பிக்பாஸ் வீட்டின் பெஸ்ட் பிளேயர் இவர்தான்.. சகுனி யார் தெரியுமா? விருதுகளை குவித்த ஹவுஸ்மேட்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் ஹிவுஸ்மேட்டுகளுக்கு பிக்பாஸ் விருதுகள் வழங்கப்பட்டன.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் ஆகாயம் காயினின் ஆளுமைய பெற்று அதிகாரத்தை காட்டி அனல் பறக்க விட்டார் பாவனி.

ஹவுஸ்மேட்டுகளுக்கு கன்னாபின்னாவென பனிஷ்மெண்டுகளை கொடுத்த பாவனி, ஒரு கட்டத்தில் தன் பேச்சை யாரும் கேட்பதில்லை. பெண்கள் ரூல் செய்யும் போது யாரும் மதிப்பதில்லை என்று புலம்பினார்.

பொம்மை டாஸ்க் நிறைவு

பொம்மை டாஸ்க் நிறைவு

பின்னர் கடந்த மூன்று நாட்களாக நடந்து வந்த பொம்மை டாஸ்க்கும் நேற்றுடன் முடிந்தது. இதில் ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி விளையாடிய நிரூப் வெற்றி பெற்றார்.

பிக்பாஸ் விருது விழா

பிக்பாஸ் விருது விழா

அவருக்கு மட்டும் லக்ஸரி பட்ஜெட்டின் பாயிண்ட்ஸ் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பிக்பாஸ் விருதுகளுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. பெஸ்ட் பிளேயர், பெஸ்ட் எண்டெர்டெய்னர், பெஸ்ட் டிரெஸ்டு என மூன்று பிரிவுகளில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

ரெட் கார்ப்பெட் வரவேற்பு

ரெட் கார்ப்பெட் வரவேற்பு

இதில் ஒவ்வொரு போட்டியாளரும் கன்ஃபெஷன் ரூம்முக்குள் சென்று வாக்களித்தனர். பின்னர் ஆக்டிவிட்டி ஏரியாவில் விருது விழாவுக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விருது விழாவை பிரியங்கா தொகுத்து வழங்கினார். ரெட் கார்ப்பெட்டில் போட்டியாளர்களை வரவேற்ற பிரியங்கா அவர்களிடம் சில கேள்விகளை கேட்டு தனது பணியை சிறப்பாக செய்தார்.

ஐக்கி பெர்ரி குத்தாட்டம்

ஐக்கி பெர்ரி குத்தாட்டம்

தொடர்ந்து விருது வழங்கும் விழாவை தொகுத்து வழங்கிய பிரியங்கா தனக்கு பார்ட்னராக ராஜுவை சேர்த்துக் கொண்டார். விருது விழாவை ராஜுவும் பிரியங்காவும் தொகுத்து வழங்க, டான்ஸ் பர்ஃபாமன்ஸாக ஐக்கி பெர்ரி குத்தாட்டம் போட்டார்.

பெஸ்ட் பிளேயர் நிரூப்

பெஸ்ட் பிளேயர் நிரூப்

இதனை தொடர்ந்து பெஸ்ட் பிளேயருக்கான விருது நிரூப்புக்கு வழங்கப்பட்டது. இதனை இமான் அண்ணாச்சியும் தாமரை செல்வியும் நிரூப்புக்கு வழங்கினர். அடுத்து பெஸ்ட் எண்டெர்டெய்னருக்கான விருது ராஜுவுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை பாவனியும் சிபியும் ராஜுவுக்கு வழங்கினர்.

பிரியங்கா ஜால்ரா

பிரியங்கா ஜால்ரா

அடுத்தப்படியாக பெஸ்ட் டிரெஸ்டுக்கான விருது அக்ஷரா ரெட்டிக்கு வழங்கப்பட்டது. அந்த விருதை நிரூப் மற்றும் ஐக்கி பெர்ரி ஆகியோர் அக்ஷராவுக்கு வழங்கினர். இதனை தொடர்ந்து பிரியங்காவுக்கு ஜால்ரா என்ற கிரீடத்தை அணிவித்தார் ஐக்கி பெர்ரி. அபிஷேக் ராஜா இருந்தவரை அவர் கூறியதற்கெல்லாம் ஜால்ரா போட்டார் என விளக்கம் கொடுத்தார்.

பிக்பாஸ் சகுனி வருண்

பிக்பாஸ் சகுனி வருண்

அடுத்து டம்மி பீஸ் என்ற கிரீடத்தை ராஜுவுக்கு வழங்கினார் அபினய். சகுணிக்கான கிரீடத்தை வருணுக்கு வழங்கினார் நிரூப். அந்த கிரீடம் அக்ஷராவுக்கும் வருணுக்கும்தான் வழங்க வேண்டும், ஆனால் இரண்டுமே சேர்ந்து ஒன்றாக இருப்பதாக வருணுக்கு வழங்குகிறேன் என்றார் நிரூப்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X