என்னய்யா.. சினிமா கதையா சொல்லிட்டு இருக்கீங்க... அவரு வானத்தை போல... இவங்க சர்க்கார்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கூறும் கதையை கேட்ட நெட்டிசன்கள், சினிமா கதையா இருக்கே என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Recommended Video

Bigg Boss 5 Tamil Day 3 Highlights | Priyanka செய்யும் அட்டகாசம், Thamarai Selvi

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது.

இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவர் குறித்தும் சக போட்டியாளர்களும் ரசிகர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இசைவாணி

இசைவாணி

இதில் போட்டியாளர்கள் தாங்கள் கடந்து வந்த பாதையை கண்ணீர் மல்க கூறி வருகின்றனர். முதல் ஆளாக கானா பாடகி இசைவாணி ஆரம்பித்தார். அவர் தனது குடும்பத்தின் வறுமை நிலையை உருக்கமாக கூறினார்.

இமான் அண்ணாச்சி

இமான் அண்ணாச்சி

அவரை தொடர்ந்து பாடகி சின்னப்பொண்ணும் தான் கடந்த பாதையை சக ஹவுஸ்மேட்டுகளுடன் உருக்கமாக பகிர்ந்து கொண்டார். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் இமான் அண்ணாச்சி தான் சினிமா கனவோடு சென்னை வந்த கதையையும் அவர் கடந்து வந்த பாதையை நகைச்சுவையாக பகிர்ந்து கொண்டார்.

அப்பாவின் சந்தேக புத்தி

அப்பாவின் சந்தேக புத்தி

அவரை தொடர்ந்து பேசிய ஸ்ருதி, தான் பட்ட கஷ்டங்களை கூறினார். தனது அப்பாவுக்கும் தன்னுடைய அம்மாவின் அப்பாவுக்கும் ஒரே வயது என்று கூறிய அவர் இரண்டாம் தாரமான தனது அம்மா மீது ஏற்பட்ட சந்தேகத்தால் தனது அப்பா தன்னையும் தனது அம்மாவையும் படுத்திய பாட்டை கூறினார்.

அப்பா இறந்ததால் சந்தோஷம்

அப்பா இறந்ததால் சந்தோஷம்

தொடர்ந்து பேசிய அவர் தனது அப்பாவுக்கு தான் வேண்டாத குழந்தை என்றும், அப்பா இறந்த போது இனிமேல் தங்களுக்கு விடுதலை என்று சந்தோஷப்பட்டதாகவும் கூறி சக போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்களையும் கலங்க வைத்தார். ஆனால் அவர் இறுதியாக பேசிய சில விஷயங்களை கேட்ட ரசிகர்கள் இது என்ன விஜய்யின் சர்கார் பட கதையை போல் உள்ளது என்று கூறி வருகின்றனர்.

சிரித்த நிரூப்

சிரித்த நிரூப்

முன்னதாக பேசிய இமான் அண்ணாச்சி, தான் பட்ட கஷ்டங்களை எல்லாம் நகைச்சுவையாக கூறினார். அப்போது அவரது கதையை கேட்டு நிரூப் சிரித்தார். அதற்கு உஷ் சிரிக்காதே என கூறியுள்ளார் அபிஷேக் ராஜா. இதனால் கடுப்பான நிரூப், சக போட்டியாளரான சிபியிடம் பஞ்சாயத்துக்கு சென்றார்.

வானத்தை போல படத்தின் கதை

வானத்தை போல படத்தின் கதை

இதன் தொடர்ச்சியாக இமான் அண்ணாச்சியிடமே நீங்கள் சொன்ன கதையை கேட்டு சிரித்தது தவறா என்றார். அதனைக் கேட்ட அண்ணாச்சி தவறே இல்லை என்றார். மேலும் தான் சொன்னது தனது கதையே இல்லை அது வானத்தை போல படத்தின் கதை என்று கிண்டலாக கூறினார். இதனை கேட்ட நெட்டிசன்ஸ் என்னய்யா எல்லாம் சினிமா கதைகளை கூறி வருகிறீர்கள் என கிண்டலடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X