தாமரையின் கோபம் பலவீனம்.. அதை அடிக்கடி சீண்டிப்பார்க்கும் பிரியங்கா.. கடுப்பாகும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் பிரியங்கா மற்றும் தாமரை என இருவரையும் விளாசி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் தெரியல தெரியலன்னு சொல்றீங்க... நாடகம் நல்லா போடுறீங்க என தாமரை செல்வியை அட்டாக் செய்து கோஷம் போடுகிறார் பிரியங்கா.

தொடர்ந்து என்ன பேசினாரோ பிரியங்கா, உடைந்து போன தாமரை எனக்கு நாடகம்தான் உயிர்... எனக்கு சோறு போட்ட தொழிலை பற்றி தவறாக பேசாதீர்கள் என்று கூறி கண்ணீர் விடுகிறார்.

பிரியங்காவின் வன்ம விளையாட்டு

பிரியங்காவின் வன்ம விளையாட்டு

இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள் பிரியங்கா மற்றும் தாமரை என இருவரையும் விளாசி வருகின்றனர். இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், தெரியலனு சொல்லி கத்துக்கிட்டு விளையாடிறது ஒரு குற்றமா??எல்லாம் தெரிந்த பிரியங்கா வன்ம விளையாட்டுக்கு வாரா வாரம் தாமரை பலி ஆடு அல்ல..

3 வது வாரம் தொடர்ந்து தாமரை செல்வியின் பலவீனம் தூண்டப்படுகிறது என பதிவிட்டுள்ளார்.

நீதி கிடைத்து விட்டது..

நீதி கிடைத்து விட்டது..

இன்றைய முன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், கடந்த மூன்று வாரத்தில் 4வது முடிறையாக பிரியங்காவின் பழிவாங்கல்... சபாஷ் பிரியங்கா.. அனைத்து ஹவுஸ் மேட்டும் வெளியேற தாமரையை நீங்கள் அழ வைக்கிறீர்கள்.. தாமரை இந்த கொடுமைகளுக்கு தகுதியானவர்தான்... நீதி கிடைத்து விட்டது.. என பதிவிட்டுள்ளார்.

அடிச்சு விட்ட லோட்டஸ்..

அடிச்சு விட்ட லோட்டஸ்..

இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நாடகம் நல்லா போடுறீங்கன்னு கிண்டல் பண்ணத அப்படியே திரித்து என்னுடைய தொழில பத்தி பேசுறாங்கன்னு அடிச்சு விட்டுருச்சு லோட்டஸ் பாப்பா என்று தாமரையை விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

வச்சும் செய்கிறார்..

வச்சும் செய்கிறார்..

இன்றைய மூன்றாவது புரமோவில் பிரியங்கா தாமரை செல்வியை வச்சு செய்வதை பார்த்த இந்த நெட்டிசன், தாமரைக்கு முத்தமும் கொடுக்கிறார்.. அப்புறம் டாஸ்க்குன்னு வந்தா வச்சு செய்கிறார் பிரியங்கா... அதே கேள்விதான் உங்களுக்கு... எது உண்மையான நீங்கள்? பழிவாங்கு பெண்ணா? அல்லது பாஸிட்டிவிட்டியை பரப்புபவரா? என கேட்டுள்ளார்.

அடிக்கடி சீண்டி பார்க்கும் பிரியங்கா

அடிக்கடி சீண்டி பார்க்கும் பிரியங்கா

தாமரையிடம் அடிக்கடி பிரியங்கா தகராறு செய்வதை பார்த்த இந்த நெட்டிசன், தாமரையின் கோபம் பலவீனம். அதை அடிக்கடி சீண்டிப் பார்க்கும் பிரியங்கா ஒரு கேவலம். நம் பலவீனத்தை வெளியில் காட்டினால் என்ன நடக்கும் என்பதற்கு இவர்கள் இருவரும் நமக்கு பாடம் கற்பிக்கிறார்கள் !!! என்று பதிவிட்டுள்ளார்.

வன்மத்தை வெளிப்படுத்துகிறாய்

வன்மத்தை வெளிப்படுத்துகிறாய்

இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், தாமரை நடிக்கிறதா சொல்லிட்டு நாமினேட் பண்ணும் பிரியாங்க, அதையே தான் டாஸ்க்லேயும் சொல்லிட்டு ஸ்லோகம்னு சொல்கிறார்.. கேட்டால் இது நான் கேம்முக்காக சொன்னேனு சொல்கிறார். அப்புறம் வந்து முத்தம் கொடுக்கிறார். உனக்குள் இருக்கும் வன்மத்தை டாஸ்க் முலம் நல்லாவே வெளிப்படுத்துகிறாய் என்று பிரியங்காவை விளாசியுள்ளார்.

அரசியலில் இது சாதாரணமப்பா...

அரசியலில் இது சாதாரணமப்பா...

இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், தாமரை நீங்கள் நாடகம் தான் போடுகிறீர்கள்.. உங்களுக்கு பிடித்தால் ஒரு சட்டம்.. பிடிக்காதவர்களுக்கு இன்னொரு சட்டம்.. அரசியலில் இது சாதாரணமப்பா... என கிண்டலடித்துள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X