சரியான போட்டி.. கொடியை நட தாமரையிடம் மல்லுக்கட்டும் அண்ணாச்சி... பிக்பாஸ் 3வது புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் வாரம் தோறும் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக ஒவ்வொரு கான்செப்ட்டில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று வெளியான பிக்பாஸ் புரமோக்களின்படி இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக பிக்பாஸ் வீடு அரசியல் மாநாட்டு களமாக மாறுவது தெரியவந்துள்ளது.

மூன்றாவது புரமோ
இதற்காக ஹவுஸ்மேட்ஸ் மூன்று அணிகளாக பிரிந்து மூன்று கட்சிகளாக செயல்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் வெற்றிக்கொடிக் கட்டு என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

வெற்றிக் கொடிக் கட்டு டாஸ்க்
இதற்காக கார்டன் ஏரியாவில் இரண்டு கொடிக் கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் மூன்று கட்சிகளில் இருந்தும் தலா ஒரு நபர் என 3 போட்டியாளர்கள் தங்களின் கொடியை அந்த கொடிக் கம்பத்தில் நட வேண்டும். இந்நிலையில் இந்த வெற்றிக்கொடிக்கட்டு டாஸ்க்கில் தாமரை செல்வி, பாவனி மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

பிஸிக்கல் டாஸ்க்
இதில் பாவனி ஒரு கொடிக்கம்பத்தை தூக்கி கொண்டு செல்ல எஞ்சிய ஒரு கொடி கம்பத்திற்கு தாமரை செல்வியும் இமான் அண்ணாச்சியும் மல்லுக்கு நிற்கின்றனர். இப்படியாக உள்ளது இன்றைய மூன்றாவது புரமோ. இதனை பார்த்த நெட்டிசன்கள், அரசியல் மாநாடு என்றதும் பேசியே தீர்ப்பார்கள் என்று நினைத்த நிலையில் பிஸிக்கல் டாஸ்க்கும் கொடுக்கப்படுகிறதே என்று கூறி வருகின்றனர்.

மொக்கை புரமோ
அதே நேரத்தில் இந்த புரமோவில் எதுவுமே இல்லை என்றும் இதை விட மொக்கையாக வேறு புரமோக்கள் போட முடியாதா என்றும் கேட்டு வருகின்றனர். புரமோக்களுக்கான குறைந்தப்பட்ச தரத்தையாவது மெய்ன்டைன் செய்யுங்கள் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











