நாங்களும் அதைத்தான் சொல்றோம்... தயவு செஞ்சு வெளியே வந்துடுங்க பிரியங்கா... கெஞ்சும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் பிரியங்காவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் நிரூப் ரொம்பவே சீப்பாக நடந்து கொள்வதாக பிரியங்காவிடம் கூறி அவரை ஏற்றி விடுகிறார் அபிஷேக்.

அபிஷேக் பேசுவதை கேட்டு நிரூப்பிடம் எகிறுகிறார் பிரியங்கா. இதனை பார்த்த நெட்டிசன்கள் ஒரு பக்கம் அபிஷேக்கை விளாசி வருகின்றனர்.

பிடிக்காவிட்டால் வேறு மாதிரி

பிடிக்காவிட்டால் வேறு மாதிரி

மற்றொரு பக்கம் பிரியங்கா தனக்கு பிடித்தால் ஒரு மாதிரி நடந்து கொள்வார், தனக்கு பிடிக்காவிட்டால் எப்படி வேண்டுமானாலும் சென்று பழி தீர்த்துக்கொள்வார் என்றும் நிரூப்பே விலகி செல்லும் போது ஏன் அவரிடம் நெருங்க வேண்டும் என்றும் கேட்டு விமர்சித்து வருகின்றனர்.

நீங்களும் உங்க பிராங்கும்..

நீங்களும் உங்க பிராங்கும்..

அந்த வகையில் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பிரியங்கா சாரி பிராங்க் பிரியங்கா கடைசில இதுவும் பிராங்கன்னு சொல்லி மக்களை ஏமாற்ற வேண்டாம்... முடியலடா.......
நீங்களும் உங்க பிராங்க்கும்!!!! என்று பதிவிட்டுள்ளார்.

எங்களால பார்க்க முடியல..

எங்களால பார்க்க முடியல..

இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன்,
நாங்களும் அதை தான் சொல்றோம் பிரியங்கா. வெளியே போயிடுங்க. உங்களுக்காக, நீங்க எவ்ளோ அசிங்கப்படுத்தினாலும் பல்லை காட்டும் ராமர், மூக்குத்தி முருகன் போன்ற அப்பாவிகள் விஜய் டிவியில் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த புரோகிராம் முழுவதும் நீங்க கத்துவதை மட்டுமே எங்களால பார்க்க முடியல.. என கூறியுள்ளார்.

கேவலமான லெவல்

கேவலமான லெவல்

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அபிஷேக் இப்படி தான் பேசணும் உனக்கு நிரூப்பை பிடிக்காது அதனால் பிரியங்காவை ஏத்தி விட்டு நிரூப் கழட்டி விடணும்.. நான் நேத்து சொன்னேன் பிரியங்காக்கிட்ட எவனாவது எதிர்த்து பேசுனா அவங்க யாரா இருந்தாலும்.. அவங்கள மட்டம் தட்டுறதுத்துக்கு எந்த கேவலமான லெவல்க்கு கூட போவாய் என அபிஷேக்கை கிழித்து தொங்க விட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

பிரியங்கா அசிங்கப்படுத்துகிறார்..

பிரியங்கா அசிங்கப்படுத்துகிறார்..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நிரூப் பிரியங்காவை பயன்படுத்தவில்லை. ஆனால் பிரியங்கா நிரூப்பை அசிங்கப்படுத்துகிறார் என பதிவிட்டுள்ளார்.

மதிக்காத இடத்தில்..

மதிக்காத இடத்தில்..

இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நிரூப்பிற்கு நண்பன் நண்பன் என பிரியங்கா முக்கியத்துவம் கொடுப்பதை வைத்து,
பிரியங்காவிற்கு சுயமரியாதை இல்லை. உறவாக இருந்தாலும் நட்பாக இருந்தாலும் நம்மை மதிக்காத இடத்தில் நமக்கென்ன வேலை . கீப் டிஸ்டன்ஸ் என பதிவிட்டுள்ளார்.

Recommended Video

Simbhu -வ மட்டும் பாராட்டாதீங்க Kalyani Transformation பத்தி தெரியுமா! | Maanadu
குறும்படத்தில் வரலாம்

குறும்படத்தில் வரலாம்

இன்றைய இரண்டவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இதுவும் நாடகமோ.. குறும்படத்தில் இந்த மூடர் கூட்டம் சாரி சாரி மூவர் கூட்டம் வர வேண்டும் என்பதற்காக... அதெப்படி சிபி அக்சரா மட்டும் குறும்படத்தில் வரலாம் என பிரியங்கா நினைத்து இருக்கலாம் என நேற்றைய எபிசோடுடன் ஒப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X