என்னய்யா பட்டுன்னு இப்படி சொல்லிட்டிங்க.. தாமரை கேரக்டரை தவறாக பேசிய சிபி.. கொதிக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் சிபியை விளாசி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோவில் பிக்பாஸ் வீட்டில் பட்டணமா பட்டிக்காடா என்ற தலைப்பில் விவாத மேடை நடைபெறுகிறது.
இதில் பேசும் தாமரை, ஸ்ருதியின் ஆடையை குறித்து பேசினார். ஸ்ருதி அணியும் உடை தனக்கு பிடிக்கவில்லை என கூறினார்.

நீங்க அடக்கமா இருக்கீங்களா?
இதனை பார்த்த சிபி , நீங்க அடக்கமா இருக்கீங்களா என கேட்கிறார். இதனால் நொந்துப்போன தாமரை நான் என்ன அப்படி அடக்கம் இல்லாமல் இருக்கிறேன் என்று கேட்டு வேதனைப்படுகிறார். இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள் சிபியை விளாசி வருகின்றனர்.

ஸ்ருதிக்கு பதில்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நீங்க போடுற டிரெஸ் புடிக்கலன்னு சொல்றது அவங்க ஒபினியன்.. எடுத்துக்குங்க இல்ல விட்டுடுங்க.. ஆனா சொல்லவே கூடாதுன்னு சொல்ல முடியாது.. சிலர் ஐக்கி முடியின் கலர் குறித்து பேசினார்கள். எடுத்துக்கொள்ளுங்கள் இல்லையெனில் விட்டுவிடுங்கள்... ஒப்பினியன் சொல்லப்பட்டது. ஆனால் ஸ்ருதிக்கு பதில் சிபி பேசுகிறார்.. நிகழ்ச்சியை பார்ப்போம் என கூறியுள்ளார்.

பெரிய வார்த்தை
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், தாமரை ஸ்ருதியுடன் ஏற்கனவே பிரச்சனை உள்ளது. இந்த நேரத்தில் அவருடைய உடையை பத்தி பேச வேண்டிய தேவை இல்லை. அவர் தன்னுடைய வெறுப்பை வெளிப்படுத்துவது போல் உள்ளது. ஆனால் சிபி அடக்கம் என்ற பெரிய வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். அவரை குறை சொல்ல முடியாது தாமரை செல்விதான் முதலில் பர்சனலாக பேசினார் என பதிவிட்டுள்ளார்.

கேரக்டர் குறித்து விமர்சனம்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், தாமரை ஸ்ருதியின் உடையை பிடிக்கவில்லை என்று கூறினார். ஆனால் சிபி தாமரை செல்வியின் கேரக்டரை விமர்சித்துள்ளார். விவாதத்துக்கு உடை, உணவு என எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசலாம்.. அது அவருடைய உரிமை.. பெரும் வித்தியாசம்.. அவருக்கு டிரெஸ் பிடிக்கவில்லை.. அவருக்கு பீஸாவும் பிடிக்காமல் போகலாம்.. என பதிவிட்டுள்ளார்.

ஏன் அடக்கம்?
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், தாமரை செல்வி புடிக்கலன்னு சொன்னது ஒன்னும் தப்பில்ல. அது அவருடைய ஓபினியன். ஆனால் ஏன் சிபி அடக்கம் என்ற வார்த்தையை பயன்படுத்தினார்? ஆகையால் அவர் வேறு ஏதோ பேசியிருக்கிறார்? எப்படியோ இது விவாதம், விவாதத்தை டைனிங் டேபிள் வரை கொண்டு செல்வது சரியல்ல.. எபிசோடை பார்க்கலாம் என பதிவிட்டுள்ளர்.

இரண்டு பேருமே தவறு
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், துணிக்கும் அடக்கத்துக்கும் என்ன சம்பந்தம்? சிபி என்னய்யா இப்படி கேட்டுட்ட.. தாமரை சிபியிடம் அடக்கம் பற்றி ஏதாவது பேசினாரா? எடிட்டர் விளையாடுறனோ ஆனால் தாமரை ஒருவரின் உடை குறித்து பேசக்கூடாது. இந்த புரமோவின் படி இரண்டு பேருமே தவறுதான் என குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி கேட்பது தவறு..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், சிபி ஓபினியன் சொல்லவில்லை. தாமரையின் கேரக்டர் குறித்து அவர் கேள்வி கேட்கிறார். ஒருவரின் கேரக்டரை கேள்வி கேட்பது தவறு.. சிபி பேசியது தவறு என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











