் நல்லா பண்ணுற மேன்.. நீ முதல் எல்லாம் வாரா வாரம் தான் ஒர்ஸ்ட் & பெஸ்ட் பர்ஃபார்மர் செலக்ட் பண்ண சொல்லிட்டு நீ எஸ்கேப் ஆயிட்டு கண்டெஸ்டண்ட சண்டை போட விட்டு வேடிக்கை பார்ப்ப. இப்போ தினமும் அடிச்சிக்கோங்கடானு சொல்லாம சொல்லுற போல.. என பதிவிட்டுள்ளார்.

மிக்ஸர் மதுமிதா
இன்றைய மூன்றாவது புரமோவில் பாவனிக்கும் மதுமிதாவுக்கும் தண்டனை கொடுக்கப்பட்டதை பார்த்த இந்த நெட்டிசன், டிராமா குயின் பாவனி மற்றும் மிக்ஸர் மதுமிதா என்றும் மது கேப்டன்ஸி வேஸ்ட் என்றும் பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

சவால் நிறைந்த டாஸ்க்
இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நீங்கள் கிரியேட்டிவ் டீம்முக்கு புதிதாக ஆள் எடுத்துள்ளது தெரிகிறது. இது போன்றே செல்லுங்கள்... கடுமையான தண்டனையும் சவால் நிறைந்த டாஸ்க்குகளையும் கொடுங்கள் என கூறியுள்ளார். மேலும் முடிந்தால் உங்கள் எடிட்டரையும் மாற்றி விடுங்கள், புரமோவுக்கும் எபிசோடுக்கும் சம்மந்தமே இல்லாமல் புரமோ போடுகிறார் என பதிவிட்டுள்ளார்.

கொஞ்சம் ஏத்தி சொல்லு!
இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், தண்டனை பத்தலை.. தீர்ப்ப இன்னும் கொஞ்சம் ஏத்தி சொல்லு! தீ சட்டியை கையில் ஏந்தி நிக்க சொல்லுங்க என பதிவிட்டுள்ளார்.

ஏதோ கேம்ப் ஃபையர் மாதிரி
அடேய் இது பனிஷ்மென்ட்டா.. ஏதோ கேம்ப் ஃபையர்ல இருக்க மாதிரி இருக்குடா... பாவனி அவரின் விளையாட்டை பற்றி யோசிக்க இடம் கொடுக்க வேண்டும் (அழுகாம இருந்தா சரி) மதுமிதா தூங்காதடா தங்கம்.. என பதிவிட்டுள்ளார்.

நைட்டு ஃபுல்லா இதை பத்தியே..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இரவு முழுவதும் நெருப்பு மூட்டனும்னு சொல்லிட்டு நீங்க இப்பவே மூட்டி விட்டுட்டீங்களே.. பலே ஆளுயா நீ பிக்பாஸ்... அதுவும் இவங்க ரெண்டு பேரா... அப்போ நைட்டு ஃபுல்லா இதை பத்தியே பேசிட்டு இருப்பாங்க. அடுத்த ஆடு நிரூப் தான்.. என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











