ஆகா.. கட்டம் கட்டி வச்சு செய்யும் ஹவுஸ்மேட்ஸ்.. நாமினேஷனில் யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட 2 வாரங்கள் நிறைவடைந்த நிலையில் நேற்று முதல் எவிக்ஷன் நடைபெற்றது.

இதில் முதல் நபராக நாடியா சங் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.

முதல் ஆளாக இமான் அண்ணாச்சி

முதல் ஆளாக இமான் அண்ணாச்சி

இதில் இன்று திங்கள் கிழமை என்பதால் நாமினேஷன் புராசஸ் நடைபெறுவது தெரிகிறது. இதில் கன்ஃபெஷன் ரூமில் ஒவ்வொரு போட்டியாளராக சென்று தங்களுக்கு பிடிக்காத போட்டியாளர்களை நாமினேட் செய்கின்றனர். அதன்படி முதல் நபராக இமான் அண்ணாச்சி, இசைவாணி மற்றும் பாவனி ரெட்டியை எவிக்ஷன் புராசஸ்ஸிற்கு நாமினேட் செய்கிறார்.

பாவனியை நாமினேட் செய்யும் ஹவுஸ்மேட்ஸ்

பாவனியை நாமினேட் செய்யும் ஹவுஸ்மேட்ஸ்

அவரை தொடர்ந்து சின்னப் பொண்ணும் பாவனியை நாமினேட் செய்கிறார். இதேபோல் அக்ஷராவும் பாவனியை நாமினேட் செய்துள்ளார். நிரூப்பும் பாவனியை நாமினேட் செய்வதாக தெரிகிறது. அவரை தொடந்து கன்ஃபெஷன் ரூம்முக்குள் செல்லும் பாவனி, அக்ஷராவை நாமினேட் செய்கிறார்.

கேம்மை ஸ்பாயில் செய்து விட்டார்

கேம்மை ஸ்பாயில் செய்து விட்டார்

இதேபோல் அபிஷேக், பிரியங்கா தேஷ் பாண்டே மற்றும் ராஜு ஆகியோர் சின்னப்பொண்ணுவை நாமினேட் செய்கின்றனர். விஜயதசமி கொண்டாட்டத்தின் போது சின்னப்பொண்ணு தன்னை இன்சல்ட் செய்வதாக வருத்தப்பட்டது மொத்த கேம்மையும் ஸ்பாயில் செய்துவிட்டதாக காரணத்தை கூறுகிறார் ராஜு.

கடந்த வாரம் எஸ்கேப்

கடந்த வாரம் எஸ்கேப்

இன்றைய புரமோவின் அடிப்படையில் பாவனி, சின்னப்பொண்ணு, அக்ஷரா ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற நாமினேஷன் புராசஸ்ஸில் இடம் பிடித்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் புராசஸ்ஸில் பாவனி ரெட்டி இடம்பெறவில்லை.

வெறுப்பேற்றிய பாவனி

வெறுப்பேற்றிய பாவனி

ஹவுஸ்மேட்ஸ் அவரது பெயரை நாமினேட் செய்யவில்லை. ஆனால் நாமினேஷனில் இடம்பிடித்த மற்ற போட்டியாளர்களை எரிச்சலாக்கும் வகையில் எவிக்ஷன் அன்று அனைவரிடமும் இன்னைக்கு நீங்கள் போகப் போறீங்க என்று கூறி வெறுப்பேற்றியுள்ளார். இதனால அக்ஷராவுக்கும் பாவனிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

கமல் வரை சென்ற பஞ்சாயத்து

கமல் வரை சென்ற பஞ்சாயத்து

இந்த பஞ்சாயத்து கமல்ஹாசன் வரை சென்றது நேற்றைய எபிசோடில் தெரியவந்தது. இந்நிலையில் கடந்த வாரத்திற்கும் சேர்த்து இந்த வாரம் மொத்தமாக பாவனியை வச்சு செய்துள்ளனர் நெட்டிசன்கள். இன்னும் யாரெல்லாம் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் புராசஸ்ஸில் இடம் பெற்றுள்ளனர் என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X