பிக்பாஸ் நிரூப்போட எக்ஸ் லவ்வர் யாஷிகா மட்டுமில்ல.. இவங்களும்தான்.. தீயாய் பரவும் போட்டோஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நிரூப் தன்னுடைய மற்றொரு முன்னாள் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பல்வேறு புதிய முகங்கள் பங்கேற்றுள்ளனர்.

அவர்களில் ஒருவர் நிரூப். மாடலான இவர், ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

யாஷிகாவின் முன்னாள் காதலர்

யாஷிகாவின் முன்னாள் காதலர்

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். 6 அடிக்கும் மேல் உயரம், நீண்ட முடி, தாடி மீசை என ஆளே ஒரு டைப்பாக உள்ளார் நிரூப். நிரூப் பிக்பாஸ் முன்னாள் போட்டியாளரும் பிரபல நடிகையுமான யாஷிகா ஆனந்தின் முன்னாள் காதலர் ஆவார்.

நடிகை யாஷிகா ஆனந்த்

நடிகை யாஷிகா ஆனந்த்

நடிகை யாஷிகா பிக்பாஸ் 2 சீசனில் பங்கேற்றார். அங்கு சக போட்டியாளரும் நடிகையுமான ஐஸ்வர்யா தத்தாவுடன் அவருக்கு நல்ல நட்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தனது பிக்பாஸ் தோழியான ஐஸ்வர்யா தத்தாவுடன் தங்களின் ஓராண்டு நட்பை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டார் ஹோட்டலில் பார்ட்டி பண்ணி கொண்டாடினார் யாஷிகா.

கட்டிப்பிடித்து லிப்லாக் கொடுத்த நிரூப்

கட்டிப்பிடித்து லிப்லாக் கொடுத்த நிரூப்

தங்களின் கொண்டாட்டத்தை சோஷியல் மீடியாவில் லைவ் செய்தார் யாஷிகா. அப்போது அவருடைய ஆண் நண்பரான நிரூப், யாஷிகாவை கட்டிப்பிடித்து உதட்டுடன் உதடு வைத்து முத்தம் கொடுத்தார். நேரலையில் அவர் செய்த இந்த காரியம் பெரும் வைரலானது.

யாஷிகா என்னுடைய முன்னாள் காதலி

யாஷிகா என்னுடைய முன்னாள் காதலி

இதனை தொடர்ந்து இருவரும் நெருக்கமாக இருக்கும் பல்வேறு போட்டோக்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிரூப், ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்க்கில் யாஷிகா குறித்து பேசினார். அதாவது யாஷிகா தன்னுடைய முன்னாள் காதலி என்றும், சினிமாவில் தனக்கு யாரையுமே தெரியாத நிலையில் யாஷிகாவால்தான் தான் இந்த அளவுக்கு வளர்ந்ததாகவும் கூறி அவரது புகழை பாடினார்.

பிக்பாஸ் அபிராமியுடன் காதல்

பிக்பாஸ் அபிராமியுடன் காதல்

மேலும் ஒரு பெண்ணால் ஒரு ஆண் வளரக் கூடாதா என்றும் கேள்வி எழுப்பினார். இந்நிலையில் நிரூப் யாஷிகாவை காதலிப்பதற்கு முன்பாக மற்றொரு பிரபலத்தை காதலித்தது தெரியவந்துள்ளது. அதாவது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற மாடலும் நடிகையுமான அபிராமியை நிரூப் காதலித்துள்ளார்.

காதல் தோல்வியில் முடிந்தது

காதல் தோல்வியில் முடிந்தது

அபிராமி ஏராளமான விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். அஜித்தின் நேர் கொண்ட பார்வை படத்திலும் நடித்துள்ளார் அபிராமி. இதன் மூலம் பெரும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போதே தான் ஒருவரை காதலித்தாகவும் அந்த காதல் தோல்வியில் முடிந்ததாகவும் கண்ணீர் விட்டார் அபிராமி.

முகெனுடன் ஒரு தலை காதல்

முகெனுடன் ஒரு தலை காதல்

அதோடு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த சக போட்டியாளரான மலேசியாவை சேர்ந்த பாடகர் முகென் ராவை ஒரு தலையாக காதலித்தார் அபிராமி. ஆனால் அபிராமியின் காதலை முகென் ஏற்கவில்லை. இந்நிலையில் நிரூப்பும் அபிராமியும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நிரூப்பின் முன்னாள் காதலிகள்

நிரூப்பின் முன்னாள் காதலிகள்

நிரூப் யாஷிகாவுக்கு முன்பு அபிராமியை தான் காதலித்ததாகவும் ஆனால் அபிராமியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த பிறகு அவரை பிரிந்து யாஷிகாவை காதலித்ததாகவும் கூறப்படுகிறது. பிக்பாஸ் பிரபலங்களான யாஷிகா ஆனந்த் மற்றும் அபிராமி இருவருமே நிரூப்பின் முன்னாள் காதலிகள் தான் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X