எல்லாருக்கும் பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேணுமா? மூன்றாவது புரமோவை பார்த்து விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் சிபி உட்பட அனைத்து ஹவுஸ் மேட்டுகளையும் விளாசி வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் இன்று முதல் ஃபினாலேவுக்கான ரேஸ் தொடங்கியுள்ளது. இதில் போட்டியாளர்கள் தங்களுக்கான ரேங்கை கொடுத்துக் கொள்ள வேண்டும்.
இதில் அனைத்து போட்டியாளர்களுமே நம்பர் ஒன் இடத்திற்கு போட்டியிடுகின்றனர். இதனால் ஹவுஸ்மேட்டுகளுக்கு இடையே பெரும் வாக்குவாதம் ஏற்படுகிறது.

பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேண்டுமா?
இந்நிலையில் இன்றைய புரமோக்களை பார்த்த நெட்டிசன்கள், ஹவுஸ்மேட்டுகளை விளாசி வருகின்றனர். அந்த வகையில் இந்த நெட்டிசன், அங்க ஒன்னு இரண்டாவது இடத்தில் சேஃப்பா உட்கார்ந்து இருக்கு. அதுகிட்ட எவனும் ஆர்க்யூ செய்து இறங்கிவர செய்ய முடியல. எல்லாருக்கும் பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேண்டுமா? இந்த சீசன் முடியும் வரை பாவனியை எந்த ஆர்க்யூமென்டுக்குள்ளும் இழுத்து வரவேண்டாம். இன்னொரு பஞ்சாயத்தை பாக்க முடியாது. போதும் என பதிவிட்டுள்ளார்.

அடிச்சுக்க கொடுக்ற டாஸ்க்
இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் முதலில் சேவ் ஆனதால் தம்பி சிபி கொஞ்சம் கெத்து காட்றாப்ல... முதல்ல சேவ் ஆகி ஆட்டியூட் காட்டி 3 வாரத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணு வெளியில போச்சு... இந்த ஃபர்ஸ்ட் செகண்ட்லாம் பிக்பாஸ்ல எல்லாரும் அடிச்சுக்க கொடுக்கிற டாஸ்க் அவ்ளோதான் என பதிவிட்டுள்ளார்.

முதல்ல முடிவு பண்ணுங்க..
இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நீங்க எந்த நம்பரில் ஏறி உட்கார்ந்தாலும் மக்கள் வாக்களித்தால் தான் டைட்டில். அதுக்கு மக்கள் மனதில் இடம் பிடிக்க எதையாவது செய்யுங்கள். இப்படி பிரியங்கா மாதிரி கத்திட்டே இருந்தா எங்களுக்கு கடுப்பு தான் வரும். பாவனியா பவானியான்னு முதல்ல முடிவு பண்ணுங்க அமீர்... என கலாய்த்துள்ளார்.

விதை இராஜு போட்டது
இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இப்போ யாரு வேணா பாவனிய சம்பந்தம் இல்லாம இழுத்துப் பேசலாம் என்கிற நிலைமை. ஆனால் இதுக்கான விதை இராஜு போட்டது. பாவனி இன்ட்ரெஸ்ட் இல்லாமல் இருப்பார் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

ஃபர்ஸ்ட் ஃப்ளேஸ் வேற
இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், சிபி உள்ள இருக்கற பொண்ணுங்க எல்லாரையுமே தப்பான கண்ணோட்டத்திலதான் பார்க்குற எப்பவுமே.. இதுல வேற உனக்கு ஃபர்ஸ்ட் ஃப்ளேஸ் வேற என விளாசியுள்ளார்.

ரொம்ப காமெடியா இருக்கு
இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அர்ரே சிபி பாய்... நீங்களும் ராஜு பாய்யும் கொஞ்சம் பாவனி பேர் யூஸ் பண்ணாம விளையாடுங்க... இன்னும் உங்களுக்கு அவருடைய பெயர்தான் தேவைப்படுகிறது.. ரொம்ப காமெடியா இருக்கு நீங்க பேசுறது என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











