துணி மாற்றும் போது தாமரையை ஏமாற்றிய பாவனி... செம சீட்டிங்... பொய்.. குறும்படம் போட்டே ஆகனும்!
சென்னை: தாமரை ஆடை மாற்றும் போது அவரை திசை திருப்பி ஸ்ருதி காயினை எடுக்க உதவிய பாவனி தனக்கு தெரியவே தெரியாது என அப்பட்டமாக பொய் கூறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று காலை முதல் வெளியான புரமோக்களை பார்த்த நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தாமரை செல்விக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
புரமோக்களும் தாமரை செல்வி மீது தவறு இருப்பது போன்றே இருந்தது. ஆனால் நிகழ்ச்சி தொடங்கிய பிறகுதான் ஸ்ருதியும் பாவனியும் செய்த வில்லத்தனம் தெரிந்தது.

காயினை அடிக்க திட்டம் போட்ட ஸ்ருதி
அதாவது காற்று காயினை வைத்திருந்த தாமரை செல்வி காலையில் குளித்து விட்டு உடை மாற்றும் அறையில் ஆடையை மாற்றிக் கொண்டடிருந்தார். அப்போது தாமரையின் காயினை அடித்துவிடலாமா என பாவனியுடன் சேர்ந்து திட்டம் போட்டார் ஸ்ருதி.

டவலை காட்டி ஏமாற்றி
அதற்கு பாவனி எனக்கு வேண்டாம், நீ எடுத்துக் கொள் என ஸ்ருதியிடம் கூறினார் பாவனி. அதற்கு ஓகே என்ற ஸ்ருதி, தாமரையை திசைத் திருப்புமாறு பாவனியிடம் கேட்டுக் கொண்டார். அப்போது தாமரை உடை மாற்றும் அறைக்கு சென்ற பாவனி டவலை விரித்து தாமரை பார்க்காதப்படி காட்டியுள்ளார்.

ஷாலை போர்த்தியப்படி வந்த தாமரை
அந்த நேரத்தில் மதுமிதா டவல் கேட்பதாக கூறி தாமரை உடை மாற்றும் அறைக்கு சென்ற ஸ்ருதி, நைசாக தாமரை வைத்திருந்த காயினை அடித்துவிட்டார் ஸ்ருதி. இதனால் பதறிய தாமரை ஷாலை போர்த்திக் கொண்டு வந்து ஏன்ப்பா என் காயினை எடுத்தாய், கேட்டிருந்தால் நானே கொடுத்திருப்பேனே என்றார்.

தெரியவே தெரியாது என பொய்
மேலும் அந்த நேரத்தில் தான் பார்க்க முடியாதப்படி மறைத்த பாவனியை நீ செய்தது துரோகம் என்றார் தாமரை. ஆனால் தனக்கு அதைப்பற்றி எதுவுமே தெரியாது என்று அடித்துப் பேசினார் பாவனி. ஆனால் ஸ்ருதி தாமரையின் காயினை எடுக்க பாவனி தான் உதவினார்.

பொய் மேல் பொய்
ஆனால் தனக்கு தெரியவே தெரியாது இல்லவே இல்லை என்று அடித்துப் பேசினார் பாவனி. புரமோவை பார்த்த தாமரையை திட்டிய நெட்டிசன்கள் அனைவரும் எபிசோடை பார்த்துவிட்டு தாமாரைக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். பாவனிக்கும் ஸ்ருதிக்கும் ஓரளவுக்கு ரசிகர்கள் இருந்த நிலையில் பொய் மேல் பொய் கூறி பெயரை கெடுத்துக் கொண்டனர்.

குறும்படம் போட்டே ஆக வேண்டும்
மேலும் பாவனி அடுக்கடுக்கான பொய்களை கூறிய பாவனிக்கு குறும்படம் போட்டே ஆக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏற்கனவே ஒவ்வொரு போட்டியாளராக குறி வைத்து சண்டை போட்டு வருகிறார் பாவனி. இந்நிலையில் இன்றைய எபிசோடில் ஒட்டுமொத்தமாக அவரது முகத்திரை கிழிந்து விட்டது.


Click it and Unblock the Notifications











