twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு நோ... எத்தனை மாடுலேஷன்? ஜூலியை நினைவுப்படுத்திய பிரியங்கா.. பர்ஃமான்ஸ் ஹெவியா இருக்கே!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் பிரியங்காவின் பர்ஃபாமன்ஸ் கொஞ்சம் ஹெவியாகவே இருந்தது.

    பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் பங்கேற்றதன் முதல் நாள் எபிசோட் நேற்று ஒளிபரப்பானது.

    பெரிதாக சண்டை சச்சரவுகள் என இன்னும் தொடங்காத நிலையில் கொஞ்சம் சுணக்கமாவே இருந்தது பிக்பாஸ் வீட்டின் முதல் நாள்.

    பிரியங்கா மட்டும் இப்படி கர்ணகொடூரமா கத்துதே அது ஏண்ணே.. புரமோவை பார்த்து கடுப்பாகும் நெட்டிசன்ஸ்!பிரியங்கா மட்டும் இப்படி கர்ணகொடூரமா கத்துதே அது ஏண்ணே.. புரமோவை பார்த்து கடுப்பாகும் நெட்டிசன்ஸ்!

    பிரியங்கா பர்ஃபாமன்ஸ்

    பிரியங்கா பர்ஃபாமன்ஸ்

    நேற்றைய புரமோக்களிலேயே விஜய் டிவி தொகுப்பாளரான பிரியங்காவின் பர்ஃபாமன்ஸ் தான் அதிகம் காட்டப்பட்டது. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த கையோடு எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் ஃபன் பண்றோம் என சக போட்டியாளர்களிடம் உறுதி கொடுத்தார் பிரியங்கா.

    ஜூலியை நினைவுப்படுத்திய பிரியங்கா

    ஜூலியை நினைவுப்படுத்திய பிரியங்கா

    நேற்றைய எபிசோடில் டீம் பிரிக்கும் போதே நாங்கல்லாம் ஒன்னானோம் பாத்ரூம் கழுவி ஃபிரண்டானோம் என முழக்கம் போட்டு ஒட்டு மொத்த கவனத்தையும் பெற்றார். அவரது அந்த செயல் ஜூலியின் ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவுப் படுத்தியது.

    பந்தா காட்டிய பிரியங்கா

    பந்தா காட்டிய பிரியங்கா

    அதனை தொடர்ந்து ராஜு டீம் பாத் ரூம் கழுவியதை விமர்சித்தார். ஏன் இடம் ஈரமாக உள்ளது என்று கேட்டு வீட்டின் கேப்டனை போல் பந்தா காட்டினார் பிரியங்கா. ஆனால் அந்த டீம்மோ பிரியங்காவுக்கு மொக்கை கொடுத்தது.

    Recommended Video

    Bigg Boss Season 5 Promo | பேய் கதை சொல்லி அலற விட்ட Raju, Thamarai Selvi
    கிளுகிளுப்பாக நோ சொல்ல வேண்டும்

    கிளுகிளுப்பாக நோ சொல்ல வேண்டும்

    அதன்பிறகு, டைனிங் டேபிளில் சக பெண் போட்டியாளர்களுடன் அமர்ந்திருந்த பிரியங்கா, நோ என்ற வார்த்தையை பல வித எக்ஸ்பிரஷன்களுடன் கூறலாம் என முன்னெடுத்தார். இதில் இமான் அண்ணாச்சியையும் சேர்த்துக் கொண்டனர். எந்த எமோஷன்ஸும் இல்லாமல் நோ சொல்ல வேண்டும், சிரித்துக் கொண்டே நோ சொல்ல வேண்டும். கோபமாக நோ சொல்ல வேண்டும், கிளுகிளுப்பாக நோ சொல்ல வேண்டும் என பல மாடுலேஷன்களில் நோ கூறினார்.

    கேப்பில் எல்லாம் கிடா வெட்டி

    கேப்பில் எல்லாம் கிடா வெட்டி

    கடைசியாக இமான் அண்ணாச்சி அழுது கொண்டே நோ சொல்லலாம் என அவர் பங்குக்கு சொல்ல அழுதுக் கொண்டே நோ என்று கூறி முடித்தனர். சமைக்கும் போதும் இட்லி உப்புமா செய்த பிரியங்கா அந்த இடத்திலும் ரைம்மிங்காக பேசி தனது இருப்பை உறுதி செய்தார். இப்படி கிடைக்கும் கேப்பில் எல்லாம் கிடா வெட்டி வருகிறார் பிரியங்கா.

    English summary
    Biggboss tamil 5: Priyanka performance looks heavy in Biggboss house. Priyanka interefering in everything at Biggboss house.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X