நாங்க பேசுனா... உனக்கு எங்கே வலிக்குது.. அபினய் விவகாரத்தில் ராஜுவை கிழித்து தொங்கவிட்ட பாவனி!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் அபினய் உடனான பிரச்சனை குறித்து பேசிய ராஜுவை விளாசி தள்ளினார் பாவனி.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்திலேயே அபினய் தன் மீது ரொம்ப பொஸ்ஸஸிவ்வாக இருப்பதாக சக ஹவுஸ்மேட்டுகளிடம் கூறினார் பாவனி.

இதன் தொடர்ச்சியாக அவர் பழகும் விதத்தை பார்த்து என் மீது உங்களுக்கு ஏதாவது ஃபீலிங்ஸ் இருக்கிறதா என்று கேட்டார். அதற்கு அபினய் அப்படியெல்லாம் இல்லை என்று கூறினார்.

பாவனியுடன் நெருக்கம்

பாவனியுடன் நெருக்கம்

அதன்பிறகு வருண் குறித்து அபினய் தன்னிடம் தவறாக கூறியதாக கூறி கோர்த்துவிட்டார் பாவனி. இருப்பினும் அபினய் பாவனியிடம் நெருக்கமாக பழகி வந்தார். பிக்பாஸ் வீட்டில் அபினய் பாவனியுடன் மட்டும் தான் நெருக்கமாக பழகி வருகிறார். பாவனிக்கு மட்டுமே உதவிகளையும் செய்து வருகிறார் அபினய்.

அதிர்ச்சியான ஹவுஸ்மேட்ஸ்

அதிர்ச்சியான ஹவுஸ்மேட்ஸ்

இதனால் அவர்களுக்குள் இருப்பது என்ன உறவு என்ற கேள்வி ஹவுஸ்மேட்டுகளுக்குள் எழுந்தது. இந்நிலையில் ட்ரூத் ஆர் டேர் டாஸ்க்கின் போது பாவனியை காதலிக்கிறீர்களா என்று அபினய்யிடம் நேருக்கு நேராக கேட்டார் ராஜு. இதனால் ஹவுஸ்மேட்ஸ் அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர்.

நேற்றைய புரமோக்கள்

நேற்றைய புரமோக்கள்

இந்நிலையில் நேற்றைய டாஸ்க்கில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் பாவனி அபினய் இடையேயான ரிலேஷன்ஷிப் குறித்து கேட்டார் ராஜு. இதனால் ஆவேசமான பாவனி ராஜு மற்றும் சிபியை விளாசினார். இந்த காட்சிகள் நேற்று புரமோக்களாக மட்டுமே வெளியான நிலையில் எபிசோடில் ஒளிபரப்பப்படவில்லை.

யாரும் பேசக்கூடாது

யாரும் பேசக்கூடாது

இந்நிலையில் இன்றைய எபிசோடில் அந்த ரைடு காட்சிகள் ஒளிபரப்பானது. இதில் தொடக்கத்திலேயே கண்ணீருடன் ஆரம்பித்த பாவனி, இந்த மாதிரி பெயரெல்லாம் எனக்கு வேண்டாம்.. இன்னும் என்னவெல்லாம் பேச்சு வாங்கப் போகிறேனோ என கண்ணீர் விட்டார்.
இதனை பார்த்த பிரியங்கா இந்த டாப்பிக்கு பத்தி இனி யாரும் பேசக்கூடாது என்று கூறவா என்று கேட்டார்.

உங்களுக்கு எங்கே வலிக்குது?

உங்களுக்கு எங்கே வலிக்குது?

அதற்கு வேண்டாம் என்ற பாவனி, அவர்கள் பேசட்டும், ஆமாம் இருக்கு.. எங்களுக்குள் அதனால் பிரச்சனை இல்லை. அவங்களுக்கு, உங்களுக்கு எங்கே வலிக்குது என்று கேட்கிறேன் என சண்டைக்கு தயாரானார்.
பின்னர் நேராக லிவிங் ஏரியாவில் அமர்ந்திருந்த ராஜுவிடம் சென்ற பாவனி, நாங்க பேசுறது அவங்க ஃபேமிலிக்கும் எங்க ஃபேமிலிக்கும்தான் பிரச்சனை.

பேசினால் நல்லா இருக்காது

பேசினால் நல்லா இருக்காது

இந்த பிரச்சனை எங்களுக்குள்.. நாங்கள் பேசி தீர்த்துக் கொண்டோம். இனிமே அதைப்பற்றி பேசினால் நல்லா இருக்காது. அவன் கூட பேசுவேன், தனியா உட்காந்து பேசுவேன்.. எப்படி வேண்டுமானாலும் பேசுவேன், உங்களுக்கு என்ன? நான் அவன் கூட எந்த டைம்ல வேண்டுமானாலும் உட்காந்து பேசுவேன்.. உங்களுக்கு என்ன? அது என் இஷ்டம், அவன் இஷ்டம் என்றார்.

நீ யார் பேசுறதுக்கு?

நீ யார் பேசுறதுக்கு?

அப்போது குறுக்கிட்ட ராஜு இந்த கேள்வி ஏன் வந்தது என்று சொல்லவா என்று கேட்டார். அதற்கு பதில் சொல்லும் பாவனி, இதைப்பற்றி பேச உனக்கு உரிமையே கொடுக்கவில்லை. பின் நீ ஏன் அதுகுறித்து பேசுகிறாய்? நீ யார்? அதைப்பற்றி பேச நீ யார்? எனக்கு அண்ணனா? தம்பியா? என கேட்டு டார் டாராய் கிழித்து விட்டார். அதற்கு கூலாக பதில் கூறிய ராஜு ஹவுஸ் மேட் என்றார்.

அதை ஏன் இங்க வந்து கத்துற?

அதை ஏன் இங்க வந்து கத்துற?

தொடர்ந்து பேசிய பாவனி இது என் வாழ்க்கை, என் பர்சனல் என்று மீண்டும் கத்தினார். அதற்கு பதில் அளித்த ராஜு, அப்படின்னா அதை ஏன் பிக்பாஸ் வீட்டில் வந்து கத்துகிறாய் என்றார். அப்போது ராஜு சொல்ல வந்ததையே கேட்காமல் சென்றார் பாவனி. இதனை பார்த்த ராஜு, அவர் பாட்டுக்கு வருகிறார் பேசுகிறார் போறார் என அபினய்யிடம் தான் சொல்ல வந்ததை கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X