பிக்பாஸ் ஃபினாலே ரேஸ்.. பஸ்ஸில் இருந்து இறங்க மறுத்த நிரூப்... கடைசியில் நடந்தது என்ன?
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் நாமினேஷன் புராசஸில் இருந்து இரண்டாவது நபராக நிரூப் காப்பாற்றப்பட்டார்.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்துள்ளது. இதனை முன்னிட்டு பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு இடையே ஃபினாலே ரேஸ் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஃபினாலே ரேஸில் ஒவ்வொரு நாளும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் வெற்றி பெறும் போட்டியாளர் நாமினேஷன் புராசஸில் இருந்து காப்பாற்றப்படுவார்.

பஸ் டாஸ்க்
அந்த வகையில் முதல் நாள் நடைபெற்ற ரேங்க் டாஸ்க்கில் சிபி வெற்றி பெற்றார். இதன் மூலம் நாமினேஷனில் இருந்து முதல் நபராய் சிபி காப்பாற்றப்பட்டார். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் ஃபினாலே ரேஸின் இரண்டாவது டாஸ்க்காக பஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

போட்டியாளர்களுக்கு இடையூறுகள்
இதில் பிக்பாஸ் பஸ்ஸில் யார் கடைசி வரை நிற்கிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள். பஸ்ஸில் போட்டியாளர்கள் ஏறியதுமே துர்நாற்றம் மிக்க தண்ணீர் மற்றும் புகை ஆகியவை அனுப்பப்பட்டு போட்டியாளர்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன.

பீஸா அனுப்பிய பிக்பாஸ்
இதனை தொடர்ந்து சில போட்டியாளர்கள் பஸ்ஸில் இருந்து இறங்கினர். சில போட்டியாளர்கள் இறங்கவே முடியாது என விடாப்பிடியாக இருந்தனர். ஒரு கட்டத்தில் பேருந்தில் இருந்து இறங்கிய போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் பீசா அனுப்பி வைத்தார்.

பீஸாவுக்காக இறங்கிய பிரியங்கா
மேலும் அதனை கார்டன் ஏரியாவில் பேருந்துக்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கு முன்பு அமர்ந்து சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்றும் டாஸ்க் கொடுத்தார் பிக்பாஸ். இதனை பார்த்த பிரியங்கா பீஸாவுக்காக பஸ்ஸில் இருந்து இறங்கினார்.

காப்பாற்றப்பட்ட நிரூப்
அவரை தொடர்ந்து வருண், தாமரை செல்வி, அபினய் மற்றும் அமீர் ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் இருந்து இறங்கினர். இதில் கடைசி வரை நின்ற நிரூப் இந்த வார நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டார். இதன்மூலம் இந்த வார நாமினேஷன் புராசஸில் இருந்து நிரூப் இரண்டாவது நபராக காப்பாற்றப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











