அப்படியே எங்க மனசுல உள்ளதை சொல்லிட்டீங்க அக்கா... பிக்பாஸ் தாமரையை கொண்டாடும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் தாமரை செல்வி பேசியதை பார்த்து ஹேப்பியாகியுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் நடைபெற்ற கேப்டன் டாஸ்க்கில் அபினய் வெற்றி பெற்றார். இதனால் முதல் முறையாக கேப்டன் ஆனார் அபினய்.

ஆனால் இசைவாணி தான் வைத்திருந்த காயின் மூலம் அவரது கேப்டன் பதவியை தட்டிப் பறித்தார். இதனால் தன்னை நிரூபிக்க முடியாமல் திணறி வருகிறார் நடிகர் அபினய்.

கேப்டன் டாஸ்க்

கேப்டன் டாஸ்க்

இந்நிலையில் இன்று வெளியான முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டில் இன்று கேப்டன் டாஸ்க் நடைபெறுவது தெரியவந்துள்ளது. இந்த வார கேப்டன் டாஸ்க்கில் போட்டியிடும் போட்டியாளர்கள் கடந்த வாரமே தேர்வு செய்யப்பட்டனர்.

போல்டாக கூற வேண்டும்

போல்டாக கூற வேண்டும்

அதன்படி பிரியங்கா, சிபி, ஐக்கி பெர்ரி மற்றும் நிரூப் ஆகிய நான்கு பேர் கேப்டன் டாஸ்க்கில் பங்கேற்கின்றனர். இதில் போட்டியிடும் போட்டியாளர்கள் யார் கேப்டன் ஆக கூடாது என போல்டாக கூற வேண்டும் என்று கூறியுள்ளார் பிக்பாஸ். இதனை இமான் அண்ணாச்சி ஹவுஸ்மேட்டுகளுக்கு தெரியப்படுத்துகிறார்.

சும்மா இருக்கலாம்

சும்மா இருக்கலாம்

தொடர்ந்து கார்டன் ஏரியாவில் கேப்டன் பதவிக்கான டாஸ்க் நடைபெறுகிறது. இதில் நிரூப்புக்கும் தாமரை செல்விக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது பேசும் தாமரை செல்வி, இப்படிலாம் ஒருத்தன் கூட நட்பு வச்சிக்கிட்டு இருக்கிறதுக்கு சும்மா இருக்கலாம்.. என்று கூறி பிரியங்கா வைத்துள்ள குடுவையில் தண்ணீரை ஊற்றுகிறார்.

எங்க மனசுல இருப்பதை...

எங்க மனசுல இருப்பதை...

இதனை பார்த்த ரசிகர்கள் தங்கள் மனதில் உள்ளதை அப்படியே தாமரை செல்வி கூறி விட்டதாக தெரிவித்து வருகின்றனர். இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அக்கா இப்படிலாம் ஒருத்தன் கூட நட்பு வச்சிக்கிட்டு இருக்கிறதுக்கு சும்மா இருக்கலாம்.. அப்படியே எங்க மனசுல இருக்கத சொல்லிட்ட என்று பதிவிட்டுள்ளார்.

எல்லாரும் சொல்லிட்டாங்க...

எல்லாரும் சொல்லிட்டாங்க...

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இதுவரை தாமரை அக்கா பேசிய டயலாக்கிலேயே பெஸ்ட் இதுதான். இப்படியெல்லாம் ஒருத்தன் கூட நட்பு வச்சுக்கிறதுக்கு சும்மா இருக்கலாம்... பிரியங்கா எல்லாரும் சொல்லிட்டாங்க... தலை கீழாதான் குதிக்க போறேன்னு நின்னா ஒன்னும் பண்ண முடியாது என்று கூறியுள்ளார்.

ஸ்ட்ராங் பிளேயரான தாமரை

ஸ்ட்ராங் பிளேயரான தாமரை

இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், தாமரை செல்வி அக்கா இன்னொசன்ட் பிளேயரில் இருந்து ஸ்ட்ராங் பிளேயராக ட்ரான்ஸ்ஃபர் ஆகிவிட்டார் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X