என் வளர்ப்பை தவறாக பேசி விட்டார்.. தாமரையால் கதறும் ஸ்ருதி.. பிளவுப்பட்ட பிக்பாஸ் வீடு!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது. இதில் இந்த வாரம் 9 பேர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்தனர்.
அதனை தொடர்ந்து கேப்டனுக்கான டாஸ்க் நடைபெற்றது. இதில் மதுமிதா பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.

நீ செய்தது துரோகம்
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரமோ வெளியானது. இதில் தாமரை செல்வியின் பஞ்ச தந்திர காயினை சக போட்டியாளரான ஸ்ருதி திருடினார். இதனால் அப்செட்டான தாமரை செல்வி நீ செய்தது துரோகம், கேட்டிருந்தால் நானே கொடுத்திருப்பேன் என கண்ணீர் விட்டார்.

கண்ணீர் விட்ட தாமரை
இதனை தொடர்ந்து இரண்டாவது புரமோ வெளியானது. இதில் காயினை இழந்த தாமரை செல்வி கண்ணீர் விட்டார். ஸ்ருதி செய்த காரியத்தால் புலம்பித்தீர்த்தார் தாமரை செல்வி. அப்போது ஸ்ருதியும் கண்ணீர் விட, நான் காயினுக்காக பேசவில்லை, உன் மேல் பயங்கரமான கோபத்தில் இருக்கிறேன் என்று கத்தினார் தாமரை செல்வி.

அழுகாச்சி புரமோ
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. மூன்றாவது புரமோ ஒரே அழுகாச்சியாக உள்ளது. இதில் ஒரு பக்கம் பாவனி ரெட்டி அழுது கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் ஸ்ருதி தாமரை செல்வி பேசியதை எல்லாம் சொல்லி அழுகிறார்.

வளர்ப்பை பேசி விட்டார்கள்
என் வளர்ப்பை பற்றி பேசி விட்டார்கள், நீயெல்லாம் ஒரு பிள்ளையா என பேசி விட்டார்கள், உனக்கு அசிங்கமா இல்லையான்னு கேட்டுட்டாங்க என்று தாமரை செல்வி பேசியதை பற்றி கண்ணீர் விடுகிறார். இதனிடையே கார்டன் ஏரியாவில் தாமரை செல்வி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி, சின்னப் பொண்ணு ஆகியோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

பிளவுப்பட்ட பிக்பாஸ் வீடு
மொத்தத்தில் பஞ்ச தந்திர காயின் மூலம் பிக்பாஸ் வீடு இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை எதில் போய் முடியும் என்பது இன்றைய எபிசோடில் தெரிய வரும். நேற்று நெருப்பு காயினால் ஒரு பிரச்சனை வெடித்த நிலையில் இன்று காற்று காயினால் பிரச்சனை வெடித்துள்ளது. மிச்சம் உள்ள காயின்களை வைத்து என்னவெல்லாம் செய்யப் போகிறார்களோ தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











