ஏகப்பட்ட பீப் சவுண்டு... டயலாக்ஸ்லாம் மியூட்.. நிரூப் ரொம்ப சீப்... விளாசி தள்ளிய நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் நிரூப் விளையாடிய விதத்தை பார்த்த நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விளாசி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக நீயும் பொம்மை நானும் பொம்மை தெரியும் உண்மை என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இதில் ஒவ்வொரு போட்டியாளருமே மற்றவர்களுக்காக விளையாடினார்கள். இந்த போட்டியில் நிரூப் விளையாடிய விதத்தால் மொத்த கேம்மும் ஸ்பாயில் ஆனது.

ஏகப்பட்ட பீப் சத்தம்
ஆட்டத்தின் ஸ்பிரீட்டை குறைத்ததோடு தேவையில்லாமல் வார்த்தைகளையும் விட்டார் நிரூப். இதனால் கடுப்பான நெட்டிசன்ஸ் சமூக வலைதளங்களில் நிரூப்பை திட்டி தீர்த்தனர். நேற்றைய எபிசோடை பார்த்த இந்த நெட்டிசன், அக்ஷரா ராக்கிங்... நிரூப்புக்கும் சிபிக்கும் நல்லா திருப்பி கொடுத்தார். இன்று ஏகப்பட்ட பீப் சத்தம்.. பாவனி வீட்டில் இருக்கிறாரா என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

நிரூப் மோசம்..
நிரூப் விளையாடியதை பார்த்த இந்த நெட்டிசன், ப்யூர் மேன் ஹேண்ட்லிங்... நிரூப் மோசம்.. தள்ளுவது வேறு... அக்ஷராவை பிடித்துக்கொண்டார்.. சிபி ரொம்ப டிஸ்அப்பாயிண்ட் பண்றாரு... அந்த இடத்தில் வெறுப்பை காட்ட வேண்டிய அவசியம் உள்ளதா என்று கேட்டுள்ளார்.

நல்லதுக்காக கர்ஜித்தார்..
டாஸ்க்கில் நிரூப் விளையாடியதை பார்த்த இந்த நெட்டிசன், வருண் அதிகமாக கத்திவிட்டார்.. அவர் இன்று மிகவும் வலிமையாகவும் அசாதாரணமாகவும் இருந்தார். வருண் நல்ல காரணத்திற்காக கர்ஜித்தார். நிரூப் தனது ஆட்டத்தை விளையாடிய விதம் மலிவானது மற்றும் அவரது அக்கிரமத்தை வெளிப்படுத்தியது என பதிவிட்டுள்ளார்.

விவேகம் அவசியம்
நிரூப்பின் விளையாட்டை பார்த்த இந்த நெட்டிசன், கேம்ல ஸ்ட்ரேட்டஜி போட்டு ஜெயிக்கணும்னு நினைக்கிற அந்த வேகம் வெறித்தனம் எனக்கு பிடிச்சுருக்கு.. சூப்பர்... ஆனா ஒரு விளையாட்டுக்காக என்ன வேணும்னாலும் பண்ணலாம்னு நினைக்கிறது பிடிக்கல.. வேகம் மட்டும் பத்தாது விவேகமும் அவசியம் என பதிவிட்டுள்ளார்.

நிரூப் மோசமாக விளையாடினார்
நேற்றைய எபிசோடை பார்த்த இந்த நெட்டிசன், நிரூப் முற்றிலும் கேவலமான கேம் விளையாடினார். வேடிக்கை செய்வதற்குப் பதிலாக தேவையில்லாமல் ஆக்ரோஷமாக இருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.

நிரூப் வின் பண்ணக்கூடாது
நேற்றைய எபிசோடை பார்த்த இந்த நெட்டிசன், இந்த டாஸ்க்ல யாரு வின் பண்ணாலும் எனக்கு ஓகே பட் இந்த நிரூப் மட்டும் வின் பண்ணவே கூடாது என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications