அபிஷேக்கை காப்பாற்ற கொடுக்கப்படும் வில்லத்தனமான டாஸ்க்.. புரமோவால் காண்டாகும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் செம காண்டாகியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வழக்கமான நேரத்தை காட்டிலும் இன்று சற்று தாமதமாகதான் வெளியானது.

அதில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக பஞ்ச தந்திரம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பிக்பாஸ் வீடு அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது.

நாமினேஷனில் இருந்து தப்பிப்பார்

நாமினேஷனில் இருந்து தப்பிப்பார்

இதில் விலை மதிக்க முடியாத 5 நாணயங்கள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவற்றை பாதுகாக்க வேண்டியது ஹவுஸ்மேட்டுகளின் கடமை. இதனை எடுக்கும் போட்டியாளர்கள் அதனை உடனுக்குடன் பிக்பாஸிடம் காட்ட வேண்டும். நாணயத்தை கைப்பற்றும் போட்டியாளர் நாமினேஷனில் இருந்து தப்பிப்பார்.

பரிதாபமாக உள்ளது

பரிதாபமாக உள்ளது

இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த வார நாமினேஷனில் இடம் பெற்றுள்ள அபிஷேக்கை காப்பாற்ற பிக்பாஸ் இந்த மாதிரியான ஒரு டாஸ்க்கை கொடுத்திருப்பதாக நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் பதிவிட்டிருப்பதாவது, ஆமா எப்பவும் 9 மணிக்கு வருகிற பிக்பாஸ் புரமோஷன்.. இன்னிக்கு 10 மணிக்கு வருது.. புரிஞ்சு போச்சு... பாவம் பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்துபவர்கள் நிலை.... பரிதாபமாக உள்ளது!! என பதிவிட்டுள்ளார்.

கண்டென்டே அவன்தானே!

கண்டென்டே அவன்தானே!

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், வேண்ணா பாரு!.. அபிஷேக்கு வெளியே போக மாட்டான்! இப்போதைக்கு கண்டென்டே அவன்தானே! என பதிவிட்டுள்ளார்.

இம்சை அதிகமாகிட்டே போகுது

இம்சை அதிகமாகிட்டே போகுது


புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த போண்டா வாயனோட போண்டா கேங்கோட இம்சை நாளுக்குநாள் அதிகமாகிட்டே போகுது.. தாங்க முடியல என அபிஷேக் ராஜாவை விளாசியுள்ளார். மேலும் ராஜு மோகன் ஸ்மார்ட்டாக விளையாடுகிறார் என்றும் பதிவிட்டுள்ளார்.

ஐடியா பண்ணிட்டாங்க

ஐடியா பண்ணிட்டாங்க

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் அபிஷேக்கை காப்பாற்ற பிக்பாஸ் ஐடியா பண்ணுவதாக கூறியுள்ளார். எப்படியும் இந்த டாஸ்க்கில் அபிஷேக் ஒரு நாணயத்தை எடுத்துவிடுவார் என்பதால் இப்படி பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

 ரொம்ப வேஸ்ட்!

ரொம்ப வேஸ்ட்!

இன்றைய முதல் புரமோ தாமதமாக வந்ததை பார்த்த இந்த நெட்டிசன், புரோமா ரொம்ப லேட்டு! காரணம் கண்டெஸ்ட்டுகள் ரொம்ப வேஸ்ட்! என மரணமாய் கலாய்த்துள்ளார்.

வழக்கம் போல் சத்தம் போட்டு

வழக்கம் போல் சத்தம் போட்டு

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த டாஸ்க்கில் வெல்பவர் நாமிநேஷனில் இருந்தால்... என்று அண்ணாச்சி ஏதோ சொல்ல வந்தார்... அதற்குள் பிக்பாஸ் உரிமையாளர் பிரியங்கா வழக்கம் போல் சத்தம் போட்டு

என்னவென்றே புரியவில்லை... இந்த வாரம் தப்பிக்கலாம் என்றா அல்லது அடுத்த வார நாமினேஷனில் இருந்து எஸ்கேப் என்றா ???? என பதிவிட்டுள்ளார்.

திட்டு வாங்க போறாரோ பாவம்..

திட்டு வாங்க போறாரோ பாவம்..

இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இப்போ இதுல அபிஷேக் தப்பிச்சா மக்களிடம் பிக்பாஸ் எப்படி எல்லாம் திட்டு வாங்க போறாரோ பாவம்.. என பிக்பாஸுக்காக பரிதாபப்பட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

பிக்பாஸ் வைக்குற ஆப்பு..

பிக்பாஸ் வைக்குற ஆப்பு..

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இது எங்களுக்கு பிக்பாஸ் வைக்குற ஆப்பு.. அபிஷேக்கை காப்பாற்ற பண்ற வில்லத்தனமான டாஸ்க் என பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X