கர்மா இஸ் பூமராங்னு சும்மாவா சொன்னாங்க... கேப்டன் ஆன பாவனியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இன்று வெளியான பிக்பாஸ் புரமோக்களின்படி இந்த வார கேப்டன் ஆன அமீரின் பதவியை தனது காயின் மூலம் தட்டிப் பறித்துள்ளார் பாவனி ரெட்டி. கேப்டன் பதவியை கொடுத்துள்ள பிக்பாஸ் அவருக்கு பெனால்ட்டியாக பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்கள் கேட்கும் உதவியை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
இதனால் அக்ஷராவுக்கும் பாவனி ரெட்டிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய புரமோக்களை பார்த்த நெட்டிசன்கள் பாவனியை விளாசி வருகின்றனர்.

நிரூப்புக்கு கடினமான தண்டனை..
இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அக்ஷரா vs பவானி எல்லாம் எதிர்பார்த்தது தான்.. நிரூப்புக்கு கடினமான தண்டனை.. இசை மற்றும் பவானிக்கு வேலை செய்யும் சாதாரண டாஸ்க்.. பெண்கள் என்றால் பணிந்து வேலை செய்ய வேண்டும் எனும் 19 ஆம் நூற்றாண்டில் ஷோ போய்க் கொண்டு இருக்கிறது.. இம்முறை ஆறுதலுக்காக பெண்களுக்கு மட்டும் பணிவான பணி என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்
இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அவார்டு ஃபங்கஷன் முடிஞ்சு எல்லோரும் சோர்வா படுக்கவரும்போது காலைல 3:15க்கு தாமரை செல்வி அக்காவை வீடு முழுக்க பெருக்கி கூட்டனும்னு தண்டனை கொடுத்தியே பாவனி நியாபகம் இருக்கா? இந்தவாரம் உனக்கு இருக்கும்மா."முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்" என குறிப்பிட்டுள்ளார்.

கண்டிப்பா பாவம் நீ
இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பாவனி.....
தனக்கு தானே ஆப்பு வெச்சுக்கிட்ட இந்த வாரம்... பாவனி...
இந்த வாரம் கண்டிப்பா பாவம் நீ!!!! என கூறியுள்ளார்.

பார்க்க நீ பாவம் நீ
இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், உன் பெயர் பாவனி...
பார்க்க நீ பாவம் நீ... உண்மையில் பாய்சன் நீ... மூன்று புள்ளி... ஒரு ஆச்சர்யக்குறி! என குறிப்பிட்டுள்ளார்.

கர்மா இஸ் பூமராங்
இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், கர்மா இஸ் பூமராங்னு சும்மாவா சொன்னாங்க... காய்ன் வச்சுட்டு எப்படி ஆட்டம் போட்ட... இப்போ என்ஜாய் என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

கடுமையான விளையாட்டுகள்
பிக்பாஸ் வீட்டில் இன்று கொடுக்கப்பட்ட கேப்டன் டாஸ்க்கை பார்த்த இந்த நெட்டிசன், விஜய் டிவியை விளாசியுள்ளார். அதாவது விஜய் டிவிக்கு ஒரு ஆலோசனை. கேப்டன் டாஸ்க்கிற்கு musical chair மாதிரி கடினமான விளையாட்டை போல்.. புளியங்கொட்டை பொறுக்குதல், அரிசியில் கல் பொறுக்குதல் லெமன் ஸ்பூன், கண்டொழிந்து விளையாடு (hide n seek) போன்ற மிகக் கடுமையான விளையாட்டுகளையும் பரிசீலிக்கவும்.. என பங்கம் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











