twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேம் என்னனு கூட புரியாத பச்ச மண்ணா இருக்கியே … தாமரைக்கு ஆறுதல் கூறிய நெட்டிசன்ஸ்!

    |

    சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று 23வது நாளை எட்டி உள்ளது. இதில் இந்த வார நாமினேஷன் ப்ராசஸில் 9 போட்டியாளர்களின் பெயர் உள்ளது.

    இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் ஸ்ருதி நாணயத்தை திருடிவிட்டதால் கதறி அழுகிறார் தாமரை.

    தாமரை அழுவதைப் பார்த்த நெட்டிசன்ஸ் அவருக்கு ஆறுதல் கூறும் விதமாக கமெண்ட்டுகளை பகிர்ந்து வருகின்றனர்.

    பிக் பாஸ் 22வது நாள்: போட்டி போட்டு பிரியங்காவை நாமினேட் செய்த போட்டியாளர்கள்.. ஒரு குட்டி ரவுண்டப்!பிக் பாஸ் 22வது நாள்: போட்டி போட்டு பிரியங்காவை நாமினேட் செய்த போட்டியாளர்கள்.. ஒரு குட்டி ரவுண்டப்!

    முதல் ப்ரோமோ

    முதல் ப்ரோமோ

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோவில், தான் எடுத்து வைத்திருந்த காயினை கேமரா முன்பு காட்டுகிறார் சுருதி. இதைப் பார்த்த தாமரைச்செல்வி, சொல்லிட்டு எடுத்துருக்கலாம்ல என்கிறார். அதற்கு அக்கா இந்த கேமே இதான். நாங்க சொன்னோம்ல, நீங்க அசந்தா எடுப்போம்ன்னு என்று கூற, என்ன இருந்தாலும் நீ பண்ணினது துரோகம் என்கிறார் தாமரை.

    கதறி அழும் தாமரை

    கதறி அழும் தாமரை

    இதையடுத்து வெளியான 2வது ப்ரோமோவில், ஸ்ருதி காயினை எடுத்ததால் கதறி அழுதுக்கொண்டு இருக்கிறார் தாமரை, ஒரு கேமுக்காக இப்படியா விளையாடுவீங்க ச்சீ... என்கிறார். இதற்கு ஸ்ருதி தேவையில்லாத வார்த்தையை விடாதீங்க என்கிறார். இதற்கு தாமரை நான் காயினை பத்தியே பேசல நீ பண்ண வேலை எனக்கு பிடிக்கவில்லை என்கிறார்.

    பச்ச மண்ணு

    பச்ச மண்ணு

    காயினை தொலைத்துவிட்டு அழுவதை பார்த்த நெட்டிசன்ஸ்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். ஒரு நெட்டிசன் கேம் என்னனு கூட புரியாத பச்ச மண்ணா இருக்கியே தாமரை என கூறியுள்ளார்.

    துரோகம் இல்லை

    துரோகம் இல்லை

    மற்றொரு நெட்டிசன் தாமரைக்கு யாரும் துரோகம் பண்ணல... ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க இது விளையாட்டுத்தான் என்று கூறியுள்ளார்.

    பிக் பாஸ் பார்த்து இருக்கனும்

    பிக் பாஸ் பார்த்து இருக்கனும்

    மற்றொரு இணையவாசி... தாமரை அக்கா அதுக்குதான் பிக் பாஸ் நிகழ்ச்சி பார்த்துட்டு வரணும்னு சொல்றது..... பிக்பாஸ் பார்த்தீங்கன்னா இதெல்லாம் தப்புன்னு தெரிஞ்சிருக்காது..... தாமரை அக்காவுக்கு பாயசம் ரெடி போல.... பிக் பாஸ் வீட்டில் என கமெண்ட் அடித்துள்ளார்.

    இது வெற்றியா

    இது வெற்றியா

    மற்றொரு நெட்டிசன், ஸ்ருதி, எந்த விளையாட்டும் பலமான எதிரணியோட ஆடி வெல்வது சிறப்பாக இருக்கும் . அதை விட்டு புள்ளபூச்சிய அடிச்சு வெற்றி பெருவதென்பது வெற்றியா??? ஏன் உன் விளையாட்ட பாவ்னி, நிரூப் மற்றும் வருண் இவங்க கிட்ட ஆடல என்று பகிர்ந்துள்ளார்.

    English summary
    Bigg boss Day 23nd Second Promo Review : தாமரைச் செல்வி காயினை திருடிய ஸ்ருதி, ஸ்ருதி காயினை திருடியதால் கதறி அழுத தாமரை, நெட்டிசன்ஸ் ரியாக்ஷன்ஸ்
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X