அவர் பேசியது உண்மை... நீங்கள் எப்படி நெகட்டிவிட்டியை பரப்பலாம்? ராஜுவை விளாசும் பாவனி ஃபேன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாவனி குறித்து நெகட்டிவ்வாக பேசிய ராஜுவை அவரது ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கண்ணாடி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் எதிரும் புதிருமாக உள்ள ஹவுஸ்மேட்டுகளை ஒருவருக்கொருவர் கண்ணாடியாக நியமித்து வருகிறார் பிக்பாஸ்.
இதில் தங்களுக்கு ஆகாத ஹவுஸ்மேட்ஸ் குறித்து தங்கள் மனதில் உள்ளதை கொட்டித் தீர்த்து வருகின்றனர் சக ஹவுஸ்மேட்ஸ்.

பாஸிட்டிவாக பேசிய பாவனி
அந்த வகையில் நேற்றைய எபிசோடில் ராஜுவின் கண்ணாடியாக இருந்த பாவனி, அவர் குறித்து பேசினார். ராஜு குறித்து பாஸிட்டிவாக தான் பேசினார். அதாவது, எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். உங்கக்கூட பாண்ட் கிரியேட் ஆகணும்னு நினைப்பேன்.

விலகியிருப்பதே பெட்டர்
ஆனால் அது நடக்க மாட்டேங்குது... நீங்க என்கிட்ட ஃபேக்கா இருக்கீங்க...என்ன அவாய்ட் பண்றீங்க... சேஃபா விளையாடுறீங்க என்று தன் மனதில் வைத்திருந்ததை எல்லாம் கொட்டி தீர்த்தார். அதே நேரத்தில் ராஜு, பாவனியிடம் உங்களிடம் போலியாக நடிப்பதை விட விலகியிருப்பதே பெட்டர் என்றார்.

நேர்மையாக இருந்தன
இதனால் கடுப்பான பாவனி ரசிகர்கள் ராஜுவுக்கு எதிராக வரிந்து கட்டியுள்ளனர். மிரர் டாஸ்க்கில் ராஜு குறித்து பாவனி ஜெனியூனாக பேசினார். அவருடைய வார்த்தைகள் நேர்மையாக இருந்தன. ஆனால் நீங்கள் எப்படி நெகட்டிவிட்டியை ஸ்பிரெட் பண்ணலாம் என விளாசி வருகின்றனர்.

ராஜுதான் விஷம் என்றார்
அதேநேரத்தில் சில நெட்டிசன்கள், பாவனிதான் ஃபேக்.. கடந்த வாரம் ராஜுதான் விஷம்.. சேஃப் பிளேயர் என்று கூறினார். ஆனால் இப்போது எனக்கு ராஜுவை ரொம்ப பிடிக்கும் என கூறுகிறார் என பாவனியை வெளுத்து வருகின்றனர்.

ராஜு சரிதான்
பாவனி ரசிகர்கள் கொந்தளிப்பதை பார்த்த இந்த நெட்டிசன், அது எப்படி ப்ரோ நேத்து ப்ரோமோல ராஜு கையை நீட்டி பேசுனதுக்கு நீங்க என்ன என்ன கம்பு சுத்துனீங்க.. முதல் நீங்க எல்லாம் மாறுங்க அப்பறம் வந்து எனக்கு அறிவுரை சொல்லுங்க..உங்க பார்வைல பாவனி பேசுறது எல்லாம் சரின்னு தோணும்போது என்னோட பார்வையில் ராஜு சரிதான் என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











