twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரியங்கா இதை கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்க மாட்டாங்க... புரமோவை பார்த்து கொண்டாடும் நெட்டிசன்ஸ்!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் தாமரை மற்றும் பிரியங்காவை விளாசி வருகின்றனர்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டு புரமோக்களிலுமே பிரியங்காவும் தாமரை செல்வியும் சண்டை போடுவது தெரியவந்துள்ளது.

    இந்த புரமோக்களை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதன்படி இரண்டு பேரையுமே விளாசி வருகின்றனர்.

    பேச்சுலர் படம் புதிய பாதையை உருவாக்கும்… ஜிவி பிரகாஷ் குஷிபேச்சுலர் படம் புதிய பாதையை உருவாக்கும்… ஜிவி பிரகாஷ் குஷி

    ஜூலி பாடாய் படுத்தியிருக்கு...

    ஜூலி பாடாய் படுத்தியிருக்கு...

    இன்றைய புரமோக்களில் தாமரையின் பர்ஃபாமன்ஸை பார்த்த இந்த நெட்டிசன், அய்யய்யோ அந்த ஜூலி பாடா படுத்தியிருக்கு போல.. தாமரை அக்காவ... என கிண்டலடித்துள்ளார்.

    எல்லாவற்றிலும் சண்டை சச்சரவு

    எல்லாவற்றிலும் சண்டை சச்சரவு

    இன்றைய இரண்டாவது புரமோவில் தாமரை பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், அப்பாவி பாவனியிடம் பேசுவது டாஸ்க்கா
    அல்லது நியாயம் கேட்கிறார்களா? கேட்டாலும் கேட்பார் இந்த அப்பாவி.. தாமரை தொல்லை தாங்க முடியாமல்
    அபிஷேக் மற்றும் அபினய் தானாக வெளியே ஓடிவிட வேண்டியது தான் போல... எல்லாவற்றிலும் சண்டை சச்சரவு.. இதென்ன குணம் என்று கேட்பவர்களுக்கு அதுமட்டும் தான் அப்பாவி... என பதிவிட்டுள்ளார்.

    வில்லேஜ் விஞ்ஞானி அக்கா

    வில்லேஜ் விஞ்ஞானி அக்கா

    இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், தாமரை அக்கா ஒன்றும் தெரியாத புரியாத பாப்பா நீங்களா இப்படி எல்லாம் பேசுவது.. நீங்கள் வெளியே வந்து ஒரு புத்தகம் வெளியிடுங்கள் பிறர் மனசை எப்படி எல்லாம் புரிந்து கொள்வது காயப்படுத்துவது என்று நீங்கள் ஒரு வில்லேஜ் விஞ்ஞானி அக்கா என்று பதிவிட்டுள்ளார்.

    பயம் நல்லாவே தெரியுது..

    பயம் நல்லாவே தெரியுது..

    இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பிரியங்காவின் நிலைமை இப்படி ஆயிடுச்சே... ஒரு புரோமோல அடி வாங்குனா பரவா இல்லை.. இப்படி தாமரையோட எல்லா புரோமோக்களிலும் அடி வாங்கிட்டு இருக்கீயே.. பிரியங்காவுக்கு தாமரை கிட்ட இருந்து இந்த மாதிரி எதிர் வாதங்கள் வரும்னு நினைச்சி கூட பாத்து இருக்க மாட்டார்.. அவரோட பயம் நல்லாவே தெரியுது.. என பதிவிட்டுள்ளார்.

    போன சீசன் ரம்யா பாண்டியன்

    போன சீசன் ரம்யா பாண்டியன்

    இன்றைய புரமோக்களை பார்த்த இந்த நெட்டிசன், பிரியங்காவை பார்க்கும்போது... போன சீசனில் இருந்த ரம்யா பாண்டியனை பார்க்கிற மாதிரி இருக்கு... என பதிவிட்டுள்ளார்.

    பிரியங்கா திருந்துவாரா?

    பிரியங்கா திருந்துவாரா?

    இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரமோக்களை பார்த்த இந்த நெட்டிசன், ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக போட்டியாளர்களை மட்டம் தட்டி பேசுவதும் அவர்களுக்குள் சிண்டு முடித்து விடுவதும் பார்க்க நகைச்சுவையா தான் இருக்கும். ஆனா அதையே நடைமுறை வாழ்க்கையில் செய்தால் இப்படித்தான் அடி விழும். பிரியங்கா திருந்துவாரா? என கேட்டு விளாசியுள்ளார்.

    கர்வம் கண்டமான காட்சி..

    கர்வம் கண்டமான காட்சி..

    இன்றைய புரமோக்களை பார்த்த இந்த நெட்டிசன், பெரிய தொலைக்காட்சி தொகுப்பாளினின்னு சொன்னீங்க? ஆனா சிறிய நாடக கலைஞர் #தாமரைக்கு பதில் சொல்ல முடியாம ஓடுது.. எதிர்த்து அடிக்க ஆளில்லைன்னு நினைத்த கர்வம் கண்டமான காட்சி என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

    English summary
    Biggboss Tamil 5: Netizens trolls Priyanka and Thamarai for fighting in Biggboss house. Biggboss promos reveals the fight between Priyanka and Thamarai Selvi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X