என்ன பார்த்தாங்க? நான் என்ன அபினய்க்கு முத்தமா கொடுத்தேன்? பிக்பாஸ் வீட்டில் எமோஷனலான பாவனி!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் ராஜு பேசியதை கேட்டு எமோஷனலானார் பாவனி ரெட்டி.
பிக்பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக அரசியல் மாநாடு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதற்காக ஹவுஸ்மேட்ஸ் பிரியங்கா, சிபி மற்றும் சஞ்சீவ் ஆகியோர் தலைமையில் மூன்று கட்சிகளாக பிரிந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் அரசியல் மாநாடு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் சம உரிமை குறித்து பேசிய பிரியங்காவை பாத்ரூம் பிரச்சனையை வைத்து கிழித்து தொங்க விட்டார் சஞ்சீவ். பிரியங்காவுக்கு கட்சியின் தலைவராக இருக்க தகுதியே இல்லை என்றும் விளாசினார்.

மாநாடு டாஸ்க்
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் அரசியல் மாநாடு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் சம உரிமை குறித்து பேசிய பிரியங்காவை பாத்ரூம் பிரச்சனையை வைத்து கிழித்து தொங்க விட்டார் சஞ்சீவ். பிரியங்காவுக்கு கட்சியின் தலைவராக இருக்க தகுதியே இல்லை என்றும் விளாசினார்.

பார்த்ததை பேசலாமா?
இதனை தொடர்ந்து தலைவர்களிடம் கேள்விகளை கேட்கலாம் என மற்ற கட்சியின் தொண்டர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார் பிக்பாஸ். இதனைக் கேட்ட ராஜு பிரியங்காவிடம் சேஃப் கேம் ஆடுவதாக சொல்கிறீர்களே நான் என்ன சேஃப் கேம் ஆடுகிறேன் என்றார். அதற்கு பிரியங்கா பதில் கூற நான் இந்த வீட்டில் பார்த்ததை பேசலாமா என்றார்.

என்ன பார்த்தார்கள்?
அதற்கு பிரைவேட்டான இடத்தில் பேசு என்றார் பிரியங்கா. அதற்கு பிக்பாஸ் வீட்டில் பிரைவேட்டா ஒரு இடத்தை சொல்லுங்கள் பேசுகிறேன் என்றார் ராஜு. இந்த பிரச்சனை முடிந்த பிறகு பாவனி இதுகுறித்து தாமரையிடம் பேசி கண்ணீர் விட்டார். பார்த்தேன் பார்த்தேன் என்று சொல்கிறார்கள், என்ன பார்த்தார்கள்?

நான் முத்தம் கொடுத்தேனா?
நான் அபினய்க்கு முத்தம் கொடுத்தேனா என்று கேட்டு ஆதங்கப்பட்டார் பாவனி. இதையடுத்து பாவனியை ஆசுவாசப்படுத்திய பிரியங்கா டிஸ்கஸ்ட்டிங் என்று எதிர் கட்சியினருக்கு எதிராக பேசினார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அபினய்க்கும் பாவனிக்கும் இடையே உள்ள ரிலேஷன்ஷிப் குறித்து முதலில் பேச தொடங்கியதே பிரியங்காதான் என விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











