பிரியங்காவின் ஈகோ கொஞ்சம் கொஞ்சமாக வெளியே எட்டிப்பார்க்க ஆரம்பித்துள்ளது.. விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் பிரியங்காவை விளாசி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் பிரியங்கா கனா காணும் காலங்கள் டாஸ்க்கில் ஓவர் ஆட்டிட்யூட் காட்டுவதாக தெரிகிறது.

டாஸ்க்கில் ஆசிரியரான சிபியிடம் வம்பில் ஈடுபட்டுள்ள பிரியங்கா, மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுக்க மறுத்து கார்டன் ஏரியாவில் அமர்ந்துள்ளார்.

நாசம் செய்த பிரியங்கா

நாசம் செய்த பிரியங்கா

ஆசிரியர் தண்டனை கொடுக்கும் போது அதனை ஏற்காமல் டீ கப்புகளை உடைத்தும் நாசம் செய்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இப்போதுதான் பிரியங்காவின் ஒரிஜினாலிட்டி கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகிறது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உண்மை முகம் வெளிப்படுகிறது

உண்மை முகம் வெளிப்படுகிறது

மேலும் இந்த சீசனை ஃபன்னாக கொண்டு செல்லப்போகிறோம் என்று முதல் நாள் கூறிய பிரியங்கா, அண்ணாச்சி, தாமரை, ஐக்கி என பலரிடமும் ஈகோ காட்டி வருகிறார் என்றும் 50 நாட்களுக்கு பிறகு அவருடைய உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 உங்களுக்கு செட் ஆகாது

உங்களுக்கு செட் ஆகாது

இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோவில் பிரியங்காவின் பிஹேவிங்கை பார்த்த இந்த நெட்டிசன், இந்த பிடிவாத நாடகம் எல்லாம் உங்களுக்கு செட் ஆகாது பிரியங்கா.
ஏழு வாரம் இருந்துவிட்டு இப்போது இதெல்லாம் செய்வது காமெடியாக உள்ளது... ஏதாவது சுவாரசியமாக செய்ய முயற்சி செய்யுங்கள்.. அனுதாப அலை உங்களுக்கு உதவாது.. வேண்டுமானால் வீக்கெண்டில் அரை மணி நேரம் பேச இது உங்களுக்கு உதவும்... லக்ஸரி டாஸ்க் வேஸ்ட்டட் என பதிவிட்டுள்ளார்.

எனக்கு ரத்தம் உனக்கு தக்காளி சட்னி

எனக்கு ரத்தம் உனக்கு தக்காளி சட்னி

இன்றைய புரமோவில் பிரியங்காவின் நடவடிக்கையை பார்த்த இந்த நெட்டிசன், பிரியங்காவின் ஈகோ கொஞ்சம் கொஞ்சமாக வெளியே எட்டிப்பார்க்க ஆரம்பித்துள்ளது. நிரூப்புக்கு டாஸ்க்கை ஒழுங்கா செய் என்று பாடம் எடுத்த பிரியங்கா, இப்போ தனக்கு ஒருவர் டாஸ்க் சொல்லும் போது அதை செய்ய மாட்டேன் என்று ஈகோவுடன் சொல்வது எனக்கு ரத்தம் உனக்கு தக்காளி சட்னி என்ற மாதிரி இருக்கு என விளாசியுள்ளார்.

நண்பர்களை இழக்கிறீகள்

நண்பர்களை இழக்கிறீகள்

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இப்படியும் எடுத்துக்கலாம்.. 50 நாள் குட்டிமா அச்சுமா.. ச்சோ ஸ்வீட் மக்களே
என்று இந்த ஷோவை முன்னின்று ஆங்கர் செய்த பிகா
இன்றுமுதல் bb 5 போட்டியாளராக மாறி உள்ளார்.. ரொம்ப லேட்.. போட்டியாளர்கள் உங்கள் மீது அதிக வெறுப்பை காட்ட நீங்களே வாய்ப்பு கொடுப்பது போல உள்ளது... நண்பர்களை இழக்கிறீர்கள்... என்று பதிவிட்டுள்ளார்.

இப்போ பிரியங்காவே இப்படி..

இப்போ பிரியங்காவே இப்படி..

இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோவில் பிரியங்கா நடந்து கொள்ளும் விதத்தை பார்த்த இந்த நெட்டிசன், இதே நிரூப் பண்ணாம இருந்தப்போ பிரியங்கா எவ்ளோ சண்டை போட்டாங்க.. நாங்க எல்லோரும் கேட்கிறோம் நீ கேக்க மாற்ற என்று.. இப்போ பிரியங்காவே என்று விளாசியுள்ளார்.

இவருக்கு ஒரு புரமோ இல்ல?

இவருக்கு ஒரு புரமோ இல்ல?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் வைல்டு கார்டு என்டரியான டான்ஸ் மாஸ்டர் அமீர் இருப்பதை பார்த்த இந்த நெட்டிசன், யாருப்பா இவர்... Wild-card வந்தவரா இவர்? இவருக்கு ஒரு புரமோ கூட போடல... ஆனால் மக்கள் ஓட்டு போட்டு வெளியே அனுப்பி.... திரும்ப வந்த அபிஷேக்கிற்கு ஒவர் பில்டப் பண்ணுங்க.. இந்த தம்பிக்கு ஒன்னுமே பண்ணல..... என பதிவிட்டுள்ளார்.

தப்பு இல்ல செம...

தப்பு இல்ல செம...

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், தப்ப தட்டி கேக்கனும்னா கேக்கலாம் தப்பு இல்ல செம... சிபி ஏன் இப்படி நடந்துகிற.. பிரியங்கா தப்பா இருந்தா கண்டிப்பா தண்டனையை ஏற்றுக்கொள்வார். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

யாரு நீலாம்பரி?

யாரு நீலாம்பரி?

இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஓஹோ படையப்பா தீம்ல நீலாம்பரி பிகா தானா
நாமக்கூட அக்ஷரானு நினைச்சோம்.. இல்ல பிக்பாஸ் டீமே மங்காத்தாவா படையப்பாவானு குழப்பத்தில் இருக்கா.. இந்த வீக்கெண்ட் நிஜ நீலாம்பரி ஹோஸ்ட் பண்ண வந்தா செமயா இருக்கும்... என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X