நீ பண்றது பச்சையா தெரியுது.. லெட்டர்ல ஏன் அப்படிலாம் எழுதின... அபினய்யின் முகத்திரையை கிழித்த பாவனி!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் அபினய்யுடன் தனியாக அமர்ந்து பேசிய பாவனி, நீங்கள் செய்வது பச்சையாக தெரிகிறது என கூறி அவரது முகத்திரையை கிழித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அபினய்க்கும் பாவனிக்கும் இடையே உள்ளது வெறும் நட்பா அல்லது காதலா என்ற சந்தேகம் ஹவுஸ்மேட்டுகளுக்கு இடையே ஏற்பட்டது.
கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இந்த விவகாரம் பூதாகரமானது. இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் குறும்படம் போட்டார் கமல். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் இந்த பிரச்சனை குறித்து அபினய் மற்றும் பாவனி ஆகியோ கார்டன் ஏரியாவில் அமர்ந்து தனியாக பேசிக் கொண்டிருந்தனர்.

இரிட்டேட்டிங்காதான் இருந்துச்சு..
அப்போது பேசிய பாவனி, இன்ஸ்டாவில் நீங்கள் போடும் கமெண்டுகளை வைத்தே நீங்கள், என்னுடன் நல்ல உறவை வைத்து கொள்ள விரும்புகிறீர்கள் என்று எனக்கு தெரிந்தது. நான் இன்ஸ்டாவில் என்ன போட்டாலும் ஒவ்வொன்னுக்கும் கமெண்ட் போட்டீங்க. அதெல்லாம் இரிட்டேட்டிங்காதான் இருந்துச்சு.

நீங்க லெட்டர் எழுதினீங்க
நீங்க லெட்டர் எழுதினீங்க, உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். இதை உன்னிடம் சொல்வது ரொம்ப சீக்கிரம்தான். இதை நீ எப்படி எடுத்துக்கொள்வாய் என்று எனக்கு தெரியவில்லை என்று எழுதியிருந்தாய். அதைபார்த்து நான் உன்னிடம் கேட்டேன், நீங்க ஃபிரண்ட் தானே நேரா வந்து சொல்ல வேண்டியதுதானே என்று எதற்கு லெட்டர் என்று கேட்டேன்.

வரம்பு மீறியிருக்கிறேனா?
நீங்கள் அபிஷேக்கிடம் வார்த்தை விட்டுள்ளீர்கள், நான் உங்களிடம் பேச முயற்சி செய்வதாக. அப்போதே அபிஷேக்கிடம் நான் கூறினேன், நீ பேச வேண்டும் என்றால் என்னிடம் பேசு, அபினய்யுடன் வந்து என்னிடம் பேசாதே. எனக்கு அபினய்யை பிடிக்கவில்லை என்றேன் என்று கூறினார் பாவனி. இதனைக் கேட்ட அபினய், நான் என்றாவது உன்னிடம் வரம்பு மீறியிருக்கிறேனா என்று கேட்டார்.

பச்சையா தெரியுது அபி...
அதற்கு நீ பண்றது பச்சையா தெரியுது அபி... என் மேல உனக்கு ஃபீலிங்ஸ் இருக்கு.. ஆனா நீ ஒத்துக்காம ஸ்மார்ட்டா பிளே பண்ற... அந்த காதல் டிராமாவே எனக்கு பிடிக்கவில்லை. நமக்கு கேர்ள் பிரண்ட் பாய் பிரண்ட் மாதிரி கொடுத்தாங்க.. எனக்கு சுத்தமா அது பிடிக்கவில்லை என்றார் பாவனி. அதனைக் கேட்ட அபினய், நான் இந்த விஷயத்தை பக்குவமாய் முடிக்க நினைக்கிறேன் என்றார்.

ஸ்மார்ட்டா பிஹேவ் பண்ற..
அதனைக் கேட்ட பாவனி, என்னை விடு.. போய் தொலை.. என்று கூறியபடியே உள்ளே சென்றார் பாவனி. பின்னால் சென்ற அபினய், மீண்டும் அந்த விஷயத்தை பக்குவமாக பேசி தீர்க்க வேண்டும் என்றார். இதனைக் கேட்ட பாவனி, இந்த விஷயத்தை நான் அங்கேயே விட்டுவிட்டேன், நீ எல்லார் முன்னாடியும் எடுத்து வருகிறாய்.. ஸ்மார்ட்டா பிஹேவ் பண்ற.. என அபினய்யை விளாசிவிட்டார்.


Click it and Unblock the Notifications











