5 ரூபாய்க்கு நடிக்க சொன்னா… 5000 ரூபாய்க்கு நடிக்கிற… ஸ்ருதியை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை : பிக் பாஸ் வீட்டில் இன்று நாமினேஷன் செய்யாமல், இந்த வாரம் யாராவது இரண்டு பேரை காப்பாற்றலாம் என்ற சூப்பர் ட்விஸ்ட் வைக்கப்பட்டுள்ளது.
இதில், தாமரையை ஸ்ருதி எவிக்ஷனிலிருந்து காப்பாற்றுகிறார் ஸ்ருதி. மேலும், அவருக்கு இந்த மேடை மிகவும் முக்கியம் என்கிறார்.
இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்ஸ், என்ன உலகமகா நடிப்புடா என்று ஸ்ருதியை கிண்டலடித்து வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 5
பிக் பாஸ் வீட்டில், நமிதா, நதியா சாங், அபிஷேக் மற்றும் சின்னப்பொண்ணு வெளியேறியதை அடுத்து பிக் பாஸ் வீட்டில் 14 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.

3வது ப்ரோமோ
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான 3வது ப்ரோமோவில், பிக் பாஸ் வீட்டின் இரண்டு நபர்களை இந்த வார எலிமினேஷனில் இருந்து காப்பாற்றுவதற்கு போட்டியாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது, தாமரையை காப்பாற்ற இருப்பதாக ஸ்ருதியும், அக்ஷராவும் தேர்வு செய்கின்றனர். பிரியங்காவை காப்பாற்ற இருப்பதாக மது தெரிவிக்க, மதுமித்தாவை காப்பாற்ற இருப்பதாக பிரியங்காவும் தெரிவிக்கின்றனர்.

ஏம்மா ஸ்ருதி
நெட்டிஷன்ஸ் ஒருவர், ஏம்மா சுருதி 5 ரூபாய்க்கு நடிக்க சொன்ன 5000 ரூபாய் நடிக்கிற என்று பதிவிட்டுள்ளார்.

உலகமகா நடிப்பு
மற்றொரு நெட்டிசன்ஸ், உலகமகா நடிப்புடா சாமி, ஸ்ருதிம்மா அதுக்கு காயின எடுக்கமா இருந்திருந்தாலே அவங்க சேஃப். என பதிவிட்டுள்ளார்.
Recommended Video

பண்ணது தப்பு
இணையவாசி ஒருவர், ஸ்ருதி பயந்துட்டா, அவ பண்ணது தப்புனு தெரிஞ்சி போச்சு, மக்கள் கிட்ட வோட் கிடைக்காதுனு ஒரு உருட்டு உருட்டுறா என பதிவிட்டுள்ளார்.

பயம் வந்துருச்சி
பிக் பாஸ்சின் தீவிர ரசிகர் ஒருவர், ஸ்ருதி ப்ளே பிர்ளியன்ட் , போன வாரம் தாமரையை ப்லேம் பண்ணா... இந்த வாரம் காப்பாத்துற, பயம் வந்துருச்சி போல பாப்பாவுக்கு. என பதிவிட்டுள்ளார்.

எல்லாரும் சேஃப்
மற்றொரு நெட்டிசன்ஸ், எல்லாரும் சேஃப்னு சொல்ல போற.... அதானே யா உன் பிளான்... தெரிஞ்சுட்டு யா உன் பிளான். என பதிவிட்டுள்ளார்.

தாமரைக்கு புரியாது
மற்றொரு நெட்டிசன்ஸ், தாமரையை காப்பாத்துறேன்னு சுருதி சொல்ற அந்த மனசு இருக்கே, இதெல்லாம் அந்த தாமரைக்கு புரியாது வன்மத்தோட சுத்திட்டு இருக்கும். எனபகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











