ச்சீ.. பாவனியும் ஸ்ருதியும் ரொம்ப சீப்... இப்படிதான் விளையாடுவீங்களா.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடை பார்த்த நெட்டிசன்கள் பாவனியையும் ஸ்ருதியையும் கழுவி ஊற்றி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய புரமோக்களில் தாமரை மீதுதான் தவறு என்பது போல் தெரிந்தது. ஆனால் நேற்றைய எபிசோட் பார்த்த பிறகுதான் யார் மீது தவறு என்பது தெரியவந்தது.

ஸ்ருதியும் பாவனியும் தாமரை ஆடை மாற்றும் போது அவரை திட்டமிட்டு ஏமாற்றி அவரது காயினை எடுத்தனர். ஸ்ருதி காயினை எடுத்தப்போது அவருக்கு உதவியாக இருந்தார் ஸ்ருதி.

மோசமான விளையாட்டு

மோசமான விளையாட்டு

இதனை தாமரை கண்டுப்பிடித்தப் போது தனக்கு எதுவுமே தெரியாது என அடித்துப் பேசினார் பாவனி. இதனால் பாவனியின் முகத்திரை கிழிந்தது. பாவனியும் ஸ்ருதியும் மோசமாக விளையாடி ஒரே நாளில் தங்களின் பெயரை டேமேஜ் செய்துக்கொண்டனர்.

தாமரையை தவறாக நினைத்தோம்

தாமரையை தவறாக நினைத்தோம்

இதனை பார்த்த நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பாவனியையும் ஸ்ருதியையும் விளாசி வருகின்றனர். இப்படி எல்லாமா விளையாடுவார்கள் என்று கேட்டு வருகின்றனர். அதேநேரத்தில் தாமரையை புரமோவை பார்த்து தவறாக நினைத்துவிட்டோம் என்று கூறி வருகின்றனர்.

மன்னிச்சிடுங்க தாமரை அக்கா

மன்னிச்சிடுங்க தாமரை அக்கா

நேற்றைய நிகழ்ச்சியை பார்த்த இந்த நெட்டிசன், தாமரை செல்வி அக்கா என்ன மன்னிச்சிடுங்க.. இந்த படுபாவி
விஜய் டிவியோட புரமோ எடிட்டிங் பத்தி தெரியாம நான் உங்களை என்ன என்னமோ பேசிட்டேன்.. மன்னிச்சிடுங்க அக்கா மன்னிச்சிடுங்க.. என பதிவிட்டுள்ளார்.

சம்மந்தமே இல்லை

சம்மந்தமே இல்லை

நேற்றைய எபிசோடை பார்த்த இந்த நெட்டிசன், இந்த பிரச்சனை மூலம், பாவனி எவ்வளவு பெரிய விஷம் என்று புரிந்திருப்பார். தனக்கு சம்மந்தமே இல்லை என்று பாவனி நடிப்பதை பார்த்து ஸ்ருதியும் அவரை பற்றி புரிந்திருப்பார். மேலும் தற்போது பாவனிக்கு சாப்பாத்தி டெலிவரி செய்த நிரூப்தான் டார்கெட் என்று பதிவிட்டுள்ளார்.

என்ன இப்படி ஆகி போச்சு?

என்ன இப்படி ஆகி போச்சு?


நேற்றைய எபிசோடை பார்த்த இந்த நெட்டிசன், என்ன பாவனி ஃபேன்ஸ் இப்படி ஆகி போச்சு? இப்போ என்ன உருட்டுவீங்க? படுபாவி எடிட்டர்ஸ் இப்படி பண்ணிட்டீங்களே என்று கேட்டுள்ளார்.

என்னமா சுருதி இப்படி பண்றியே

என்னமா சுருதி இப்படி பண்றியே


நேற்றைய எபிசோடை பார்த்த இந்த நெட்டிசன், தாமரை ட்ரெஸ் மாத்தும் போது தான் காயின் எடுக்க போவியா அது தான் கேமா.. என்னமா சுருதி இப்படி பண்றியே.. என விளாசியுள்ளார்.

இது கேம் இல்ல.. துரோகம்தான்..

இது கேம் இல்ல.. துரோகம்தான்..

நேற்றைய எபிசோடில் நடந்த கூத்துக்களை பார்த்த இந்த நெட்டிசன், நான் அப்பவே சொன்னேன்.. புரமோவ நம்பாதீங்கடான்னு... கேட்டாதானே... என்ன பொருத்தவரைக்கும் இது கேம் இல்ல.. துரோகம்தான்.. பர்சனல் ஸ்பேஸ்ல ஒருத்தங்கள உள்ள விடுறோம்னா அது நம்பிக்கையின் பேர்லதான். அங்க போய் கேம் ஆட கூடாது.. என பதிவிட்டுள்ளார்.

ச்சை.. சீப் கேர்ள்ஸ்...

ச்சை.. சீப் கேர்ள்ஸ்...

நேற்றைய எபிசோடை பார்த்த இந்த நெட்டிசன், கேம்ன்னா டிரெஸ் இல்லாம இருக்கும் போது கூடவா உள்ள வருவீங்க... ச்சை.. சீப் கேர்ள்ஸ்... பாவனி மற்றும் ஸ்ருதி.. என இரண்டு பேரையும் கழுவி ஊற்றியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X