அதுக்குள்ள குரூப்பா? இந்த வாரம் யாருக்கு பாயாசம் தெரியலையே... ப்ரமோவால் ஃபீலாகும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோவை பார்த்த நெட்டிசன்கள் இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவாரோ என்று கவலை பட தொடங்கியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோவில் பாவனி இசைவாணியிடம் புறணி பேசுகிறார். பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் ஒருவர் குறித்து பேசும் பாவனி, தானே போய் பேசினாலும் தன்னை புறக்கணிப்பதாக கூறுகிறார்.

மேலும் பிக்பாஸ் வீட்டில் குரூப்புகள் இருப்பதாகவும் கூறுகிறார் பாவனி. இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பாவம் புரியலப்போல

பாவம் புரியலப்போல

இன்றைய நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், எல்லா சீசன்லேயும்ம் ஒரே ஃபார்முலா வொர்க்கவும் ஆகாதுனு பாவம் புரியலப்போல. இசைவானி ஃபார்முலாவ மாத்துமா... என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

குரூப் ஆரம்பிக்க போறாங்க

குரூப் ஆரம்பிக்க போறாங்க

மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், வசனமே புரியல.. ஆனா ஒன்னு குரூப் ஆரம்பிக்க போறானுங்கனு மட்டும் புரியுது.. இவ்வளவு பேரு இருக்கும் போது எப்படி எல்லார் கூடவும் வந்த ஒரு வாரத்துல பழக முடியும்..

மிங்கில் ஆகல ஜெல் ஆகலன்னு புலம்பமா இதை எல்லாம் அழகா மேனேஜ் பண்ணுறவன் சூப்பரா வருவான் என்று குறிப்பிட்டுள்ளார்.

உள்ளேயே குரூப்

உள்ளேயே குரூப்

மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், வெளியேதான் அவங்க ஃபேன்ஸ் குரூப் ஆரம்பிச்சிட்டு திரியிறாங்கனா... இதுங்க உள்ளாராயே குரூப் ஆரம்பிச்சிட்டு திரியிதுங்க என்று விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

 ஒரு வாரம் தானே ஆச்சு..

ஒரு வாரம் தானே ஆச்சு..

இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அடேய்.. ஒரு வாரம் தானடா ஆச்சு

அதுக்குள்ள குரூப்ன்னுல்லாம் பேசிட்டு இருக்கீங்க..
எபிசோடு பார்த்தா தான் கொஞ்சம் புரியும் போல.. ஆனா இது நல்லதுக்கு இல்ல அம்மனிங்களா என்று குறிப்பிட்டுள்ளார்.

டயலாக் மட்டும் மாறாது..

டயலாக் மட்டும் மாறாது..

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் தனியாக உணருகிறேன்.. புறக்கணிப்படுகிறேன்.. தனியாக உள்ளேன்.. தனிமை படுத்துறாங்க.. குரூப்பிஸம்.. பிக்பாஸ் செட் மாறும் போட்டியாளர்கள் மாறுவாங்க. ஆனால் இந்த டயலாக் மட்டும் மாத்த மாட்றீங்கப்பா என பதிவிட்டுள்ளார்.

யாருக்கு பாயாசம் தெரியலையே

யாருக்கு பாயாசம் தெரியலையே

இன்று பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் புராசஸ் நடைபெறுவதை பார்த்த இந்த நெட்டிசன், இந்த வாரம் யாருக்கு பாயாசம் தெரியலையே...என யார் எவிக்ட் ஆகப் போகிறார் என்பதை குறிப்பிட்டுள்ளார்.

பெயரை கெடுத்துக்கொள்ளும் பாவனி

பெயரை கெடுத்துக்கொள்ளும் பாவனி

பிக்பாஸ் நிகழ்ச்சயின் இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த நெட்டிசன், குரூப்ஸ் பத்தி தேவையில்லாம பேசி பாவனி தனது பெயரை கெடுத்துக்கொள்கிறார். அவர் சீசன் 4ல் பயன்படுத்தப்பட்ட டாக்டிஸை பயன்படுத்த முயற்சிக்கிறார் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X