வெளியே நிறைய ஃபிரண்ட்ஸ் இருக்காங்க... தம்பி நான் இருக்கேன்... பிரியங்கா தம்பியின் அதிரடி அட்வைஸ்!

சென்னை: உனக்கு தம்பி நான்தான் என்று நிரூப்புடனான பாண்டிங் குறித்து பிரியங்காவுக்கு அவரது தம்பி அட்வைஸ் செய்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் தற்போது ஃபிரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகின்றனர்.

இதுவரை அக்ஷராவின் குடும்பத்தினர், சிபியின் குடும்பத்தினர், நிரூப்பின் தந்தை, ராஜுவின் குடும்பம், பாவனியின் குடும்பத்தினர், நிரூப்பின் காதலியான யாஷிகா மற்றும் வருண் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தனர்.

கட்டியணைத்து கதறிய பிரியங்கா

கட்டியணைத்து கதறிய பிரியங்கா

அவர்களை தொடர்ந்து பிரியங்காவின் குடும்பத்தினரும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தனர். அம்மா மற்றும் தம்பி ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததை பார்த்த பிரியங்கா அவர்களை கட்டியணைத்து கதறினார். அவர் கதறியதை பார்த்து சக ஹவுஸ்மேட்டுகளும் கண்ணீர் விட்டனர்.

கத்துறதை கன்ட்ரோல் பண்ணு

கத்துறதை கன்ட்ரோல் பண்ணு

தொடர்ந்து தனது குடும்பத்தினருடன் பேசினார் பிரியங்கா. அப்போது நான் ஃபன் பண்றேனா? ரொம்ப கத்துறேனா? என கேட்டார். அதற்கு பதில் கூறிய பிரியங்காவின் சகோதரர் ரோஹித் கத்துவதை கன்ட்ரோல் பண்ணுமாறு கூறினார். மேலும் எல்லாருடைய விஷயத்துலேயேயும் தலையிட வேண்டாம் என்றும் கூறினார்.

உனக்கு தம்பி நான்தான்

உனக்கு தம்பி நான்தான்

மேலும் இந்த சீசன் தான் பெஸ்ட் சீசன் என்றும் எவ்வளவு சண்டை போட்டாலும் பேக்கேஜ் இல்லாம இருக்கீங்க... இந்த சீசன் தான் பெஸ்ட் என்று கூறினார். நிரூப்புக்கும் பிரியங்காவுக்கும் இடையேயான நட்பு குறித்து பேசிய அவரது சகோதரர், உனக்கு ஃபிரண்ட்ஸ் வெளியே இருக்காங்க.. உன் ஃபிரண்ட்ஸ்லாம் மெஸேஜ் பண்ணிருக்காங்க. உனக்கு தம்பி நான் இருக்கேன். நீ விளையாட்டுல மட்டும் கான்சென்ட்ரேஷன் பண்ணு என்றும் கூறினார்.

அக்ஷரா அழகா தெரியுறிங்க

அக்ஷரா அழகா தெரியுறிங்க

தொடர்ந்து சக போட்டியாளர்கள் குறித்து பேசிய பிரியங்காவின் சகோதரர், சஞ்சீவ் எல்லாவற்றையும் நேருக்கு நேராக பேசுகிறார் என்றார்.

சிபி வாடர்ன் டாஸ்க்கிலிருந்து வேற லெவலில் இருப்பதாக கூறினார். அக்ஷரா குறித்து பேசிய ரோஹித், அக்ஷராவின் டிரெஸிங் அழகாக இருப்பதாகவும், அவர் அழகாக தெரிவதாகவும் கூறினார். மேலும் நிரூப் கடைசி சில வாரங்களாக டவுன் ஆகிவிட்டதாகவும் கூறினர்.

புத்தருக்கு கூட இவ்ளோ பொறுமை இருக்காது

புத்தருக்கு கூட இவ்ளோ பொறுமை இருக்காது

அமீர் டான்ஸ் ஸ்டைல் பற்றி கூறிய பிரியங்காவின் சகோதரர், தாமரை அம்மா மாதிரி பார்த்துக் கொண்டதாகவும் கூறினார். இந்த வீட்டில் உனக்கு பிறகு ராஜுவுக்குதான் நான் ஃபேன் என்றார் ரோஹித். அப்போது குறுக்கிட்ட பிரியங்காவின் அம்மா, புத்தருக்கு கூட இவ்ளோ பொறுமை இருக்காது என்றார். மேலும் பிரியங்கா மற்றும் நிரூப் ஆகிய இருவரையும் சமாதானப்படுத்தி வைத்தார் ரோஹித்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X