பழிவாங்குற புத்தி... சிபி தேவையில்லாம பேரை கெடுத்துக்குறீங்க... வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் சிபி தேவையில்லாமல் மூக்கை நுழைத்து பெயரை கெடுத்துக் கொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றயை எபிசோடில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் போது, வருண், நிரூப் மற்றும் அக்ஷரா ஆகியோருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது.
அதுகுறித்து அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தேவையே இல்லாமல் கூடாரத்துக்குள் நுழைந்த சிபி, நிரூப்புக்கு சப்போர்ட் செய்வதாக கூறி, அக்ஷராவிடம் எகிறினார்.

கெட்ட வார்த்தை
குறிப்பாக பால் கறக்கும் டாஸ்க்கின் போது நடந்த சம்பவங்களை கூறி அக்ஷராவை டார்கெட் செய்தார். அப்போது அவசியமே இல்லாமல் கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தினார் சிபி. இதனால் டென்ஷனான அக்ஷரா பதிலுக்கு குரலை உயர்த்தி சண்டை போட்டார்.

பெயரை கெடுத்து கொள்கிறார்
இதனை பார்த்த நெட்டிசன்கள் சிபியை வச்சு செய்து வருகின்றனர். நேற்றைய எபிசோடை பார்த்த இந்த நெட்டிசன், சிபி நிரூப்புக்கு சப்போர்ட் செய்து தேவையில்லாமல் பெயரை கெடுத்து கொள்கிறார் என பதிவிட்டுள்ளார்.

பால் கறக்கும் டாஸ்க்
நேற்றைய எபிசோடை பார்த்த இந்த நெட்டிசன், ஈகோ பிடித்த சிபி வேண்டும் என்றே பால் கறக்கும் டாஸ்க்கை எடுத்து வந்துள்ளார். மேலும் டீம் டாஸ்க், இன்டிவிஜுவல் டாஸ்க் என ஒப்பிட முயற்சிக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.

இது வேறு கேம்
நேற்றைய எபிசோடை பார்த்த இந்த நெட்டிசன், நிரூப் நீ மோசம், கேம் என்றாலும் நியாயம் வேண்டும். நான் அக்ஷராவுக்குத்தான் சப்போர்ட் செய்வேன்... சிபி புரோ உங்களுக்கு இந்த கேம் புரியவில்லை. இது வேறு கேம். உங்களின் பழிவாங்கும் எண்ணம் தெளிவாக தெரிகிறது என்று பதிவிட்டுள்ளார்.

தேவையில்லாத ஆணி
மற்றொரு நெட்டிசனான இவர், நிரூப் கேட்கிறார், வருண் நீ பொம்பளக்கிட்ட கொடுத்து வச்சிருக்கன்னு.. அசிங்கமா இல்ல.. அவர் ஏன் ஐக்கியுடன் டீல் வைத்தார்? ஐக்கி பெண் இல்லையா? சிபி நீங்க தேவையில்லாத ஆணியை பிடுங்கீட்டிங்க என்று பதிவிட்டுள்ளார்.

ஈகோ பிரச்சனை இருக்கு
சிபி ஃபுல்லா பேக்கேஜ் மற்றும் தனிப்பட்ட பழிவாங்கும் உணர்வை காட்டுகிறார்... சிபியும் நிரூப்பும் ஒரே மாதிரியான கேரக்டர்தான் ஆம்பள பொம்பள ஈகோ பிரச்சனை இருக்கு என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











