கேப்டன் ஆனதும் சிபி ஆளே மாறிட்டாரே... பிக்பாஸ் புரமோவை பார்த்து மெர்சலாகும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் சிபியை பாராட்டி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய முதல் புரமோவில் யார் நெருப்பு என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் சிபி தன்னைத்தானே நெருப்பு என்று கூறுகிறார்.

மேலும் யாராவது தன்னை தொட்டால் சுட்டுவிடுவேன் என்றும் கூறுகிறார். அடுத்து தாமரை செல்வி, இமான் அண்ணாச்சியை நெருப்பு என்று கூறுகிறார்.

டென்ஷனாகும் சிபி

டென்ஷனாகும் சிபி

இமான் அண்ணாச்சி அபிஷேக்கை கொளுத்தி போடும் நெருப்பு என்று கூறுகிறார். இதனால் டென்ஷனாகும் சிபி, அபிஷேக்கை நீங்கள் அப்படி பேசுவது எனக்கு தவறாக தெரிகிறது என்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள், சிபி கேப்டன் ஆன பிறகு ஆளே மாறிவிட்டார். எல்லாவற்றுக்கும் வாயை திறக்கிறார் என கூறி வருகின்றனர்.

உங்க ஆட்டம் இல்லை!

உங்க ஆட்டம் இல்லை!

இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், டேய்.. அபிஷேக்கு இல்லனா உங்க ஆட்டம் இல்லை! என அவர்தான் கன்டென்ட் கொடுப்பதாக மறைமுகமாக பதிவிட்டுள்ளார்.

ஒரு காமெடி பீசு

ஒரு காமெடி பீசு

இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், சிபி சந்திரன் கேப்டன் ஆன பிறகு வேற மாதிரி ஆகிவிட்டார் என்றும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வருகிறார் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் இமான் அண்ணாச்சி சரியாகத்தான் சொல்கிறார் என்றும் அபிஷேக் ராஜா ஒரு காமெடி பீசு என்றும் கேப்டனாக சிபி அதை தவறு என்று சொல்வதும் சூப்பர் என பதிவிட்டுள்ளார்.

ராஜு உதவினால் பொது நலம்

ராஜு உதவினால் பொது நலம்

பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்த இந்த நெட்டிசன், தாமரைக்கு மற்றவர்கள் உதவினால் அது சுயநலம்.. தாமரைக்கு ராஜு உதவினால் அது பொதுநலம் என பதிவிட்டுள்ளார்.

சிபி ஃபேன் ஆகிவிடுவேன்

சிபி ஃபேன் ஆகிவிடுவேன்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், சிபி தன்னை நெருப்பாக பார்ப்பதாக கூறியதை குறிப்பிட்டு போற போக்கை பார்த்தால நான் சிபி ஃபேன் ஆகிவிடுவேன் என்று தோன்றுகிறது என பதிவிட்டுள்ளார். இப்போலாம் பையன் ஓபன் அப் ஆகி பேச ஆரம்பிச்சாச்சு... ஒபீனியன் சொல்கிறார்.. இனனும் நிறைய எதிர்பார்க்கிறோம்.. கம் ஆன் சிபி என பதிவிட்டுள்ளார்.

சண்டை வர டாஸ்க் போல

சண்டை வர டாஸ்க் போல

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆமா இந்த டாஸ்க் நல்லா சண்டை வர டாஸ்க் போல, இதுல ஒரு எபிசோட விட்டா கூட இல்ல இன்ச் இன்ச்சா பார்க்கலன்னா கூட ஒன்னும் புரியாது இந்த டாஸ்க்ல.. என குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

பிக்பாஸ் ரொம்ப பாவம்பா!

பிக்பாஸ் ரொம்ப பாவம்பா!

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவை பார்த்த இந்த நெட்சடின், டம்மி பீசலாம் வெச்சுகிட்டு நம்ப பிக்பாஸ் படுறபாடு இருக்கே!.. பிக்பாஸ் ரொம்ப பாவம்பா! என பதிவிட்டுள்ளார்.

கொளுத்தி போடுறதுதான்..

கொளுத்தி போடுறதுதான்..

ஒரு டாஸ்க் கொடுத்து என்னலாம் பண்ண முடியுமோ பண்ணிட்டீங்க... மாத்தி மாத்தி ஒரே கொளுத்தி போடுறதுதான்.. என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

பூடகமாக பேசுகிறார்கள்

பூடகமாக பேசுகிறார்கள்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நெருப்பு காயின் யாரிடம் உள்ளது என்று கண்டுபிடிக்க பூடகமாக பேசுகிறார்கள், இன்னொரு தடவை இந்த புரமோ வீடியோவை கவனமாக பாருங்கள் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X