கன்ஃபெஷன் ரூம்மில் கண்ணீர் விட்ட தாமரை செல்வி.. ஆறுதல் கூறிய பிக்பாஸ்... களைக்கட்டிய நாமினேஷன்!

சென்னை: பிரியங்கா பேசிய பேச்சால் கன்ஃபெஷன் ரூம்மில் கதறி அழுதார் தாமரை செல்வி.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் நடைபெற்ற கேப்டன் டாஸ்க்கில் தாமரைக்கு கேப்டனாக தகுதியில்லை என கூறி அவரை வெளியேற்றினார் பிரியங்கா.

தொடர்ந்து டைனிங் ஏரியாவிலும் அவரை உனக்கு கேப்டனாக தகுதியில்லை என்று திருப்பி திருப்பி கூறினார். மேலும் பாவனி, இசைவாணி உடனான பிரச்சனையெல்லாம் சேர்த்து வைத்து கொளுத்திப் போட்டார்.

முகம் சுளிக்க வைத்த பிரியங்கா

முகம் சுளிக்க வைத்த பிரியங்கா

தாமரை செல்வி தனது வேலைகளை சரியாக செய்த போதும் சின்னசின்ன விஷயங்களை எல்லாம் பெரிது படுத்தி அவரை டார்கெட் செய்தார் பிரியங்கா. திரும்பி பார்த்ததையெல்லாம் குறையாக கூறிய பிரியங்கா, தேவையில்லாமல் பேசினார் முகம் சுளிக்க வைத்தார்.

கன்ஃபெஷன் ரூம்மில் கதறிய தாமரை

கன்ஃபெஷன் ரூம்மில் கதறிய தாமரை

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இந்த வார எவிக்ஷன் புராசஸிற்கான நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது. இதில் வரிசையாக போட்டியாளர்கள் தங்களுக்கு பிடிக்காத போட்டியாளர்களை நாமினேட் செய்தனர். அந்த வகையில் கன்ஃபென்ஷன் ரூம்முக்குள் சென்ற தாமரை செல்வி நாமினேஷன் செய்யாமல் கண்ணீர் விட்டார்.

பிக்பாஸிடம் கூறிய தாமரை

பிக்பாஸிடம் கூறிய தாமரை

இதனை பார்த்த பிக்பாஸ் தாமரை ஏன் இந்த கண்ணீர் என கேட்டார். அதற்கு பதில் கூறிய தாமரை செல்வி, கஷ்டமா இருக்குங்க ஐயா.. பிரியங்கா தகுதியில்லைன்னு திருப்பி திருப்பி அதையே சொல்றாங்க.. சும்மா பாக்குறதெல்லாம் குத்தம் சொல்றாங்க என்று கண்ணீர் விட்டார்.

ஆறுதல் கூறிய பிக்பாஸ்

ஆறுதல் கூறிய பிக்பாஸ்

அதனை கேட்ட பிக்பாஸ், தாமரை இது ஒரு போட்டி. இதில் ஒவ்வொரு போட்டியாளரும் ஒவ்வொரு மாதிரி விளையாடுகிறார்கள். எலலோரும் அவங்கவங்க கேம்மை விளையாடுகிறார்கள் என்று ஆறுதல் கூறினார். இதனைக் கேட்ட தாமரை செல்வி சரிங்க ஐயா என்று தன்னை தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

நாமினேஷனுக்கு தயாரா?

நாமினேஷனுக்கு தயாரா?

தொடர்ந்து பேசிய பிக்பாஸ், இப்போது நாமினேஷனுக்கு தயாரா என கேட்டார். அதற்கு தாயர் பிக்பாஸ் என்று கூறிய தாமரை செல்வி, பாவனி மற்றும் பிரியங்காவை நாமினேட் செய்தனர். கிராமத்தில் இருந்து வந்துள்ள தாமரை செல்வி. மனதில் பட்டதை பேசி விளையாடி வருகிறார். கத்தி பேசுவதுதான் தன்னுடைய குணம் என கமலுக்கு நேராகவும் கூட என்ன தோன்றுகிறதோ அதையே பேசி வருகிறார்.

தாமரையை மதிப்பதில்லை

தாமரையை மதிப்பதில்லை

ஆனால் பிக்பாஸ் வீட்டில் உள்ள சில போட்டியாளர்கள் தாமரை செல்வியிடம் மரியாதை இல்லாமலும் பார்ஷியாலிட்டியுடனும் தான் பழகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இசைவாணி இருந்தபோது அவரும் பிரியங்கா, பாவனி ஆகியோர் ரொம்பவும் தாமரையை மட்டம் தட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X