நாமினேஷன் பண்ணிட்டு… ஸ்வீட் பர்சன் அது இதுனு.. பிரியங்காவை கேள்வி கேட்ட நெட்டிசன்ஸ் !
சென்னை : 18 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. இதில், நமிதா சொந்த காரணங்களால் வெளியேறினார். இதையடுத்து கடந்த வாரம் நாடியா சாங் வெளியேற்றப்பட்டார். நேற்று அபிஷேக் வெளியேறினார்.
தற்போது பிக் பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில் இன்றைய எபிசோடின் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் பலர் பிரியங்காவை நாமினேட் செய்துள்ளனர்.

அபிஷேக் எவிக்ஷன்
பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்று அபிஷேக் ராஜா எலிமினேட் செய்யப்பட்டார். கமல் ஒவ்வொரு போட்டியாளராக காப்பாற்றி வந்த நிலையில் இறுதியாக அபிஷேக் ராஜா மற்றும் சின்னப்பொண்ணு ஆகியோர் லிஸ்டில் இருந்தனர். அப்போது அபிஷேக் எலிமினேட் ஆனதாக கமல் கார்டை காட்டி அறிவித்தார்.

அழுதனர்
அதை சற்றும் எதிர்பார்க்காத பலரும் எமோஷ்னல் ஆனார்கள்.குறிப்பாக பிரியங்கா மற்றும் மதுமிதா அழுதனர். அவர்களை மற்ற ஹவுஸ்மெட்டுகள் சமாதானப்படுத்தினர்.

நாமினேஷன் ப்ராசஸ்
இதையடுத்து இன்றைய எபிசோடின் முதல் ப்ரேமோ வெளியாகி உள்ளது. அதில், பிரியங்கா சின்னப்பொண்ணுவை நாமினேட் செய்து, அவங்க ஸ்வீட் ஹாட், அதில் எந்தவித சந்தேகமும் இல்லை, இருந்தாலும் நான் அவங்களை நாமினேட் செய்கிறேன் என்றார். அடுத்ததாக வந்த சின்னப்பொண்ணு, நிரூப், அக்ஷரா ஆகியோர் பிரியங்காவின் பெயரை நாமினேட் செய்துள்ளனர் இமான் அண்ணாச்சியின் பெயரை இசைவாணி, தாமரைசெல்வி நாமினேட் செய்வது மேல் காட்டப்பட்டுள்ளது.

சேஃப் கேம்மா
தற்போது வெளியாகி உள்ள முதல் ப்ரோவை வைத்து நெட்டிசன்ஸ்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர். ஒரு நெட்டிசன்ஸ்... நாமினேஷன் பண்ணும் போது எதுக்கு இந்த அடைமொழி.... ஸ்வீட் பர்சன் அது இதுனு ... நாமினேஷன் பண்ணிட்டு போங்கடா சேப் கேம் ஹா என்ன ... பொதுவா சொன்னேன் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை மக்களே என்று பதிவிட்டுள்ளார்.

சரியானது இல்லை
மற்றொரு நெட்டிசன்ஸ் நிரூப் நந்தகுமார், பிரியங்காவை நாமினேட் செய்தது சரியா படவில்லை தவறான புரிதல் இருந்தால், அதைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள் அது சரியாக வரவில்லை என்றார் நாமினேட் பண்ணுங்க, அதைவிட்டு இப்போது நாமினேட் செய்வது சரியானதாக இல்லை என்றார்.

விஷ பாட்டில்
மற்றொரு நெட்டிசன்ஸ், பவானி ரெட்டிய அக்ஷராவை நாமினேட் செய்ததை சுட்டிக்காட்டி, அவரை சரியான விஷ பாட்டில் என்று கமெண்ட் அடித்துள்ளார்.

இந்த வாரம் சின்னப்பொண்ணு தான்
இந்தவாரமே சின்னப்பொண்ணு தான் வெளியேவார் என்று பலரும் எதிர் பார்த்தனர், ஆனால், அவர் வெளியேற வில்லை. இந்த நெட்டிசன்ஸ் இந்த வாரம் சின்னப்பொண்ணு தான் என்று தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











