நிரூப்புக்கு தான்தான் டாஸ்க் மாஸ்டர்னு நினைப்பு... புரமோவை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் நிரூப்பை கலாய்த்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் தாமரை செல்விக்கும் இசைவாணிக்கும் இடையே டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் இருவரும் மாறி மாறி தலையில் முட்டையை உடைத்துக் கொண்டனர். இந்நிலையில் இன்றைய இரண்டாவது புரமோவில் உள்ளே வெளியே டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மீண்டும் மோதல்
இதில் தண்ணீர் நிரப்பப்பட்ட கண்ணாடி பவுலில் இரு அணியினரும் தங்களின் பந்துகளை போட வேண்டும். இந்த டாஸ்க்கில் நிரூப் ஒரு அணியிலும் வருண் ஒரு அணியிலும் உள்ளனர். அவர்களுக்குள் இந்த டாஸ்க்கிலும் மோதல் வெடித்துள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பர்ஃபெக்ட் காம்போ
அதன்படி இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், வருண் வெர்சஸ் நிரூப் பர்ஃபெக்ட் காம்போ... ரெண்டு பேரும் அப்போ அப்போ பாயிண்ட் தெரியலன்னா உளறுவாங்க... இழுத்து இழுத்து பேசுவாங்க... ஒருவரை ஒருவர் எதிர்கொள்ளும் கர்வத்தின் சரியான நிலை என பதிவிட்டுள்ளார்.

பார்ஷியாலிட்டி பல்ல இலிக்குது
இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், டீம் பிரிச்சதிலேயே உங்க உள்நோக்கம் தெரியுது. பிக்பாஸ் அன்ட் விஜய் டிவி டீம்.. அது எப்படி ராஜு, அபினய், அக்ஷரா, இமான், வருண் மற்றும் தாமரை ஒரு டீம்மில் இருப்பார்கள்? உங்களோட பார்ஷியாலிட்டி பல்ல இலிக்குது... போய் கொண்டைய மறைங்க அப்பரன்டீஸ்... ஒரு தலை பட்சமான சீசன் என பதிவிட்டுள்ளார்.

வெறும் தாமரை இல்லை செந்தாமரை
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாமரையின் பர்ஃபாமன்ஸை பார்த்த இந்த நெட்டிசன், நம்ம தாமரை வெறும் தாமரை இல்லை.. செந்தாமரை...ஒண்ணுமே புரியல பாப்பா னு வார்த்தைக்கு வார்த்தை சொன்ன தாமரை இப்போ என்னடானா வீட்டில் இருக்க எல்லாரையும் left right வாங்குது. வடிவேலு வாய்ஸ் ல சொல்லனும்னா : எந்த ஊரு ஆட்டக்காரியா இருப்ப இவ..இந்தக் கிழி கிழிக்குறா என்று கிண்டலடித்துள்ளார்.

அவுட் ஆஃப் த பாக்ஸ்தான்...
நிரூப்புக்கு தான்தான் டாஸ்க் மாஸ்டர்னு நினைப்பு... யாருமே ரூல்ஸ் படி போறது இல்ல... எல்லாரும் அவுட் ஆஃப் த பாக்ஸ்தான்... கடந்த சீசனில் ஆரி ஒரு ஆள் தான் ரூல்ஸ் படி எந்த லூப் ஹோல்ஸையும் பயன்படுத்தாமல் விளையாடியது.. என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











