மேன் ஹேண்டிலிங் செய்கிறார் நிரூப்... பிக்பாஸ் புரமோ.. அக்ஷராவுக்கு ஆதரவாக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் நிரூப்பை விளாசி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் அக்ஷராவை நிரூப் விளையாட விடாமல் கட்டிப்பிடித்து தடுக்கிறார். இதனால் கடுப்பாகும் அக்ஷரா நீங்கள் என்னை இப்படி தடுக்கக்கூடாது என கூறி நிரூப்பிடம் வாக்குவாதம் செய்கிறார்.
இதில் தலையிடும் சிபி, பால் கறக்கும் டாஸ்க்கின் போது அக்ஷரா விளையாடியதை சுட்டிக் காட்டி நீ மட்டும் செய்யலாம் மற்றவர்கள் செய்யக்கூடாதா என நிரூப்புக்கு ஆதரவாக பேசுகிறார். இதனால் கோபமாகும் அக்ஷரா, அறிவில்லையா என கேட்டு கத்துகிறார்.

மேன் ஹேண்ட்லிங்...
இந்நிலையில் இந்த மூன்றாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள், நிரூப் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்றும் இது மேன் ஹேண்டிலிங் என்றும் விளாசி வருகின்றனர். அந்த வகையில் இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நிரூப் ரூலர் டாஸ்க்கிற்கு பிறகு அறிவை இழந்துவிட்டாரா? பெண்களை அவமதிக்கிறார்.. மேன் ஹேண்ட்லிங்... உங்களின் உடம்பை வைத்துக்கொண்டு ஒரு பெண்ணை இப்படி தூக்குவது தவறானது என உங்களுக்கு தெரியாதா? நேர்மையாக விளையாடுங்கள் என கூறியுள்ளார்.

ஈகோ பிடித்தவர்..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், சிபி அவருடைய பேக்கேஜ்ஜஸை இறக்கி வைத்து விட்டு விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும், முன்னால் நடந்த சம்பவங்களையே எப்போதும் எடுத்துக் கொண்டு செல்கிறார். சரியான நேரத்துல வந்து மத்தவங்களை அட்டாக் பண்ணுவது சரியில்லை. ஈகோ பிடித்தவர்.. என்ன பிரச்சனை என்றே தெரியாமல் அவருடைய பிரச்சனையை தற்போது எடுத்து வந்துள்ளா என பதிவிட்டுள்ளார்.

மொத்த அமைதியும் க்ளோஸ்
இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பிக்பாஸ் மைண்ட் வாய்ஸ் என ஒரே ஒரு மாடு உள்ள அனுப்பினேன் அதுல இருந்து வீட்டோட மொத்த அமைதியும் க்ளோஸ் என பதிவிட்டுள்ளார்.

இப்படி பேச வச்சுட்டீங்களே..
இன்றைய மூன்றாவது புரமோவில் அக்ஷரா கத்துவதை பார்த்த இந்த நெட்டிசன், என்னடா நீங்க.. சத்தமா பேச வராத அக்ஷராவ இப்படி பேச வச்சுட்டீங்களே என பதிவிட்டுள்ளார்.

அண்ணாச்சிதான் வெளியேறுவார்?
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அண்ணாச்சி மைண்ட் வாய்ஸ், இவனுக ஆளாளுக்கு அடிச்சிகிட்டு பேர் வாங்கி நம்மள இந்த வாரம் வெளியே அனுப்பி விடுவாங்களா... மக்களே அனுப்பிடாதீய பிறகு வருத்தப் படுவீய.... என்று இருப்பதாகவும், அபினய் மற்றும் மதுவை காப்பாற்ற விஜய் டிவி
படாதபாடு படுகிறது... அப்படியானால் இந்த வாரம் அண்ணாச்சி தான் வெளியேறுவாரா என்று கேட்டும் பதிவிட்டுள்ளார்.

சவுண்டுன்னாலே அலர்ஜி
இன்றைய மூன்றாவது புரமோவில் அக்ஷரா கத்துவதை பார்த்த இந்த நெட்டிசன், எனக்கு சண்டை போட தெரியாது.... சவுண்டுன்னாலே அலர்ஜின்னு சொன்னாங்க யாரோ என அக்ஷரா கூறியதை குறிப்பிட்டு கிண்டலடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











