ஏன் சுத்தமா கன்டென்ட் இல்லயா? பிக்பாஸ் புரமோவை பார்த்து காண்டாகும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் இதெல்லாம் ஒரு புரமோவா என கேட்டு விளாசி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோ உப்பு சப்பில்லாமல் உள்ளது. புரமோவில் பேசும் நடிகர் கமல்ஹாசன், இந்த வாரம் 9 பேர் நாமினேட் ஆகியுள்ளீர்கள்.
உங்களில் யார் வெளியே போவீர்கள் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்கிறார். மேலும் பிரியங்காவிடம் இருந்தே ஆரம்பிப்போம் என்று அவரிடம் கேட்கிறார்.

மனசாட்சியே இல்லையா?
ஆனால் என்னை கேட்காதீர்கள் என நழுவுகிறார் பிரியங்கா இதனால் பார்வையை நிரூப் பக்கம் திருப்புகிறார் கமல். இந்த புரமோவில் ஒரு சுவாரசியமும் இல்லாமல் கடமையே என்று உள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள், இதெல்லாம் புரமோவா உங்களுக்கு மனசாட்சியே இல்லையா என கெட்டு வருகின்றனர்.

இதெல்லாம் புரமோவா?
இன்றைய எபிசோடின் மூன்றாவது புரமோவில் சுவாரசியமான சம்பவங்கள் எதுவும் இல்லாததை பார்த்த இந்த நெட்டிசன், இது எல்லாம் ஒரு புரமோவா என கேட்டுள்ளார்.

குறைந்தபட்ச தரம் - முயற்சியுங்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இதையெல்லாம் புரமோ என்று கன்ஸிடர் செய்ய வேண்டுமா? ஒரு புரமோவுக்கான குறைந்தபட்ச தரத்தையும் எதிர்பார்ப்பையும் பராமரிக்க முயற்சி செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.

ஐக்கிதான் ஆப்ஷன்
இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது புரமோவில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என கமல் கேட்டதை பார்த்த இந்த நெட்டிசன், இந்த வாரம் வெளியேற்ற ஐக்கிதான் சரியான ஆப்ஷன் என்று கூறி பதிவிட்டுள்ளார்.

நாமதான் போக போறோம் போல
இன்றைய மூன்றாவது புரமோவில் அபினய் ரியாக்ஷனை பார்த்த இந்த நெட்டிசன் "எனக்கு என்னமோ நாம தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து போக போறோம் போல....." - அபிநய் மைண்ட் வாய்ஸ் என பதிவிட்டுள்ளார்.

எப்படி போடுறீங்க?
இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இது புரமோன்னு மனசாட்சி இல்லாம எப்படி போடுறீங்க என்று கேட்டு விளாசியுள்ளார்.

கன்டென்ட் இல்லன்னு அர்த்தம்
இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ படு மொக்கையாக இருப்பதை பார்த்த இந்த நெட்டிசன், வேற ஒன்னும் கன்டென்ட் இல்லன்னு அர்த்தம் என்று பங்கமாய் கலாய்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications