மொத்த மரியாதையையும் இழந்த பிரியங்கா.. கேவலமா விளையாடுறீங்க.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் பிரியங்காவை சரமாரியாக விளாசி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் வம்படியாக தாமரை செல்வியை வம்பிழுக்கிறார் பிரியங்கா. அதுகுறித்து கேட்கும் தாமரை செல்வியிடம் உன்னுடைய உண்மையான முகம் இப்போது வெளியே வருகிறதா என கேட்கிறார்.

அதற்கு பதில் சொல்லும் தாமரை நான் எப்போவுமே இப்படிதான், ஆனால் நீங்கள் இப்படி இல்லை என்று கூறுகிறார் தாமரை செல்வி. இதனை பார்த்த நெட்டிசன்கள், பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த ஒரு வாரத்திலேயே தாமரை செல்வியின் உண்மை முகம் தெரிந்துவிட்டது.

கேவலமாக விளையாடுகிறார்

கேவலமாக விளையாடுகிறார்

ஆனால் இப்போது தான் உங்களின் உண்மை முகம் வெளியே வருகிறது என்று கூறி வருகின்றனர். இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பிரியங்கா கேரக்டர் எப்படினா, ஒன்னு அவர் கூடவே ட்ராவெல் பண்ணனும் இல்லை. அவருக்கு அடிமையா இருக்கனும்.

அவளை யாரவது எதிர்த்து பேசினாலோ அவரை டாமினேட் பண்ணாளோ அவரால் ஏத்துக்க முடியாது. சோ அது தான் அவர் ராஜு, அக்ஷரா, தாமரை செல்விக் கூட இப்படி கேவலமா பண்ணிட்டு இருக்கிறார் என பதிவிட்டுள்ளார்.

ரொம்ப கேவலமான பேச்சு

ரொம்ப கேவலமான பேச்சு

இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அடுத்தவங்கள நல்லா ஏத்தி விட்டு... அவங்க கோபத்தை கெளப்புற மாதிரி வார்த்தைகளை சொல்லி... ரொம்ப கேவலமான பேச்சு பேச்சுக்கள் பேசி... ரொம்ப கேவலமான ஆட்டத்தை வெளிப்படுத்த... அப்போது பிரியங்காவை பார்க்கும்போது மனசுல தோணுது... இவரை பார்த்தா எவ்வளவு நாள் சிரிச்சிட்டு இருந்தோம்... அடக்கடவுளே என விளாசியுள்ளார்.

ஃபேன்ஸ் வெளியே புல்லி பண்ணுவாங்க

ஃபேன்ஸ் வெளியே புல்லி பண்ணுவாங்க

இன்றைய புரமோவில் பிரியங்கா பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், இவங்க வீட்டுக்குள்ள புல்லி பண்ணுவாங்க தாமரையை வம்பிழுத்து கத்தவச்சு.. இவர்களுடைய சில ரசிகர்கள் வெளியே தாமரையோட ஃபேன்ஸ புல்லி பண்ணுவாங்க என்று பதிவிட்டுள்ளார்.

இது மட்டும்தான் பாக்கி

இது மட்டும்தான் பாக்கி

இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், கடந்த சீசனில் அர்ச்சனா மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோர் முடியை பிடித்துக் கொண்டு சண்டை போடும் போட்டோவை பகிர்ந்து இனி இது மாதிரி ஒன்னு நடக்குறது மட்டும்தான் பாக்கி என்று கிண்டலடித்துள்ளார்.

பழி தீர்க்குது...

பழி தீர்க்குது...

இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பிரியங்காவுக்கு ஒன்னு அவர் சொல்றதை கேக்கணும் இல்லன்னா அடிமையா இருக்கணும் இல்லன்னா இப்படி வேணும்ன்னே வம்பு இழுத்து கத்திட்டு இருப்பார்.... தாமரை வெளியபடையா கத்தி கெட்ட பேர் எடுக்குது பிரியங்கா உள்ளுக்குள்ளேயே வைச்சு டாஸ்க் வரும் போது பழி தீர்க்குது என விளாசியுள்ளார்.

உன் முகம் வெளுத்துவிட்டது..

உன் முகம் வெளுத்துவிட்டது..

இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன்,

பிரியங்கா, தாமரை உண்மையான முகம் வெளியே வந்து நாற்பது நாள் ஆகிவிட்டது.... ஆனால் இன்று உன்னுடைய முகம் வெளுத்து விட்டது என பதிவிட்டுள்ளார்.

பிரியங்கா இருந்தாதான் போடுவியா?

பிரியங்கா இருந்தாதான் போடுவியா?

இன்றைய இரண்டாவது புரமோ தாமதமானதை பார்த்த இந்த நெட்டிசன்,

டேய் பிக்பாஸ் எடிட்டர்... இதுக்கு தான் உனக்கு இவ்ளோ நேரம் ஆச்சா!!!!!
அது என்னடா நீ போடுற புரமோவுல பிரியங்கா இருக்கிற மாதிரியே.... இருந்தாதான் போடுவியா? என கேட்டுள்ளார்.

ஒரு விதமான மனநோய்

ஒரு விதமான மனநோய்

இன்றைய புரமோவில் பிரியங்கா நடந்து கொண்டதை பார்த்த இந்த நெட்டிசன், தன்னை மட்டுமே அனைவரும் கொஞ்சி குலாவி பாராட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என்ற ஒருவிதமான மனநோய் பிரியங்காவை பிடித்திருக்கிறது. விஜய் டிவியில் அவர் வாழ்ந்த உலகம் அப்படிப்பட்டது.. என விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

மோசமான ஆட்டிட்யூட்

மோசமான ஆட்டிட்யூட்

இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பிரியங்கா இதுவரை சம்பாதித்து வைத்திருந்த மொத்த மரியாதையையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இழந்து விட்டார். இதுதான் அவருடைய இயல்பா? அல்லது நிகழ்ச்சிக்காக இப்படி செய்கிறாரா? வன்மத்தோடு வார்த்தைகளை வாந்தி எடுக்கிறது. இறுதியில் நீதான் அதை அள்ளவேண்டும். அவரது மோசமான வீழ்ச்சி.. மோசமான ஆட்டியூட்... கடவுள் தான் அவரை காப்பாற்ற வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

தன் முகத்தை காட்டிட்டு இருக்கு

தன் முகத்தை காட்டிட்டு இருக்கு

இன்றைய இரண்டாவது புரமோவில் தாமரையிடம் பிரியங்கா பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், தாமரையை தேவையில்லாம சீண்டி பிரியங்கா தன்னோட முகத்தை காட்டிட்டு இருக்கு... என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X