பனிஷ்மென்ட் கொடுத்துக்கிட்டே இரு... பாவனியை கொம்பு சீவி விட்ட வருண்.. கொலாப்ஸ் பண்ணும் நிரூப்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் ரூல்ஸை பிரேக் பண்ணி மொத்த வீட்டின் அமைதியையும் கெடுத்தார் நிரூப்.
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ஆகாயம் காயினை வைத்துள்ள பாவனிக்கு ஆளுமை வழங்கப்பட்டுள்ளது. இதனால் லிவிங் ஏரியாவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார் பாவனி.
தனது அனுமதி இல்லாமல் லிவிங் ஏரியாவுக்குள் வரும் ஹவுஸ்மேட்டுகளுக்கு தண்டனை கொடுத்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் டாஸ்க் என்றாலும் சரி , விதிகளை மீறும் முதல் ஆளாக உள்ளார் நிரூப்.

நிரூப்புக்கு தண்டனை
பாவனியின் அனுமதி இல்லாமல் பிக்பாஸ் வீட்டின் லிவிங் ஏரியாவுக்குள் வந்தார் நிரூப். இதற்காக லிவிங் ஏரியாவில் ஆளுமை பெற்றுள்ள பாவனி அவருக்கு தண்டனை கொடுத்தார். 50 முறை ஸ்கவுட்ஸ் எடுக்குமாறு கூறினார் பாவனி.

ஏன் ரூல்ஸை ஃபாலே பண்ணணும்?
கொடுத்த தண்டனையை எதிர்கொண்ட நிரூப் மீண்டும் மீண்டும் பாவனியின் பேச்சை கேட்காமல் விதிகளை மீறினார். இதனால் கடுப்பான பாவனி, ஈவினிங் நிரூப்புக்கு பனிஷ்மெண்ட் இருக்கு என்றார். இதனைக் கேட்ட நிரூப், இப்போதும் பனிஷ்மெண்ட் ஈவினிங்கும் பனிஷ்மெண்ட் கொடுக்கப் போகிறாயா? பிறகு நான் ஏன் ரூல்ஸை ஃபாலே பண்ண வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கொம்பு சீவிய வருண்
இதனால் கடுப்பான பாவனி, லிவிங் ஏரியாவை சுத்தம் செய்யும் படி நிரூப்பை பணித்தார். ஆனாலும் நிரூப் அடாவடியாக பேசிக் கொண்டிருந்தார். நொந்து போன பாவனி வருணிடம் இதுகுறித்து புலம்பி தீர்த்தார். அதனைக் கேட்ட வருண், ரூல்ஸை பிரேக் பண்ண பண்ண, பனிஷ்மென்ட் கொடு என்று கூறி கொம்பு சீவி விட்டார்.

பேச்சை கேட்கே மாட்டேன்
மீண்டும் பாவனியின் அனுமதி இல்லாமல் டைனிங் ஏரியாவில் சுற்றியதால் வீட்டை 100 முறை ரூல்ஸை பிரேக் பண்ண மாட்டேன் என்று கூறியப்படியே வீட்டிற்குள் ஓட வேண்டும் என்றார். அதையும் செய்ய முடியாது என்று ரகளை செய்தார் நிரூப். கடைசியாக பாவனி சொன்னப்படி வீட்டில் ஓடினாலும் மற்றவர்களின் ஆளுமை இருக்கும் போது அவர்களின் பேச்சை கேட்கவே மாட்டேன் என்பதை போல் நடந்து கொண்டார் மொத்த பேரையும் டென்ஷனாக்கினார் நிரூப்.


Click it and Unblock the Notifications











