முதுகில் குத்திய நிரூப்.. முதல் ரவுண்டிலேயே வெளியேற்றப்பட்ட பிரியங்கா.. சூடுபிடிக்கும் டாஸ்க்!
சென்னை: லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் நிரூப்பால் பிரியங்கா முதல் ரவுண்டிலேயே வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக நீயும் பொம்மை நானும் பொம்மை தெரியும் உண்மை என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இதில் ஒவ்வொரு ஹவுஸ்மேட்டுக்கும் அவர்களின் பெயருடன் ஒரு பொம்மை கொடுக்கப்பட்டது. போட்டியாளர்களும் பொம்மை போன்ற கெட்டப்புடன் போட்டியில் பங்கேற்றனர்.

பொம்மையுடன் ஓட வேண்டும்
ஹவுஸ்மேட்டுகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பொம்மையை கார்டன் ஏரியாவில் அமைக்கப்பட்ட ஸ்டாண்டில் வைக்க வேண்டும். பஸர் அடித்ததும் போட்டியாளர்கள் பொம்மையை தூக்கிக் கொண்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த சர்க்கஸ் கூடாரத்திற்குள் ஓட வேண்டும்.

கடைசியாக செல்பவர்
ஒவ்வொரு ஹவுஸ்மேட்டுக்காகவும் மற்றொரு ஹவுஸ்மேட் விளையாட வேண்டும். போட்டியாளர்கள் தங்களின் பெயர் கொண்ட பொம்மையை எடுத்துக்கொண்டு செல்லக்கூடாது. இதில் கடைசியாக கூடாரத்திற்குள் செல்பவரின் கையில் யாருடைய பொம்மை இருக்கிறதோ அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்.

பிரியங்காவின் பொம்மை
இதைத் தொடர்ந்து முதல் ரவுண்டில் ராஜுவின் பொம்மையை யாருமே எடுக்காததால் அவருடைய பொம்மையை அவரே எடுத்தார். இதனால் அந்த ஆட்டம் செல்லாது என்று அறிவித்த பிக்பாஸ் மீண்டும் போட்டியை நடத்தினார். அப்போது தாமரை பிரியங்காவின் பொம்மையை தூக்கிச் சென்றார்.

வெளியேற்றப்பட்ட பிரியங்கா
அப்போது அவரை நிரூப் தடுத்ததால் தாமரை கடைசியாக சென்றார். அவரது கையில் பிரியங்காவின் பொம்மை இருந்ததால் பிரியங்கா முதல் ரவுண்டிலேயே டாஸ்க்கில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் போட்டியில் இருந்து முதல் சுற்றிலேயே வெளியேறினார் பிரியங்கா.

தொடர்ந்து சண்டை
தொடர்ந்து பேசிய பிரியங்கா நிரூப் தன்னை முதுகில் குத்தி விட்டதாக தெரிவித்தார். அதேநேரம் தாமரை தனக்காகதான் விளையாடினார் என்றும் அவர் எப்படி விளையாடினார் என்று தனக்கு தெரியும் என்றும் கூறினார். கடந்த சில நாட்களாகவே பிரியங்காவுக்கும் நிரூப்புக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











