தயவுசெஞ்சு அவர வெளியே அனுப்புங்க.. வெறுப்பேத்துறார் மை லார்டு.. அபிஷேக்கால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் அபிஷேக் செய்யும் அலப்பறைகளை பார்த்த நெட்டிசன்கள் தயவு செஞ்சு அவரை வெளியேற்றுங்கள் என கெஞ்சாத குறையாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
யூட்யூபரான அபிஷேக் ராஜா பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். இதில் மற்ற போட்டியாளர்களை விளையாடவே விடாமல் தனது கருக்களை திணித்து வந்தார்.
அதோடு சில போட்டியாளர்களுக்கு எதிராக சிண்டு முடித்தும் வந்தார் அபிஷேக் ராஜா. இதனால் கடுப்பான நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அவரை திட்டித் தீர்த்தனர்.

இரண்டாவது வாரமே..
அவரை வெளியேற்றுங்கள் என கோரிக்கை விடுத்து வந்த நெட்டிசன்கள், அபிஷேக் ராஜா எவிக்ஷன் புராசஸிற்கான நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பெற்றதுமே இதற்காகதான் காத்திருந்தோம் என்பதை போல இரண்டாவது வாரமே அவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றினர்.

மீண்டும் அதே வேலை
இதனை தொடர்ந்து அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளித்தது விஜய் டிவி. இதனால் இரண்டாவது முறையாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் வாய்ப்பை பெற்றார் அபிஷேக் ராஜா. ஆனால் இம்முறையும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தது முதல் அடுத்தவர்களை விளையாட விடாமல் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்.

கொடி பிடிக்காத குறையாக..
நேற்றைய டிவி டாஸ்க்கிலும், அபிஷேக்கின் ஆதிக்கத்தை பார்க்க முடிந்தது. சிபி கூறியதை காதில் வாங்கிக்கொள்ளாமல் அவரது கருத்துக்கு மதிப்பளிக்காமல் தன் இஷ்டத்துக்கு விளையாடினார். இதனை பார்த்த ரசிகர்கள் அபிஷேக்கை வெளியேற்றுங்கள் என கொடி பிடிக்காத குறையாக கேட்டு வருகின்றனர்.

அவங்கள பேச விடு..
நேற்றைய எபிசோடை பார்த்த இந்த நெட்டிசன், இந்த அபிஷேக் வேற, வர 15 நிமிஷத்துலேயும் பிரேக் போட்டு... அடேய் அவங்கள பேச விடு... பாவம் என பதிவிட்டுள்ளார்.

கோபத்தின் முதிர்ச்சியற்ற வெளிப்பாடு
நேற்றைய எபிசோடை பார்த்த இந்த நெட்டிசன், அபிஷேக் இதெல்லாம் க்ரியேட்டிவிட்டியா? இது கோபத்தின் முதிர்ச்சி இல்லாத வெளிபாடு... மொத்த செக்மெண்டும் இமான் அண்ணாச்சி மற்றும் தாமரை செல்வி மீதான பிரியங்காவின் பர்சனல் வெஞ்சன்ஸ் என குறிப்பிட்டுள்ளார்.

வெளியே தூகி போடுங்க
நேற்றைய எபிசோடை பார்த்த இந்த நெட்டிசன், நிரூப்புக்கு இமான் அண்ணாச்சி பற்றி பேச ஓகே என்றால் பேசட்டும் என சிபி கூறினார். ஆனால் அபிஷேக் அதனை ஏற்கவில்லை. அபிஷேக்கின் அஜெண்டாவில் அடுத்தவர்கள் விளையாட வேண்டும்... அவரை முதலில் வெளியே தூக்கி போடுங்கள் என பதிவிட்டுள்ளார்.

டைரக்ட் பண்றீயா?
நேற்றைய எபிசோடை பார்த்த இந்த நெட்டிசன், அபிஷேக்.. ஹாஹா... இப்படி ஒரு காமெடி பீஸை எங்கேயும் பார்க்கல சாமி... உனக்கு உன் ரோலையே சரியா பண்ண வரல... மத்த போட்டியாளர்களை டைரக்ட் பண்றீயா என்று கேட்டு சிரித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











