வாத்தியாருக்கே கண்டிஷன் போட்ட பிரியங்கா... எந்த ஸ்கூல்லேயும் இப்படி இருக்காது... ஓவரோ ஓவர்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட பள்ளிக்கூடம் டாஸ்க்கில் பிரியங்கா செய்த சேட்டைகள் ஓவரோ ஓவர் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக கனா காணும் காலங்கள் என பள்ளிக்கூட டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக பிக்பாஸ் வீடு போர்டிங் ஸ்கூலாக மாற்றப்பட்டது. இதில் ஆசிரியர்களாக அபிஷேக் ராஜா, ராஜு, அமீர் ஆகியோரும் வார்டனாக சிபியும் இருந்தனர்.

பிரியங்காவின் சேட்டைகள்

பிரியங்காவின் சேட்டைகள்

மற்ற அனைவரும் ஸ்டுடண்ட்டாக இருந்தனர். இதில் ஸ்டுடன்ட்டாக இருந்த பிரியங்கா அளவுக்கு அதிகமான சேட்டைகளை செய்தார்.
பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களிடம் இப்படி பேசுவார்களா என்று யோசிக்கும் அளவுக்கு இருந்தது அவரது நடவடிக்கை. அவர் ஆசிரியர்களிடம் பேசிய விதமும் நடந்து கொண்ட விதமும் பார்க்கும் மாணவர்களை தவறாக வழி நடத்தும் வகையிலேயே இருந்தது.

சினிமா பாடல்களை எழுதி

சினிமா பாடல்களை எழுதி

ஆசிரியர்கள் சொல்வதை கேட்கவே கூடாது என்ற எண்ணத்தில் முழுக்க முழுக்க சேட்டைகளை செய்து, அடிக்கடி பனிஷ்மெண்ட் வாங்கினார். மேலும் வகுப்பறையை விட்டு வெளியேறி பாதி நேரம் கார்டன் ஏரியாவிலேயே இருந்தார். சினிமா பாடல்களை எழுதி தனது சேட்டையின் உச்சக்கட்டத்தை காட்டினார்.

கப்பை கவிழ்த்துவிட்டு..

கப்பை கவிழ்த்துவிட்டு..

அதற்காக வார்டன் கைகளில் டீ கப்பை வைத்துக் கொண்டு நிற்கும்படி தண்டனை கொடுத்தார். அப்போது டீ கப்பை அப்படியே கவிழ்த்து விட்டு என்னால் முடியாது என்றார். இதனை பார்க்கும் போது, நிகழ்ச்சியை பார்க்கும் மாணவர்களும் இதையே செய்தால் என்னவாகும் என்றே தோன்றியது.

கண்டிஷன் போட்ட பிக்பாஸ்

கண்டிஷன் போட்ட பிக்பாஸ்

பின்னர் வகுப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரியங்கா, கார்டன் ஏரியாவிலேயே இருந்தார். மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து விட்டு உள்ளே வருமாறு கூறினார் வார்டன். மன்னிப்பு கடிதம் எழுதி கொடுக்க வேண்டும் என்றால் ஆசிரியர்கள் குச்சியை வைத்திருக்க கூடாது என்று கண்டிஷன் போட்டார்.

Recommended Video

Bigg Boss Priyanka -வுக்கு புத்தி சரியில்லையா | Dance Master Sathish விமர்சனம்
சேட்டைக்கு அர்த்தம் தெரியுமா?

சேட்டைக்கு அர்த்தம் தெரியுமா?

மற்ற ஆசிரியர்களும் மாணவர்களும் பேசியும் தன்னால் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுக்க முடியாது என்று கூறினார். ஸ்டுடன்ட்டாக பிரியங்காவின் நடவடிக்கையை பார்த்த நெட்டிசன்கள், சேட்டைக்கு அர்த்தம் தெரியுமா? இப்படியெல்லாம் எந்த ஸ்டுடன்ட்ஸும் நடந்து கொள்ள மாட்டார்கள் என்று விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X