தாமரையின் ஒரிஜினாலிட்டியை காட்டுவதாக நினைத்து தன் ஒரிஜினாலிட்டியை காட்டிய பிரியங்கா.. பகீர் புரமோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பிரியங்காவுக்கு இமான் அண்ணாச்சி மற்றும் தாமரை செல்வியுடன் கடந்த சில டெர்ம்ஸ் சரியில்லாமல் உள்ளது.

கடந்த வாரம் தாமரையை கேப்டன் ஆகவிடாமல் தடுத்த பிரியங்கா, கேப்டன் ஆக அவருக்கு தகுதியில்லை என்று கூறினார். மற்ற அனைத்து போட்டியாளர்களும் ஆதரவு தெரிவித்த போதும் பிரியங்கா மட்டும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இமான் அண்ணாச்சியுடன் மோதல்

இமான் அண்ணாச்சியுடன் மோதல்

இதனால் கேப்டன் ஆகும் வாய்ப்பை இழந்தார் தாமரை. அப்போதில் இருந்தே இருவருக்கும் இடையே பிரச்சனை புகைய தொடங்கி விட்டது. இந்நிலையில் இந்த வாரம் இமான் அண்ணாச்சியுடன் மோதினார் பிரியங்கா. ஏற்கனவே இமான் அண்ணாச்சிக்கும் பிரியங்காவுக்கும் பனிப்போர் நிலவி வருகிறது.

வேலை செய்யாமல் ஓபி அடிக்கிறார்

வேலை செய்யாமல் ஓபி அடிக்கிறார்

இந்நிலையில் இந்த வாரம் இமான் அண்ணாச்சி கேப்டனான நிலையில் அவரது கேப்டன் பதவியை நிரூப் தட்டிப்பறித்தார். அதனை தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனையில் பிரியங்கா இமான் அண்ணாச்சி வேலை செய்யாமல் ஓபி அடிப்பதாக கூறி வார்த்தையை விட்டார். இதனால் பிக்பாஸ் வீட்டில் பிரளயம் ஏற்பட்டது.

இன்றைய இரண்டாவது புரமோ

இன்றைய இரண்டாவது புரமோ

இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக டிவி டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதிலும் தாமரை மற்றும் அண்ணாச்சியை குறி வைத்தே பேசினார் பிரியங்கா. இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் ஆக்ரோஷமாக கத்தும் பிரியங்கா, நான் கேட்கிறேன் சிபி, நீ கேட்க தேவையில்லை என்கிறார்.

ஏன் கலாய்க்கிறாய்?

ஏன் கலாய்க்கிறாய்?

தொடர்ந்து பேசும் பிரியங்கா உன்னை தங்கப்பிள்ளை, செல்லப்பிள்ளை என கொஞ்சிட்டா என்பதால் அவளை என்னால் கேள்வி கேட்காமல் இருக்க முடியாது என டெரராக மூக்கை புடைத்துக் கொண்டு கைகளை ஆட்டி ஆவேசமாக பேசுகிறார் பிரியங்கா. இதனைக் கேட்கும் தாமரை, நான் பாசமாக பேசுவதை நீ ஏன் கலாய்க்கிறாய் என பிரியங்காவிடம் கேட்கிறார்.

நீ இப்படி இல்லை..

நீ இப்படி இல்லை..

நீ முதலில் நியாயமா பேசு.. பின்னர் மற்றவர்களை குறை சொல்.. அவ்வளவுதான் சொல்லிட்டேன் என்று கூறுகிறார். இதனை கவனிக்கும் பிரியங்கா, இப்போ வந்துச்சா உன்னுடைய உண்மையான முகம் என்கிறார். இதனைக் கேட்ட தாமரை செல்வி, நான் எப்போதுமே இப்படிதான், ஆனால் நீ இப்படி இல்லை என ஒரே போடாக போடுகிறார்.

பிரியங்காவின் ஒரிஜினாலிட்டி

பிரியங்காவின் ஒரிஜினாலிட்டி

தாமரையின் ஒரிஜினாலிட்டியை வெளியே கொண்டு வருவதாக நினைத்து பிரியங்கா தனது ஒரிஜினாலிட்டியை வெளியே காட்டி வருகிறார். இந்த சீசனை முழுக்க முழுக்க ஃபன்னாக கொண்டு செல்வோம் என்று வீட்டுக்குள் நுழைந்த முதல் நாள் சூளுரைத்த பிரியங்கா, மொத்த பேரையும் வெறுப்பேற்றி வருகிறார்.

பெயரை காப்பாத்திக்குங்க..

பெயரை காப்பாத்திக்குங்க..

நாளுக்கு நாள் பிரியங்காவின் நடவடிக்கை மோசமாவதை பார்த்த நெட்டிசன்கள் இன்னும் சில நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தால் அடுத்த ஜூலி என்ற பெயர் கிடைத்து விடும். ஆகையால் இந்த வாரமே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி பெயரை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என அட்வைஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X