பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்ட் என்ட்ரியாகும் பிரபல நடிகை? தீயாய் பரவும் தகவல்!
சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் பிரபல நடிகை வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் கடந்த கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் 5வது சீசன் கடந்த 3ஆம் தேதி முதல் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது.
18 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. இதில் 10 பெண் போட்டியாளர்கள், 7 ஆண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை ஆவார்.

முதல் எவிக்ஷன் நாடியா சங்
இதில் முதல் வாரத்திலேயே திருநங்கை நமீதா மாரிமுத்து சில தவிர்க்க முடியாத காரணங்களால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை பிக்பாஸ் வீட்டின் முதல் எவிக்ஷன் நடைபெற்றது. இதில் மலேசிய மாடலான நாடியா சங் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

பிரபல நடிகை என்ட்ரி
இதனால் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் எண்ணிக்கை 16ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் பிரபல நடிகை ஒருவர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி ஷங்கர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டில்
படத்தின் புரமோஷனுக்காக பிரியா பவானி ஷங்கர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. பிரியா பவானி சங்கர் நடித்துள்ள 'ஓ மணப்பெண்ணே' திரைப்படம் வருகிற 22 ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதன் புரமோஷனுக்காக இந்த வாரத்தில் பிரியா பவானி ஷங்கர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் சீசன் போட்டியாளர்
நடிகை பிரியா பவானி ஷங்கருடன், நடிகர் ஹரீஷ் கல்யாணும் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் ஹரீஷ் கல்யாண் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். நடிகை பிரியா பவானி ஷங்கர் சின்னத்திரை மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











