இதெல்லாம் ஓவர்... பச்சை மிளகாய் பாகற்காய் சாப்பிட சொல்லும் நிரூப்... கடுப்பாகும் ஹவுஸ்மேட்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் நெருப்பு காயினின் ஆற்றலை பயன்படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நெருப்பு காயினை வைத்திருந்த இசைவாணிக்கு ஆளுமை வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வாரம் நிலம் காயினுக்கான ஆற்றல் வழங்கப்பட்டுள்ளது. இந்த காயினை வைத்துள்ள நிரூப்புக்கு பிக்பாஸ் வீட்டின் பெட் ரூம்மில் முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

உதவியாளர் அக்ஷரா
இதனை தொடர்ந்து அவருக்கு ஏராளமான சலுகைகளை வாரி வழங்கியுள்ளார் பிக்பாஸ். நிரூப் தனக்கு உதவியாளராக அக்ஷரா ரெட்டியை நியமித்துள்ளார். முதலில் அவருக்கு உதவியாளராக இருக்க முடியாது என்று கூறிய அக்ஷரா பின்னர் ஒப்புக்கொண்டு உதவியாளராக இருந்து நிரூப் சொல்லும் வேலைகளை செய்து வருகிறார்.

7 நிமிடங்கள் மட்டுமே
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் பெட் ரூம்மை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள நிரூப், பெட் ரூமை பயன்படுத்திக் கொள்ள இன்னும் 7 நிமிடங்கள் மட்டுமே உள்ளது என்று கூறுகிறார்.

வார்னிங் கொடுத்த நிரூப்
பெண் போட்டியாளர்கள் பெட்ரூமில் மேக் அப் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது இன்னும் 2 நிமிடங்கள் இருக்கிறது என நேரம் குறைந்து வருகிறது என எச்சரிக்கை கொடுத்துக் கொண்டே இருக்கிறார். இதனால் வேக வேகமாக தயாராகிறார்கள் ஹவுஸ்மேட்ஸ்.

பச்சை மிளகாய் பாகற்காய்
தொடர்ந்து பேசும் நிரூப், யாரெல்லாம் ரூல்ஸை ஃபாலோ பண்ணவில்லையோ அவர்கள் பாகற்காய் மற்றும் பச்சை மிளகாய் சாப்பிட வேண்டும் என கூறுகிறார். இதையடுத்து கொடுத்த நேரத்தை தாண்டி பெட் ரூமில் இருந்த போட்டியாளர்களை டைனிங் டேபிளுக்கு அழைத்த நிரூப் அவர்களுக்கு சாப்பிட பச்சை மிளகாயும் பாகற் காயும் கொடுக்கிறார்.

தண்டனை அனுபவிக்கும் போட்டியாளர்கள்
அதன்படி, பாவனி, ஸ்ருதி, பிரியங்கா, மதுமிதா என பெண் போட்டியாளர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது. பச்சை மிளகாய் சாப்பிட மறுக்கும் பிரியங்கா, மிளகாய் சாப்பிட்டால் எரியும் என்கிறார். ஸ்ருதியும் பாவானியும் கன்ட்ரோல் செய்துக் கொண்டு பச்சை மிளகாயையும் பாகற்காயையும் சாப்பிடுகிறார்கள்.

ஏற்கனவே ஏழாம் பொருத்தம்
அப்போது பேசும் நிரூப், அக்ஷராவையும் இதுபோல் சாப்பிட வைக்க வேண்டும் என கூறுகிறார். ஏற்கனவே அக்ஷராவுக்கும் நிரூப்புக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. இந்நிலையில் அவரை வச்சு செய்யவே உதவியாளராக ஆக்கிக்கொண்ட நிரூப் தற்போது பச்சை மிளகாய் பாகற்காய் சாப்பிடும் தண்டனையையும் கொடுக்க போறதாக சொல்கிறார்.

செம காண்டாகும் ஹவுஸ்மேட்ஸ்
நிரூப் இதுபோன்று கொடுக்கும் டாஸ்க்குகளால் பிக்பாஸ் வீட்டில் இன்னும் பிரச்சனைகள் அதிகமாகும் என தெரிகிறது. குறிப்பாக பெண் போட்டியாளர்கள் அவர் மீது செம காண்டில் உள்ளனர். இதனால் இந்த வாரம் பிக்பாஸில் அனல் பறக்கும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











