மதுமிதாவை தலைவராக்கி ஆட்டத்தை ஆடப்போகிறாராம் அபிஷேக்.. விளாசிவிட்ட பாவனி.. முடிச்சு விடுங்க பிக்பாஸ்!
சென்னை: மதுமிதாவை பிக்பாஸ் வீட்டின் இந்த வார தலைவராக்க போவதாக கூறி பார்வையாளர்கள் மட்டுமின்றி சக போட்டியாளர்களையுத் எரிச்சலாக்கி வருகிறார் அபிஷேக்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் அபிஷேக் ராஜா. சினிமா பையன் என்ற யூட்யூப் சேனலை நடத்தி வரும் அபிஷேக் ராஜா பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்.
குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியையும் கமல்ஹாசனையும் விமர்சித்து அவர் பேசிய பேச்சுக்கள் பெரும் வைரலானது. அந்த வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள் இவரை ஏன் இன்னும் பிக்பாஸ் வீட்டில் வைத்துள்ளீர்கள் என்று விளாசி வருகின்றனர்.

நான் ஆட ஆரம்பிச்சா..
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் தான்தான் டஃப் போட்டியாளர் என காட்டிக்கொள்வது போல் ஒவ்வொரு போட்டியாளராக அழைத்து பிரைன் வாஷ் செய்து வருகிறார் அபிஷேக். இன்னும் நான் ஆடவே ஆரம்பிக்கவில்லை, நான் ஆட்டத்தை தொடங்கினால் எல்லோரும் வீட்டுக்கு போக வேண்டியதான் என்று தற்பெருமை பேசி வருகிறார் அபிஷேக்.

மரண பயத்த காட்டிட்ட பரமா
நேற்றைய எபிசோடில் எலிமினேஷன் அறிவிப்பில் அவரை கடைசி வரை கொண்டு சென்று மரண பயத்தை காட்டிட்ட பரமா என்பதை போல் மிரட்டிவிட்டது பிக்பாஸ் குழு. ஆனாலு அடங்காத அபிஷேக், வெறித்தனமாக பர்ஃபாமன்ஸை காட்டி வருகிறார். இந்த வாரம் மதுமிதாவை கேப்டனாக்கியே தீருவேன் என்று சூளுரைத்து வரும் அபிஷேக், அதுகுறித்து பேசி பாவனியிடம் வாங்கிக் கட்டினார்.

உன்னை ட்ரிகர் செய்யப்போகிறேன்
தொடர்ந்து பாத்ரூம் ஏரியாவில் மதுமிதாவுடன் நின்று பேசிய அபிஷேக் உன்னை எதிர்த்து என்னால் விளையாட முடியாது என்றார். பின்னர் கார்டன் ஏரியாவில் அமர்ந்து நான் உன்னை ட்ரிகர் செய்யப்போகிறேன், அப்போதுதான் நீ யார் என்று இந்த வீட்டில் எல்லோருக்கும் தெரியும் என மதுமிதாவிடமே கூறினார் அபிஷேக். மேலும் நீ சூப்பரா விளையாடின ஆனா மாட்டிக்கிட்ட என்றார்.

நீங்கள் எப்படி டிசைட் பண்ணலாம்?
இதனைக் கேட்ட பாவனி அதை எப்படி நீங்கள் டிசைட் பண்ணலாம் என்று எகிற, அது எங்க விஷயம் என்று அவரிடம் ஏறினார் அபிஷேக். மேலும் உன்னை கேப்டனாக்கதான் நானும் நிரூப்பும் முயற்சி செய்தோம் ஆனால் தாமரை கேப்டன் ஆகிவிட்டார் என்றும் மனதில் எள்ள விஷத்தை கக்கினார் அபிஷேக்.

நியாயமே இல்லை
மேலும் நீங்க குரூப் என்று சொல்கிறீர்களே அந்த குரூப் இந்த எண்டையர் வீட்டுக்கும் எதிராக செயல்படலாமே என்று கூறி மற்றவர்களையும் இழுவிட்டார் அபிஷேக். அபிஷேக் பேசுவதையெல்லாம் கேட்ட பாவனி, யாரை கேப்டனாக செலக்ட் செய்ய வேண்டும் என்று டிஸ்கஸ் செய்வது நியாயமே இல்லை என்று அபிஷேக்கிடம் முறையிடுகிறார்.

சுயமாக விளையாட வேண்டும்
ஆனால் அபிஷேக்கோ அது என் கேம் ட்ரிக், நான் மதுவை கேப்டனாக்கி அவர் யார் என்று இந்த வீட்டில் எல்லோருக்கும் காட்டுவேன் என்றார். இதனைக் கேட்ட பாவனியும் மதுவும் அவரவர் விளையாட்டை அவரவர் சுயமாக விளையாட வேண்டும் யாரும் யாரையும் பிடித்து தள்ளக் கூடாது என்றனர்.

இருவருக்குள்ளும் விரிசல்
மேலும் அபிஷேக் செய்வது தவறு என்று சக போட்டியாளர்களிடம் கூறினார் பாவனி. இதனால் இருவருக்குள்ளும் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அபிஷேக்கால் எரிச்சலாகி உள்ள ரசிகர்கள், அவரின் இந்த நடவடிக்கைகளை பார்த்து சீக்கிரம் அவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றுங்கள் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











