செய்றதெல்லாம் செஞ்சுட்டு.. தாமரை குறித்தே தவறாக பேசிய பாவனி - ஸ்ருதி.. இதுல கண்ணீர் வேற!

சென்னை: தாமரையை ஏமாற்றி காயினை அடித்த ஸ்ருதியும் பாவனியும் நல்லவர்கள் போன்று பேசி கண்ணீர் விட்டனர்.

இன்றைய எபிசோடில் தாமரையின் காற்று காயினை ஸ்ருதி கைப்பற்ற பாவனி உதவி செய்தார்.

தாமரை ஆடை மாற்றும் போது அந்த சூழ்நிலையை பயன்படுத்தி அவரது காயினை எடுத்தார் ஸ்ருதி.

அவசியம் இல்லை

அவசியம் இல்லை

ஸ்ருதி காயினை எடுக்க பாவனியும் உடந்தையாக இருந்தார். ஆனால் தான் திருடவே இல்லை என்று அடித்துப் பேசினார். இது குறித்து மற்ற போட்டியாளர்கள் கேட்ட போதும் உங்களிடம் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று இருவரும் எகிறினர்.

என்னை அனுப்பி விடுங்கள்

என்னை அனுப்பி விடுங்கள்

இதனால் நொந்துப் போன தாமரை, தான் வைத்திருந்த நம்பிக்கையை கெடுத்துவிட்டனர் என கூறி கண்ணீர் விட்டார். மேலும் இப்படி ஒரு கேம் என்னால் விளையாட முடியாது, நான் வீட்டுக்கே போகிறேன் என்னை அனுப்பி விடுங்கள் என்றார். மேலும் ஸ்ருதியும் பாவனியும் எப்படி தன்னை ஏமாற்றினார்கள் என்பது குறித்து சக போட்டியாளர்களிடம் பெட் ரூம்மில் பேசிக் கொண்டிருந்தார்.

நல்லா டிராமா பண்றாங்க

நல்லா டிராமா பண்றாங்க

அப்போது வெளியே இருந்து தாமரை பேசுவதை பார்த்த பாவனி, நல்லா டிராமா பண்றாங்க. சனிக்கிழமை வரை இதை வைத்து என்னவெல்லாம் செய்யப்போகிறார்ரோ என தாமரை குறித்து தவறாக பேசினர். அதற்கு பதில் கூறிய ஸ்ருதி நான் இப்போது காயினை கொண்டு போய் கொடுத்தாலும் என் மீதுதான் குற்றச்சாட்டு வரும் என தான் செய்ததை நியாயப்படுத்தினார் ஸ்ருதி.

தாமரை பொய் சொல்கிறார்

தாமரை பொய் சொல்கிறார்

பின்னர் பெட் ரூம்முக்குள் சென்ற பாவனியும் ஸ்ருதியும் தாமரை ஏதோ தவறு செய்தது போன்றும் அவர் பொய் சொல்வது போன்றும் பேசினர். ஸ்ருதி தான் செய்தது நியாயம் தான் என்றும் தமாரை பொய் சொல்கிறார் என்றும் முகத்துக்கு நேராகவே சொன்னார். இதனால் ரொம்பவே வருத்தப்பட்டார் ஸ்ருதி.

ஹவுஸ்மேட்ஸ் கேள்வி

ஹவுஸ்மேட்ஸ் கேள்வி

அடுத்து பாவனியும் தனக்கும் அந்த சம்பவத்துக்கும் சம்மந்தமே இல்லாதது போல் பேசினார். மேலும் தான் தாமரையை தான் பார்க்கக்கூடாது என்பதற்காக தான் டவலை வைத்து மறைத்தேன் என்றார் பாவனி. அப்போது சுற்றியிருந்த மற்ற ஹவுஸ்மேட்ஸ் நீ ஏன் டவலை வைத்து மறைத்து நின்றாய்? வெளியே வரவேண்டியதானே என்றனர்.

டிராமா பண்ணிய பாவனி

டிராமா பண்ணிய பாவனி

அதற்கு அவர்களிடம் எகிறிய பாவனி, என் கேரக்டரை தவறாக காட்டாதீர்கள் என நிரூப்பிடம் பேசினார். தாமரை பெரிதாக எதுவும் பேசாத நிலையில் இதுபோன்ற வார்த்தைகளை எல்லாம் பேசாதீர்கள் என்று வார்த்தைக்கு வார்த்தை கூறினர். மொத்தத்தில் ஸ்ருதியும் பாவனியும் தங்களின் பெயரை மொத்தமாக டேமேஜ் செய்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X